உள்ளடக்கத்துக்குச் செல்

மரினோ மோரிகவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரினோ மோரிகவா (Marino Morikawa) பெரு-சப்பானிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார். இவர் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். பெருவில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பெருநாட்டிலுள்ள சிறிய நகரமான சாங்கேயில் மரினோ பிறந்தார். பல்துறை உயிரின அரசியல் தந்திரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சப்பானின் திசுகூபா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[1] [2] [3]

தொழில்[தொகு]

தேசிய புவியியல் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையில் இடம்பெற்றபோது இவரது பணி நன்கு அறியப்பட்டது. சொந்த ஊரான பெருவின் சாங்கேயில் எல் காசுகாயோ ஏரியை மீட்டெடுப்பது குறித்த இவரது பணி குறித்த அறிக்கை அச்செய்தி அறிக்கையில் உள்ளடங்கியிருந்தது.[4] [5] [6] [7]

மரினோ மோரிகாவா நானோபிளசு 7 என்ற தனது சொந்த நிறுவனத்தை நிறுவினார். இது நீர்நிலைகளை மாசுபடுத்துவதற்கு எதிராக அர்ப்பணிக்கப்பட்டது. [2] மரினோ மோரிகாவா உலகம் முழுவதும் 30 வாழ்விடங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது, இவர் ஈக்வடார் ஆண்டிசில் உள்ள சிரா நதியின் மாசுபாட்டை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பெருவில் உள்ள டிடிகாகா, உவாகேச்சினா மற்றும் ஆலலே ஏரிகளையும் மாசுபாட்டிலிருந்து காக்கவும் முயற்சித்து வருகிறார். [2] [5] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Master's Program in Interdisciplinary Biodiplomacy". University of Tsukuba English Programs (in ஆங்கிலம்). 2014-08-19. Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  2. 2.0 2.1 2.2 "Marino Morikawa, el peruano que descontaminó una laguna en 15 días, ahora va por el Titicaca". Útero.Pe (in ஆங்கிலம்). 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24."Marino Morikawa, el peruano que descontaminó una laguna en 15 días, ahora va por el Titicaca". Útero.Pe. 2016-06-29. Retrieved 2020-10-24.
  3. "Environmentalist Marino Morikawa: A Dreamer in Action By Rosa Alicia Castillo – Dawson English Journal". www.dawsonenglishjournal.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  4. "NAT GEO Recuperación del humedal 'El cascajo' de Chancay Lima - Peru". November 5, 2013.
  5. 5.0 5.1 "Marino Morikawa, el científico peruano que usó la ciencia para limpiar un humedal". EcoInventos (in ஸ்பானிஷ்). 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  6. How This Guy Cleaned a Lake! (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-10-24
  7. 7.0 7.1 "El peruano Marino Morikawa nos cuenta cómo Latinoamérica puede cambiar su tradición de estropear la naturaleza". www.americaeconomia.com (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரினோ_மோரிகவா&oldid=3566612" இலிருந்து மீள்விக்கப்பட்டது