மராத்தி விசுவகோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மராத்தி விசுவகோசு (Marathi Vishwakosh)(மராத்தி கலைக்களஞ்சியம்) என்பது மராத்தி மொழியில் உள்ள ஒரு இணையவழி இலவச கலைக்களஞ்சியம் ஆகும். இது இந்தியாவின் மகாராட்டிரா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது.[1][2]

வரலாறு[தொகு]

மராத்தி மொழிக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் திட்டமானது 1960-ல் அச்சுத் திட்டமாகத் தொடங்கப்பட்டு தொடங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் முதல் தலைவராக இலட்சுமண் சாத்திரி ஜோசி நியமிக்கப்பட்டார். கலைக்களஞ்சிய முதல் தொகுதி 1976-ல் வெளியிடப்பட்டது. 2010-ல் 18 தொகுதிகள் வெளியிடப்பட்டன.[3][4] மகாராட்டிர முதல்வர் மும்பையில் அறிவித்தபடி, அக்டோபர் 25, 2011 அன்று கலைக்களஞ்சியத்தின் தொகுதிகள் இணையத்தில் வெளியிடத் தொடங்கப்பட்டது.[5] தற்போது மராத்தி கலைக்களஞ்சிய பத்தொன்பது தொகுதிகளும் இணையத்தில் கிடைக்கின்றன.

மராத்தி விசுவகோசு தொகுப்பாசிரியர்[தொகு]

விசுவகோசு பத்திரிகையின் தலைமையாசிரியர்கள் பின்வருமாறு [6]

வ. எண். தொகுப்பாசிரியர் பதவிக்காலம்
1. தர்கதீர்த்த லக்ஷ்மன் சாஸ்திரி ஜோஷி நவம்பர் 19, 1960 முதல் மே 27, 1994 வரை
2. பேராசிரியர். எம்.பி ரேஜ் சூன் 4, 1994 முதல் திசம்பர் 28, 2000 வரை
3. சிறீ ஆர்ஜி ஜாதவ் சனவரி 16, 2001 முதல் பிப்ரவரி 10, 2003 வரை
4. டாக்டர் சிறீகாந்த் ஜிச்கர் சூலை 21, 2003 முதல் சூன் 2, 2004 வரை
5. விஜய வாட் திசம்பர் 9, 2005 முதல் திசம்பர் 8, 2008 வரை மற்றும் சூன் 9, 2009 முதல் சூன் 30, 2015 வரை
6. திலீப் கரம்பெல்கர் ஆகத்து 10, 2015 முதல் சனவரி 2, 2020 வரை

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. (2 December 2011). 2nd volume of Marathi encyclopedia released, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
  2. Gole, Swati Shinde (16 November 2011). Marathi encyclopaedia goes online, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
  3. Kolhatkar, M.R. Vishwakosh or Marathi Encyclopedia: An Innovative Project of the New State of Maharashtra, in Innovations in Public Administration (S.S. Gadkari & M.R. Kolhatkar, eds.) (2000)
  4. Gokhale, Madhav (14 September 2003). The Great Marathi, இந்தியன் எக்சுபிரசு (2003 report on status of the print version, with 16 volumes published at that time)
  5. (1 November 2011). Marathi Vishwakosh, Centre for Development of Advanced Computing (Government press release about online release of first volume)
  6. "पूर्व अध्यक्ष तथा प्रमुख संपादक" [Former Chairs and Chief Editors]. Marathi Vishwakosh (in Marathi). பார்க்கப்பட்ட நாள் May 8, 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மராத்தி_விசுவகோசு&oldid=3742515" இலிருந்து மீள்விக்கப்பட்டது