மரியம் சுல்தானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியம் சுல்தானா (Mariam Sultana) ஒரு பாக்கித்தானிய வானியற்பியலாளர் ஆவார்.

இவர் 2912 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் நூரிதினோவ் சலோகித்தின் நாசுரிதினோவிச் வழிகாட்டுதலில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். பாக்கித்தானில் வானியற்பியலில் இவர்தான் முதன்முதலில் முனைவர் பட்டம் ஈட்டியர்.[1] இவர் கூட்டு உருது கலை, அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழக (FUUAST) உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[2]

வாழ்க்கை[தொகு]

இவர் பாக்கித்தனிலேயே பெரிய மாநகரமாகிய கராச்சியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் 2004 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் பயன்முறை கணிதவியலில் முதுவர் பட்டம் பெற்றவர்..[3]இவர் தன் முனைவர் பட்ட ஆய்வை 2006 இல் சலோகித்தின் நாசுரிதினோவ் வழிகாட்டுதலின்கீழ் தொடங்கினார்.[3] இவ வானியற்பியலில் 2012 இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் புறப்பால்வெளி ஆய்வில் ஈடுபடுகிறார். இவர் வலயப் பால்வெளி உருவாக்கத்திலும் நிலைப்பிலும் கவனத்தைக் குவிக்கிறார்.[3] Her doctoral thesis was examined by James Binney and Ana Katrin Schenk.[4]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 2015 இல் பாக்கித்தானியக் கொக்கோ கோலா குழும முதன்மை வெற்ரி விருதை வென்றுள்ளார்.[5] இவர் பன்னாட்டு ஆய்விதழ்களில் 34 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவை 64 தடவைகளுக்கு மேல் சான்று காட்டப்பட்டுள்ளன.[6] இவர் முதல் பாக்கித்தானியப் பெண் வானியற்பியலாளர் ஆவார்.

  • கூட்டு உருது கலை, அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழக (FUUAST) உதவிப் பேராசிரியர்.[2]
  • பாக்கித்தான், கராச்சி பல்கலைக்கழகத்தின் கோள் வானியற்பியல் நிறுவன ஆராய்ச்சி இணையுறுப்பினர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "One Doctorate Too Many". Newsline (in ஆங்கிலம்).
  2. 2.0 2.1 "Department of Mathematics – FUUAST". fuuast.edu.pk.
  3. 3.0 3.1 3.2 Siegel, Ethan (3 September 2015). "Throwback Thursday: Pakistan's First Female Astrophysics Ph.D." Medium (in ஆங்கிலம்).
  4. Siegel, Ethan (3 September 2015). "Throwback Thursday: Pakistan’s First Female Astrophysics Ph.D." (in en). Medium. https://medium.com/starts-with-a-bang/throwback-thursday-pakistan-s-first-female-astrophysics-ph-d-f018c70b5770. 
  5. "Coca-Cola holds 'S&S Awards'". Business Recorder. 4 October 2015.
  6. "Mariam Sultana".
  7. "First Pakistani woman to earn PhD in astrophysics fought red tape". The Express Tribune. July 28, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_சுல்தானா&oldid=3378591" இலிருந்து மீள்விக்கப்பட்டது