உள்ளடக்கத்துக்குச் செல்

மரியம் அல்-கவாஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியம் அல்-கவாஜா
பிபிசி நேர்காணலின் போது அல்-கவாஜா
பிறப்பு26 சூன் 1987 (1987-06-26) (அகவை 38)
சிரியா
கல்விபகுரைன் பல்கலைக்கழகம், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் அமெரிக்க ஆய்வுகள்
பணிமனித உரிமை ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
பெற்றோர்அப்துல்ஹாதி அல்-கவாஜா
கதிஜா அல்மௌசவி
உறவினர்கள்சைனப் அல்-கவஜா (சகோதரி)
வலைத்தளம்
http://www.gc4hr.org/

மரியம் அப்துல்ஹாதி அல்-கவாஜா (Maryam Abdulhadi Al-Khawaja; பிறப்பு: 26 ஜூன் 1987) ஓர் பகுரைன்-டென்மார்க் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.[1] இவர் பகுரைன் மனித உரிமை ஆர்வலரும் , மனித உரிமைகளுக்கான வளைகுடா மையத்தின் முன்னாள் இணை இயக்குநருமான அப்துல் ஹாதி அல்-கவாஜாவின் மகள் ஆவார்.[2] இவர் தற்போது மனித உரிமைகளுக்கான வளைகுடா மையத்துடன் வக்காலத்து சிறப்பு ஆலோசகராக உள்ளார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். இவர் மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை மற்றும் மறைக்க இடமில்லாத குழுவில் உறுப்பினராக உள்ளார். அவசர நடவடிக்கை நிதியத்தின் குழுவில் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

அல்-கவாஜா சிரிய தாய் கதீஜா அல்மௌசவி மற்றும் பகுரைன்-டென்மார்க் மனித உரிமை ஆர்வலர் அப்துல் ஹாதி அல்-கவாஜாவுக்கு பிறந்தார். இவரது தந்தை 1980 களின் நடுப்பகுதியில் இருந்து பகுரைனில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்தார். இரண்டு வயதில் இவரது குடும்பம் டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் பெற்றது.<[3]

2009 ஆம் ஆண்டில் பகுரைன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அல்-கவாஜா அமெரிக்காவில் ஒரு வருடம் பிரௌன் பல்கலைக்கழக புல்பிரைட் உதவித்தொகைப் பெற்று படித்தார். இருப்பினும், 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவர் பகுரைனுக்குத் திரும்பியபோது, இவரது தந்தையின் மனித உரிமைகள் பணி காரணமாக மக்கள் தொடர்பு அல்லது கல்வியில் வேலை பெற முடியவில்லை. அதற்கு பதிலாக தனது தந்தையால் நிறுவப்பட்ட பகுரைன் மனித உரிமைகள் மையத்தில் சேர்ந்தார். அங்கு இவர் வெளியுறவு அலுவலகத்திற்கு தலைமை தாங்கி துணைத் தலைவராக ஆனார். மையத்தின் தலைவர் நபீல் ரஜாப், காவலில் இருந்த காலங்களில் இவர் செயல் தலைவராக பணியாற்றினார்.

22 ஜூன் 2011 அன்று, 2011-2012 பகுரைன் ஜனநாயக சார்பு எழுச்சியில் அவரது பங்கிற்காக "பயங்கரவாத அமைப்பை ஒழுங்கமைத்து நிர்வகித்த" குற்றச்சாட்டின் பேரில் அல்-கவாஜாவின் தந்தைக்கு இராணுவ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[4]

மனித உரிமைப் போராட்டம்

[தொகு]

அல்-கவாஜா இளம் வயதிலிருந்தே போராட்டங்களில் பங்கேற்பதிலும், மனித உரிமை அமைப்புகளுக்கு தன்னார்வத் தொண்டுப் பணிகளை செய்வதிலும் தீவிரமாக இருந்தார். பகுரைனுக்கு வந்து அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கை அளித்த பத்திரிகையாளர்களுக்கு இவர் ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டில், நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக்குச் சென்று, பொதுச்செயலாளரின் உதவியாளரைச் சந்தித்து, பிரதமர் தனது மனித உரிமை மீறல்கள் காரணமாக பதவி விலகக் கோரும் மனுவை ஒப்படைக்கும் குழுவின் ஒரு பகுதியாக அல்-கவாஜா இருந்தார். 2008 ஆம் ஆண்டில், பகுரைனில் மத சுதந்திரம் குறித்து ஐக்கிய அமெரிக்கப் பேரவையில் சாட்சியமளிக்க டாம் லான்டோஸ் தலைவராக இருந்த மனித உரிமைகள் ஆணையத்தால் அல்-கவாஜா அழைக்கப்பட்டார். இந்த அமர்வில் பேசிய அல்-கவாஜா உள்ளிட்ட ஆர்வலர்கள் குழுவிற்கு எதிராக ஊடகங்களில் ஒரு அவதூறு பிரச்சாரத்தை அரசாங்கம் வழிநடத்தியது.

