மராத்துப் படுகொலைகள்
2003 மராத்து படுகொலை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மராத்து கடற்கரை படுகொலை ' Part of இந்தியாவில் சமயம் தொடர்பான வன்முறைகள் | |||||||||
தேதி | மே 2, 2003 | ||||||||
அமைவிடம் | மராத்து கடற்கரை, கோழிக்கோடு மாவட்டம், கேரளம், இந்தியா 11°12′27″N 75°47′13″E / 11.20745°N 75.78706°E | ||||||||
காரணம் | இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத மோதல்கள் | ||||||||
இலக்குகள் | பழிக்குப் பழி மற்றும் சமயத் துன்புறுத்தல் | ||||||||
முறைகள் | படுகொலை | ||||||||
தரப்புகள் | |||||||||
| |||||||||
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |||||||||
|
2002-2003 மராத்துப் படுகொலைகள்' (Marad massacre), இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு அருகே அமைந்த மராத்து கடற்கரைப் பகுதி மீனவ குடிசைகளில் வாழ்ந்த இந்து சமய மீனவர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் நடத்திய படுகொலை ஆகும். இம்மோதலில் 8 இந்து மீனவர்கள் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இப்படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாகவும், இசுலாமிய அடிப்படைவாதிகள் இந்து மீனவர்களுக்கு எதிராக நேரடியாக மோதலில் ஈடுபட்டதாகவும் நீதிமன்ற மன்ற விசாரணையில் தெரியவந்தது.[1] இந்து மீனவர்களை கொல்வதற்காக அவர்களின் வீடுகள் மீது வெடி குண்டுகள் வீசினர். ஆனால் குண்டுகள் வெடிக்கவில்லை.[2] 2009ஆம் ஆண்டில் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் 8 இந்துக்களின் படுகொலைகளுக்கு காரணமான 62 முஸ்லீம்கள் குற்றவாளிகள் என 2003ஆம் ஆண்டில் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தது. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய முன்னேற்ற முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.[3][4]
2 மே 2003 அன்று மாலை மராத்து கடற்கரை பகுதியில் 8 மீனவ இந்துக்களை, முஸ்லீம் கூட்டம் ஒன்று படுகொலை செய்தது.[5][6] படுகொலையின் போது முஸ்லீம் கூட்டத்தில் இருந்த முகமது அஸ்கர் என்பவர் விபத்தில் இறந்தார்.[7] இந்துக்களை படுகொலை செய்த முஸ்லீம் கூட்டத்தினரில் ஒரு பகுதியினர் தொழுகைப் பள்ளிவாசலில் அயுதங்களுடன் மறைந்து கொண்டனர். காவல்துறையினரிடமிருந்து படுகொலை செய்த கூட்டத்தினரைக் காப்பாற்ற, பள்ளிவாசலைச் சுற்றிலும் உள்ளூர் முஸ்லீம் பெண்கள் மனிதச் சங்கிலியாக சூழ்ந்து கொண்டனர். இருப்பினும் காவல் துறையினர் மசூதியில் புகுந்து அங்கு ஒளிந்து கொண்டிருந்த கொலையாளிகளை கைது செய்தனர்.இக்கொலையாளிகளிடமிருந்து 17 வெடி குண்டுகள் மற்றும் கொலைக்கான பிற ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். காவல்துறையின் விசாரணையில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை கொல்ல திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.[8] [9]
படுகொலைக்கு பிறகு மற்றும் இந்துக்கள் வெளியேறுதல்
[தொகு]மராத்து படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பற்ற முறையில் மராத்து கடற்கரை பகுதியில் வாழ்வதை விட அங்கிருந்து வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து, இந்து மீனவர்கள் குடும்பத்துடன் மராத்து கடற்கரையை விட்டு பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.[10][11][12]
தீர்ப்பும் தண்டனையும்
[தொகு]2 மே 2003 அன்று நடைபெற்ற மராத்துப் படுகொலைகளை விசாரித்த கோழிக்கோடு மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் 27 செப்டம்பர் 2008 அன்று மராத்து படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 139 பேரில், 63 பேர் கொலைக் குற்றவாளிகள் எனத்தீர்ப்பு வழங்கியது.[13] 15 சனவரி 2009 அன்று விசாரணையின் போது இறந்த ஒருவரைத் தவிர மீதமுள்ள 62 கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.[14]
சிபிஐ விசாரணை
