மரத்தைக் கொல்லும் மரம்
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : ஃபைக்கஸ் ஆரியா Picus aurea
குடும்பம் : மோரேசியீ Moraceae
இதரப் பெயர்[தொகு]
- 'நசுக்கிகொல்லும் அத்தி' (Strangler Fig)
மரத்தின் அமைவு[தொகு]
இம்மரம் 60 அடி உயரம் வளரக்கூடியது. இது ஒரு தொற்று மரமாகும். முதலில் பறவைகள் இதன் பழத்தை சாப்பிட்டு வேறு மரத்தின் கிளைகளில் இதன் எச்சம் விழுகிறது. நல்ல சூழ்நிலை கிடைக்கும்போது விதை முளைத்து வேர் விடுகிறது. வேர் மிக நீண்டு வளர்கிறது. இதனுடைய வேர் மிக நீளமானது. இது மரத்தைச் சுற்றி தரையை அடைகிறது. தரையிலிருந்து மிக அதிகப்படியான நீரை மேலும் மேலும் உறிஞ்சி வேகமாக வளர்கிறது. மேலும் பல வேர்கள் மரத்தை சுற்றிக் கொண்டு தரையை அடைகிறது. மரம் வளர வளர இதன் வேர் கழுத்தை நெக்குவது போல் நெருக்குகிறது. இந்த அத்திமரம் வேகமாக வளர்வதால் நிலத்தில் உள்ள நீரை உறிவதாலும், சூரிய ஒளி, காற்று ஆகியவை பற்றாக்குறையாலும் இது தொற்றி வளர்ந்த மரம் சாகடிக்கப்படுகிறது. மேலும், மேலும் அதிகப்படியான வேர் வளர்ந்து இம்மரம் பெரிதாகிறது. அத்தி சாதியில் 600 இன மரங்கள் உள்ளன.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001