உள்ளடக்கத்துக்குச் செல்

மரபணுத்தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பொதுவான மரபணுத்தொகுப்பு

மரபியலில்மரபணுத்தொகுப்பு என்பது ஒரு செயற்படும் தாயனை(DNA) கூட்டு, இதில் கொத்தான மரபணுக்கள் ஒரு தனி ஊக்குவிப்பான் கீழ் இயங்குங்குகின்றன.[1] இதிலிருக்கும் மரபணுக்கள் அனைத்துமாக படியெடுத்து தூதாறனை(mRNA) இழைகளாக மாறியபின், ஒன்று, முழுவதுமாக குழியவுருவில் மரபுத்தகவல் பெயர்வில் ஈடுபடும் அல்லது இயைத்தல் வழியே ஒற்றைப்புரதமாக்கம்  தூதாறனைகளை ஆக்கி, தனித்தனியே மறுபுத்தகவல் பெயர்வில் ஈடுபடும். இதன் விளைவாக அணுத்தொகுப்பில் இருக்கும் மரபணுக்கள் ஒன்றாக வெளிப்படும் அல்லது வெளியப்படவே ஆகாது. வேறுபல மரபணுக்கள் ஒன்றாக படியெடுத்து ஓர் மரபணுத்தொகுப்பு வரையறுக்கின்றனர்.[2]

முன்னதாக, இத்தொகுப்புகள் நிலைக்கருவிலிகளில் மட்டுமே இருந்ததாக எண்ணப்பட்டிருந்தது. அதன்பின் 1990களில்[3][4] முதற்தொகுப்பு மெய்க்கருவுயிரியில் கண்டறியப்பட்டது. அஃது பல ஆதாரங்கள் இவை முன்கருதப்பட்டிருந்தது போலல்லாது மிகவும் பொதுவாக இருந்துள்ளதாக சுட்டுகின்றனர்.[5] பொதுவாக, நிலைக்கருவிலி மரபணுத்தொகுப்புகள் பன்புரதமாக்கம் தூதாறனைகளை வெளிக்கொள்கின்றன, மெய்க்கருவுயிரி மரபணுத்தொகுப்புகள் ஒற்றைப்புரதமாக்கம்  தூதாறனைகளை வெளிக்கொள்கின்றன.

மரபணுத்தொகுப்புகள் நுண்ணுயிர்த்தின்னிகளிலும் காணப்படுகின்றன.[6][7] சான்ற, டீ7 தின்னிகளில் இரண்டு மரபணுத்தொகுப்புகள் உள்ளன. முதலொன்று, பல்வேறு விளைப்பொருட்களை ஈட்டும். மற்றொன்று, சிதைவு மரபணுக்களை கொண்டுள்ளது.[8]

வரலாறு

[தொகு]

மரபணுத்தொகுப்பு எனுஞ்சொல் ஆங்கிலச்சொல் ஒபேரோன் என்பதின் மொழிபெயர்வாகும். இச்சொல் 1960யில்[9] பிரஞ்சு அறிவியல் கலைக்கழகத்தின் தொடர் நடவடிக்கைகளின் குறுந்தாளில் முதன்முறையாக முன்மொழியப்பெற்றது. இத்தாளிலிருந்து, இதுவரை கூறிய, மரபணுத்தொகுப்பு பொதுக் கோட்பாடு வளர்க்கப்பட்டது. இக்கோட்பாடு, அனைத்து நிலைகளிலும், தொகுப்பின்னுள்ளிருக்கும் மரபணுக்கள், முதல் மரபணுக்கு முன்னிருக்கும் தனி ஒற்றை அடக்குவான் கொண்டு எதிர்மறையாக கட்டுப்படுத்தும் சுட்டுகிறது. பின்னர், மரபணுக்கள் நேர்மறையாகவும் சீராகயிக்கப்படும் எனவும், மேலும் படியெடுக்கம் துவக்கத்தைப் பின்பற்றும் படிகளிலும் கட்டுப்படுத்தப்படுகின்றன, என கண்டறியப்பட்டது. ஆகையால், இதற்கு ஒரு பொது ஒழுங்கு நுட்பமுறைகுள் ஒடுக்கமுடியாது, ஏனெனில் வெவ்வேறு மரபணுத்தொகுப்புகள் வெவ்வேறு ஒழுங்கு நுட்பமுறைகள் கொண்டுள்ளன. தற்போது, மரபணுத்தொகுப்பு ஒரு மரபணுக்கொத்தாகவே வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த கருத்துப்படிவத்தின் வளர்ச்சி, மூலக்கூறு வரலாற்றில் ஒரு மறுக்கமுடியாத நிகழ்வாகவுள்ளது.  முதன் மரபணுத்தொகுப்பாக, ஈ கோலையின் இலாக் மரபணுத்தொகுப்பு விவரிக்கப்பட்டது. 1965யில், பிரான்காய்ஸ் ஜேக்கப், ஆண்ட்ரே மைக்கேல் வாப் மற்றும் ஜகியூஸ் மோனோட் ஆகிய மூவரும், மரபணுத்தொகுப்பிலும் நுண்நச்சுயிரி ஒன்றுசேர்க்கையிலும் தங்களது கண்டுபிடுப்புகளுக்காக நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