[தொகு]மேல்முறையீட்டின்படி,இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2016ஆம் ஆண்டில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் தலைவர்களையும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்தது.[15] நவம்பர் 2021ஆம் ஆண்டில் சிறப்பு கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரண்டு கொலைக் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.[16]
பின்னணி
[தொகு]2002 சனவரி 2002 கலவரங்கள் & இறப்புகள்
[தொகு]2002 மராத்து கடற்கரை கொலைகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மராத்து கடற்கரை கொலைகள் Part of இந்தியாவில் மத வன்முறைகள் | |||||||||
தேதி | சனவரி 4, 2002 | ||||||||
அமைவிடம் | 11°12′27″N 75°47′13″E / 11.20745°N 75.78706°E | ||||||||
காரணம் | இந்து-முஸ்லிம்களிடையே மத மோதல்கள் | ||||||||
இலக்குகள் | சமய வன்முறை | ||||||||
தரப்புகள் | |||||||||
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |||||||||
|
சனவரி 3 மற்றும் 4, 2002 அன்று, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள மராத்து கடற்கரையில், பொதுக் குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக இந்து -முஸ்லிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய தகராறாகத் தொடங்கிய மோதல்கள் வன்முறையில் முடிந்தது. இந்த மோதலில் மூன்று இந்துக்களும் இரண்டு முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைப் பார்த்தக் கொண்டிருந்த காவல் துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்கத் தவறிவிட்டனர்.[17] பின்னர் காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட 393 பேரில், 213 பேர் பாரதிய ஜனதா கட்சியினர், 86 பேர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் , 78 பேர் மார்க்சிஸ்டுகள் மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும் இருவர் இந்திய தேசிய லீக் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marad report slams Muslim League, The Indian Express, 27 September 2006.
- ↑ The Marad massacre Outlook (magazine), 6 June 2003.
- ↑ 62 get life term for Marad killings
- ↑ "62 get life term for Marad killings". The Indian Express (in ஆங்கிலம்). 2009-01-16. Retrieved 2025-04-22.
- ↑ "Marad shocks". The Hindu Frontline. 7 October 2006. http://www.frontline.in/static/html/fl2320/stories/20061020003810600.htm.
- ↑ "Kerala sits on riot report indicting Cong govt, Muslim League". The Indian Express. Archived from the original on 29 செப்டெம்பர் 2007.
- ↑ "Marad: How politicians fanned a communal riot". Rediff.com.
- ↑ Weapons seized[usurped!]
- ↑ The Marad Massacre of 2003: 17 years later, the conspiracy against Hindus by the nexus between Islamists and Leftists stands forgotten
- ↑ "Marad case: Kummanam's Request". தி இந்து. 25 April 2004. Archived from the original on 22 June 2004.
- ↑ "NDF welcomes the CBI inquiry". Ndfindia.com. 27 January 2012. Archived from the original on 28 September 2007.
- ↑ "CBI should also probe first Marad riot". தி இந்து. 3 October 2006. Archived from the original on 23 October 2006.
- ↑ "Marad riots: Five years on, 63 found guilty". Rediff.com.
- ↑ "62 get a lifer". Ibnlive.in.com. Archived from the original on 2009-01-17.
- ↑ Staff Reporter (2017-01-19). "CBI registers fresh FIR in second Marad riot case" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/CBI-registers-fresh-FIR-in-second-Marad-riot-case/article17061807.ece.
- ↑ "2003 Marad massacre: Double life sentence for two". www.onmanorama.com.
- ↑ "Marad can yet be retrieved". Indiatogether.org. July 2003.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Marad massacre". Outlook India. 3 February 2022.