மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்[1]
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்
நூலாசிரியர்கோ. நம்மாழ்வார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைவிவசாயம்
வெளியீட்டாளர்வாகை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2012

மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் கோ. நம்மாழ்வார் எழுதிய வேளாண்மை நூல். இந் நூல் வாகைப் பதிப்பகத்தாரால் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நூலை பற்றி[தொகு]

உணவே மருந்து என்பது தமிழ் மரபு. ஆனால் இப்படி பாக்டீரியாவை திணித்துத் தரும் கத்தரிக்காய் எப்படி மருந்தாகும். இது போன்ற பல செய்திகளை கோ.நம்மாழ்வார் இந்த புத்தகத்தின் வாயிலாக தருகிறார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல்.

நூலில் இருந்து சில குறிப்புகள்[தொகு]

மரபணு மாற்றுப் பயிர்களின் நுழைவுக்கு இரண்டாவது பச்சைப் புரட்சி என்று பட்டமும் சூட்டப்படுகிறது. ஆனால் முதல் பச்சைப் புரட்சியின்போது அமைதியாக இருந்துவிட்ட பாரதம் இன்று பி.டி. கத்தரிக்காயை எதிர்த்து போர்க் கோலம் பூண்டுள்ளது. கம்பெனி விதைகள் திணிக்கப்பட்டால் உயிரியல் பன்மயம் அழியும். பச்சைப் புரட்சிக் காலத்தில் இப்படி நமது 30 ஆயிரம் நெல் வகைகள் அழிந்ததை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தியாவில் கத்தரி ரகங்களுக்கு பஞ்சமில்லை. 'வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்' என்று அவ்வை பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் நமது கத்தரியே.

மேற்கோள்கள்[தொகு]