மய்யூர் கிரோத்ரா
மய்யூர் கிரோத்ரா Mayyur Girotra | |
|---|---|
| பிறப்பு | தில்லி |
| படித்த கல்வி நிறுவனங்கள் | தேம்சு பள்ளத்தாக்கு பல்கலைக்கழகம், மேற்கு இலண்டன் |
| பணி | ஆடை வடிவமைப்பாளர் |
| அறியப்படுவது | இந்திய அலங்கார நிபுணர் |
| வலைத்தளம் | |
| mayyurgirotra | |
மய்யூர் கிரோத்ரா (Mayyur Girotra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆடை வடிவமைப்பாளரும் உடையலங்கார நிபுணரும் ஆவார். இவர் தொழிற்ச் சூழலுக்கு ஏற்ப தில்லியிலும் நியூயார்க்யிலும் வசிக்கிறார். மேலும் இவரது வடிவமைப்பிலான திருமணம், பண்டிகை உடைகள் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.[1] 2009 ஆம் ஆண்டில் மய்யூர் கிரோத்ரா என்ற பெயரில் தனது அடையாள ஆடையை அறிமுகப்படுத்தினார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]மய்யூர் தில்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தேம்சு பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவரது தாயார் பெண்களின் அழகு சாதனக் கடை ஒன்றை வைத்திருந்தார் தனது படைப்புகளுக்காக கைவினைஞர்களுடன் பணிபுரிந்தார். மய்யூர் அவரது பணியைக் கவனித்து, இளம் வயதிலிருந்தே ஓர் ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.[3] இருப்பினும், இவர் வணிகம் அல்லது நிதித் துறையில் ஒரு தொழிலைத் தொடர வேண்டும் என்று இவரது பெற்றோர் விரும்பினர்.[4]
தொழில்
[தொகு]மய்யூர் தனது ஆடை வடிவமைப்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கு முன்பு 10 ஆண்டுகள் துபாயில் செல்வ மேலாண்மை மற்றும் முதலீட்டு வங்கியில் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டில், தில்லியில் இரண்டு தையல் இயந்திரங்கள் மற்றும் ஒரு நிபுணர் மூலம் தனது சொந்த ஆடை வடிவமைப்பு இல்லத்தைத் தொடங்கினார்.[5][1] இந்த இல்லம் இரண்டு துணை ஆடை வடிவமைப்புகளை கொண்டிருந்தது. [6]
ஆரம்பத்தில் தனது தாய், அத்தைகள் மற்றும் அவர்களின் தொடர்புகளின் உதவியுடன் குறைந்த எண்ணிக்கையிலான, மிக அவசியமான, எளிதில் ஒன்றுடன் ஒன்று பொருத்தி அணியக்கூடிய சேகரிப்புகள் மற்றும் தனியார் காட்சிப் பொருட்களுடன் தொடங்கினார். மய்யூர் முதலில் புது தில்லி, பின்னர் துபாய் மற்றும் 2014 ஆம் ஆண்டில் மும்பையில் கடையைத் திறந்தார்.[2][7][8] இந்த அடையாள ஆடை வடிவமைப்பு தனது செயல்பாடுகளை நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் சான் பிரான்சிசுக்கோ உள்ள கடைகளுடன் அமெரிக்காவிற்கு விரிவுபடுத்தியது.[1][9]
இவரது ஆடைகளை தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களான சாரா அலி கான், சிறீதேவி, தீபிகா படுகோன், இயாக்குலின் பெர்னாண்டசு, சில்பா செட்டி, ஆலியா பட், சோனம் கபூர், விராட் கோலி, பாட்சா போன்றவர்கள் அணிந்துள்ளனர்.[10][11][12]
2024 ஆம் ஆண்டில், சாரா அலி கான் ஒரு சோளி, ஐந்து மேம்பட்ட சரிகைப் பூ வேலை செய்த பட்டுத் துணி புடவைகளால் செய்யப்பட்ட லெகெங்கா மற்றும் திசு பட்டு துப்பட்டா ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் ஆடையை அணிந்திருந்தார்.[13] லெகெங்காவை மய்யூர் வடிவமைத்தார் மற்றும் 50 முதல் 60 ஆண்டுகள் பழமையான விண்டேச்சு பூ அலங்காரப் புடவைகளைப் பயன்படுத்தினார்.[14]
ஆடை அலங்கார நிகழ்ச்சிகள்
[தொகு]மய்யூர் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பல ஆடை அலங்கார காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றார். இதில் லக்மே ஆடை அலங்கார வாரம், சம்மர் ரிசார்ட் 2014 மற்றும் துபாய் ஆடை அலங்கார வாரம் ஆகிய நிகழ்வுகளில் தோன்றினார். [15] 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்க பிரெஞ்சு ