மரண முகமூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது எகிப்திய இராச்சிய பார்வோன் துட்டன்காமன் முகமூடி
துட்டன்காமன் தஙக முகமூடியின் பின்பக்கம்

மரண முகமூடி (death mask) ஒரு நபரின் மரணத்திற்கு பிறகு முகத்தை மட்டும் மெழுகு அல்லது சுண்ணாம்பு மாவு அல்லது தங்க வார்ப்பில் செய்யப்படும் ஒரு முகமூடி ஆகும். பொதுவாக பண்டைய எகிப்திய பார்வோன்களின் மரணத்திற்குப் பின் நடைபெறும் இறுதிச் சடங்குகின் போது மம்மி உடலை பிரமிடு அல்லது பிணமனைக் கோயில்களில் உள்ள சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் போது, அவரது முகத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட முகமூடியை அணிவிப்பது வழக்கம். உலகில் மிகவும் புகழ்பெற்ற தங்கத்தால் ஆன மரண முகமூடி, 18-ஆம் வம்ச பார்வோன் துட்டன்காமன் (கிமு 1341 – கிமு 1323) உடையதாகும்.[1]15-ஆம் நூற்றாண்டு முதல் 19 நூற்றாண்டு வரை புகழ்பெற்ற ஐரோப்பியர்கள் இறக்கும் போது, அவர்களது நினைவாக மரண முகமூடி செய்வது வழக்கம். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மரண முகமூடி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரண_முகமூடி&oldid=3716884" இலிருந்து மீள்விக்கப்பட்டது