மரபு வியட்நாமிய இசைக் கருவிகள்
Appearance
மரபு வியட்நாமிய இசைக் கருவிகள் (Traditional Vietnamese musical instruments) மரபு, செவ்வியல் வியட்நாமிய இசையில் பயன்படும் இசைக் கருவிகள் ஆகும். இவற்றில் பல்வேறு நரம்பு (நாண்), காற்று, தட்டு இசைக் கருவிகள் அடங்கும். இவை வியட்நாமின் பெரும்பான்மை கின் இனக்குழு மக்களாலும் சிறுபான்மை இனக்குழு மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.
நரம்பிசைக் கருவிகள்
[தொகு]பொருத்திசைக் கருவிகள்
[தொகு]- தான் பாவு (Đàn bầu)-(ஒற்றைநாண் சித்தார்: பண் வேறுபடும் என்றாலும் எப்போதும் மேலை C3 பண்ணில் இசைக்கப்படுவது
- Đàn đáy - முந்நாண் நீள்கழுத்து சரிவக உடல் யாழ்: மேலை G3 C4 F4 பண்களில் இசைக்கப்படுகிறது
- தான் நிகுயேத் (Đàn nguyệt)-இருநாண் நிலாத் துளைக்குழல்: இது நிகுயேத் சாம் அல்லது தான் கிம் அல்லது குவான் து சாம் எனவும் வழங்கும். இதற்கு நிலையான பண் ஏதும் கிடையாது. நாண்கள் 4 ஆம், 5 ஆம், 7 ஆம் இறங்குமுகப் பண்களில் அல்லது சிறுபண்களில் இசைக்கப்படுகின்றன.
- தான் சேன் (Đàn sến)-இருநாண் துளைக்குழல்:பண் வேறுபட்டுக் கொண்டிருக்கும்.
- தான் தாம் (Đàn tam) -முந்நாண் பாம்புத்தோல் போர்த்திய உடல் அமைந்த துளையில்லா குழல்: மேலை F3 C4 F4 பண்களில் இசைக்கப்படுகிறது
- தான் திரான் (Đàn tranh) - நீள்சித்தார்
- தான் தி பா (Đàn tỳ bà)- பியர்ப்பழ வடிவ நான்கு நாண் துளைக்குழல்: தான் திபா எனவும் அழைக்கப்படும். மேலை C4 F4 G4 C5 பண்களில் இசைக்கப்படுகிறது.
- தான் தோவான் (Đàn đoản) ( தான் தூ (đàn tứ) எனவும் அழைக்கப்படும்) – வட்ட அல்லது சதுர வடிவமும் தட்டை முதுகும் குறுங்கழுத்தும் உள்ள நான்கு நாண் யாழ். மேலை C3 G3 D4 A4பண்களில் இசைக்கப்படுகிறது.
தான் பாவு | தான் தாய் | தான் திரான் | தான் தி பா | தான் தூ | தான் தின் | கூங் | |
---|---|---|---|---|---|---|---|
வில் இசைக் கருவிகள்
[தொகு]- தான் காவோ (Đàn gáo) (இருநாண் ஊதல் கொட்டாங்கச்சி ஒத்திசைவியுடன்)
- தான் கோ (Đàn hồ) – குத்துநிலை இருநாண் வயலின், மர ஒத்திசைவியுடன்; கோ (hồ) சீன கு (hu) வில் இருந்து வந்த்து ஆகும்.)
- தான் நிகி (Đàn nhị) –குத்துநிலை இருநாண் வயலின்
- கிணி (K'ni) ) – ஒற்றைநான் குத்துநிலை ஊதல், வாயில் வைத்து ஊதும் ஒத்திசைவு வட்டுடன்; வியட்நாம் நடுவன் மேட்டுச்சமவெளி சாரை மக்கள் கருவி
அடிப்பிசைக் கருவிகள்
[தொகு]- தான் தாம் தாப் உலூசு (Đàn tam thập lục) (36 நாண்கள் உள்ள சுத்தியடிப்பு இசைக் கருவி)
காற்றிசைக் கருவிகள்
[தொகு]குழல்கள்
[தொகு]- சாவோ (Sáo) அல்லது சாவோ திரூசு (sáo trúc)) – மூங்கில் அல்லது வன்மரத்தாலான குறுக்குவாட்ட யாழ்
ஒபேக்கள் (Oboes)
[தொகு]- கியேன் (Kèn) - ஒபே போன்ற இரட்டைசடைநாக்கு இசைக் கருவி வகை. இது இந்தியச் செனாயை ஒத்த்து.
