மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty) என்பது மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பு ஆகும். மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும்.

மரண தண்டனைக்கு எதிராக பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், பன்னாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்திய க்கூடுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது.

2002 ஆம் ஆண்டு மே 13 இல் ரோம் நகரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் நாளை உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளாக முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சூலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன[1].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The members of the Coalition at www.worlcoalition.org". 2008-11-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]