கண்ணோட்டம்

[தொகு]

மரபணுத்தொகுப்புகள் முதன்மையாக நிலைக்கருவிலியிலும், சில மெய்கருவுயிரியிலும் எர்படுகின்றன. ஒரு மரபணுத்தொகுப்பு பல்வேறு கட்டமைப்பு மரபணுக்கள் ஒரு பொது உக்குவிப்பான் கீழாக, பொது இயக்குவான் கொண்டு உருவகிக்கபட்டுள்ளது.

படியெடுத்தலின் ஒரு அலகு

[தொகு]

ஒரு மரபணுத்தொகுப்பில் ஒன்றல்லது பல கட்டமைப்பு மரப்பணுக்கள் கொண்டிருக்கும், அஃது பன்புரதமாக்கம் தூதாறனாக படியெடுக்கபடுகிறது.

பொது அமைப்பு

[தொகு]
1 : தூதாறனை பாலிமரேஸ், 2 : அடக்குமுறை/அடக்குவான், 3 : ஊக்குவிப்பான், 4 : இயக்குவான், 5 : இலாக்டோஸ், 6 : இலாக் இசட், 7 : இலாக் ஒய், 8 : இலாக் ஸி. மேலே : அடிப்படையில், மரபணு அணைக்கப்பட்டுள்ளது. அடக்குவானைத் தடுக்க இலாக்டோசு இல்லை, எனவே அடக்குமுறை, இயக்குவானுடன் பிணைக்கிறது, இது ஆறனை பாலிமரேஸை ஊக்குவானுடன் பிணைப்பதில் இருந்து இலாக்டேசு தயாரிப்பதைத் தடுக்கிறது. கீழே : மரபணு இயக்கப்பட்டது. அடக்குவானை இலாக்டொசு தடுக்கிறது, இதனால் ஆறனை பாலிமெரேசு ஊக்குவிப்பானுடன் பிணைந்து, மரபணுக்களை வெளிப்படுத்துகிறது. ஈற்றில், இலாக்டெசு நொதி இலாக்டொசு சக்கரையை செரிக்கும், அடக்குவானுடன் பிணைய ஏதும் இல்லாது போகும்வரை. அடக்குவான் இயக்குவானுடன் ஒன்றிணைந்து, இலாக்டேசு உற்பத்தியை நிறுத்துகிறது.
  1. Sadava, David E.; Hillis, David M.; Heller, H. Craig; Berenbaum, May (2009). Life: The Science of Biology (9th ed.). Macmillan. p. 349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4292-1962-4. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
  2. Lodish, Harvey; Zipursky, Lawrence; Matsudaira, Paul; Baltimore, David; Darnel, James (2000). "Chapter 9: Molecular Definition of a Gene". Molecular Cell Biology. W. H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-3136-8. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
  3. "Operons in C. elegans: polycistronic mRNA precursors are processed by trans-splicing of SL2 to downstream coding regions". Cell 73 (3): 521–32. May 1993. doi:10.1016/0092-8674(93)90139-H. பப்மெட்:8098272. 
  4. "The Adh-related gene of Drosophila melanogaster is expressed as a functional dicistronic messenger RNA: multigenic transcription in higher organisms". The EMBO Journal 16 (8): 2023–31. April 1997. doi:10.1093/emboj/16.8.2023. பப்மெட்:9155028. 
  5. "Operons in eukaryotes". Briefings in Functional Genomics & Proteomics 3 (3): 199–211. November 2004. doi:10.1093/bfgp/3.3.199. பப்மெட்:15642184. 
  6. "Definition of Operon". Medical Dictionary. MedicineNet.com. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012.
  7. "Displacements of prohead protease genes in the late operons of double-stranded-DNA bacteriophages". Journal of Bacteriology 186 (13): 4369–75. July 2004. doi:10.1128/JB.186.13.4369-4375.2004. பப்மெட்:15205439. 
  8. "Bacteriophage Use Operons". Prokaryotic Gene Control. Dartmouth College. Archived from the original on 28 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "[Operon: a group of genes with the expression coordinated by an operator"] (in French). Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences 250 (6): 1727–9. February 1960. பப்மெட்:14406329. http://www.weizmann.ac.il/complex/tlusty/courses/landmark/JacobMonod1960.pdf. பார்த்த நாள்: 2019-12-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணுத்தொகுப்பு&oldid=3739224" இலிருந்து மீள்விக்கப்பட்டது