- கியேன் பாவு (Kèn bầu) – சுரைக்காய் வடிவ வணரி அமைந்ண்ட கூம்பு ஒபே
- கியேன் தாம் மா (Kèn đám ma) – பொன்ம மணியுள்ள கூம்பு வடிவ ஒபே; வடக்கு வியட்நாமில் இறுதிச் சடங்கில் இசைக்கப்படுகிறது
கிளாரினெட்கள் (Clarinets)
[தொகு]- பீ தோய் (Bi doi0 –மூவோங் மக்கள் அரசவையில் பயன்படுத்தும் நடுவண் கிழக்குப் பகுதியின் மிய்விசை ஒத்த இரட்டைக் கிளாரினெட்.
அசைநாக்கு ஒத்து ஊதிகள்
[தொகு]- திங் நாம் (Đing nǎm) -. மூங்கில் குழலும் சுரை வணரியும் அமைந்த அசைநாக்கு ஒத்து; மேட்டுச் சமவெளி சிறுபான்மையரால் இசைக்கப்படுகிறது.
- முபுவோத் - மூங்கில் குழலும் சுரை வணரியும் அமைந்த அசைநாக்கு ஒத்து; ; மேட்டுச் சமவெளி சிறுபான்மையரால் இசைக்கப்படுகிறது.
கொம்பிசைக் கருவிகள்
[தொகு]- பூவா (Púa) – கவாடம் இல்லாத டிரம்பெட்[சான்று தேவை]
- ஓசு (Ốc) "நத்தை" – சங்கு டிரம்பெட்[சான்று தேவை]
தட்டிசைக் கருவிகள்
[தொகு]முரசுகள்
[தொகு]- திரோங் (Trống) – கொம்பால் அறைந்து இசைக்கும் முரசு
- திரோங் சாய் (Trống cái) – வெண்கல முரசு
- திரோங் சாவு (Trống chầu)அல்லது திரோங் தே (trống đế) –த்ப்பித் துவாங்கில் பயன்படும் மிகப் பெரிய முரசுகளின் தொகுதி.
- திரோங் சோம் (Trống cơm) – நெல்தட்டு முரசு (rice drum)
- திரோங் தோங் (அல்லது திரோங் தோங் தோங் சோன்) –பண்டைய தோங் சோன் பண்பாடு போற்ரிய வெண்கல முரசு
- நிருவாசு துவாகு (Nruas tuag) அல்லது யூ சுவா (Ư chua) – குமோங் இனக்குழு மக்கள் இறுதிச் சடங்கில் இசைக்கும் முரசு
ஒத்திசைவுத் தட்டிசைக் கருவிகள்
[தொகு]- திரூங் (T'rưng) – மூங்கில் பல்லியம் (சைலோபோன்)
இசைவிலாத தட்டிசைக் கருவிகள்
[தொகு]- சேன் தியேன் (Sênh tiền) - நாணயந்தட்டி
- சோங் உலோவான் (Song loan) - மரப்பெட்டி
பிற இசைக் கருவிகள்
[தொகு]- தான் மோய் (Đàn môi) - தாடை வில்யாழ்
- கிலோங் பூத் (Klông pút) – மூங்கில் குழல்களின் தொகுதி; முனைகளில் கையால் தட்டி இசைக்கப்படுகிறது
- தான் திரே (Đàn tre) "மூங்கில் கருவி" – தான் தின் போன்ற வியட்நாமியக் கூட்டிசைக் கருவி. இது நிகுயேன் மின் தாமால் உருவக்கப்பட்டது. இவர் 1982 இல் வியட்நாமில் இருந்து தப்பிச் சென்று ஆத்திரேலியாவில் வாழத் தொடங்கினார்.