மரக்கறித் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரக்கறித் தோட்டம் அல்லது காய்கறித் தோட்டம் என்பது மரக்கறிச் செடிகளை வளர்க்கும் தோட்டம் ஆகும். மரக்கறித் தோட்டங்கள் சிறிய வீட்டுத் தோட்டங்களாகவும், பெரிய தோட்டங்களாகவும் இருக்கலாம். வெங்காயம், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டிக்காய் என பல வகை மரக்கறிகள், கீரைகள், கிழங்குகள், மூலிகைகள், சுவைப்பொருட்கள் மரக்கறித் தோட்டத்தில் பயரிடப்படுவதுண்டு. குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் பெரும்பாலான விவசாயிகள் மரக்கறித் தோட்டங்களும் வைத்திருப்ப்பார்கள்.

ஈழப் போரும் மரக்கறித்தோட்டமும்[தொகு]

ஈழப்போரின் காரணமாக ஈழத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதைச் சரிசெய்ய அனைத்து வீடுகளிலும் தற்சார்புக்காவது மரக்கறித் தோட்டம் வைப்பது ஊக்குவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கறித்_தோட்டம்&oldid=3454065" இருந்து மீள்விக்கப்பட்டது