2011 ஆம் ஆண்டில் ஆரம்பகால ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக பங்கேற்ற பிறகு, அல்-கவாஜா கல்லூரிகள் மற்றும் மாநாடுகளில் வெளிநாட்டு பேச்சு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, இவர் ஐக்கிய இராச்சிய அரசியல்வாதிகளுடன் சந்திப்புகளை நடத்தினார். மேலும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசினார்.[5]

ஏப்ரல் மாதம், அல்-கவாஜா உலக மன்றத்தில் பங்கேற்றார். அங்கு இவர் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் இலரி கிளின்டனுடன் பேச முடிந்தது..[6] பகுரைனில் ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்குமாறு இலரி கிளிண்டனை இவர் கேட்டுக்கொண்டார். மேலும் பகுரைன் அரசாங்கம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதை மேற்கோள் காட்டி, அமெரிக்கா இதனை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.[7] மே மாதம், பகுரைனில் அரசாங்க வன்முறைகள் குறித்த தனது அனுபவங்களைப் பற்றி ஒசுலோ சுதந்திர மன்றத்திடம் பேசினார்.[8][9] மே 13 அன்று, பகுரைனில் மனித உரிமைகள் குறித்த ஐக்கிய அமெரிக்கப் பேரவையால் நடத்தப்பட்ட விசாரணைக்கு இவர் சாட்சியம் அளித்தார்.

விருதுகள்

[தொகு]

நவம்பர் 2023 இல், பிபிசியின் உத்வேகமளிக்கும் 100 பெண்கள் பட்டியலில் அல்-கவாஜா பெயரிடப்பட்டார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nikoline Vestergaard (9 April 2012). "OVERBLIK: Al-Khawajas kamp for demokrati". DR. Retrieved 7 April 2016.
  2. "About Us". Gulf Center for Human Rights. Retrieved 30 March 2016.
  3. Staff writer (May 2011). "Maryam Al-Khawaja". Oslo Freedom Forum இம் மூலத்தில் இருந்து 26 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110726190240/http://www.oslofreedomforum.com/speakers/maryam_al_khawaja.html. பார்த்த நாள்: 17 July 2011. 
  4. Chulov, Martin (22 June 2011). "Bahrain rights activists jailed for life". Online Article (London: Guardian). https://www.theguardian.com/world/2011/jun/22/bahraini-activists-jailed-life. பார்த்த நாள்: 2012-02-16. 
  5. Courtney C. Radsch (28 July 2011). "Bahrain's Young Women Keep the Revolution Aloud". Women's eNews. http://www.womensenews.org/story/leadership/110727/bahrains-young-women-keep-the-revolution-aloud. பார்த்த நாள்: 7 January 2012. 
  6. "2011 Participants", U.S. - Islamic World Forum, April 2011 பரணிடப்பட்டது 2011-06-26 at the வந்தவழி இயந்திரம். Retrieved 17 July 2011.
  7. Maryam al-Khawaja speaks to Secretary Clinton at the US Islamic World Forum.U.S.:YouTube.Retrieved on 2 May 2012.
  8. "POMED Notes: “Human Rights in Bahrain”", Bahrain Centre for Human Rights, 13 May 2011. Retrieved 17 July 2011.
  9. "HEARING NOTICE: HUMAN RIGHTS IN BAHRAIN", Tom Lantos Human Rights Commission, 13 May 2011 பரணிடப்பட்டது 14 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம். Retrieved 17 July 2011.
  10. "BBC 100 Women 2023: Who is on the list this year?". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). November 23, 2023. Retrieved 2023-11-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_அல்-கவாஜா&oldid=4392374" இலிருந்து மீள்விக்கப்பட்டது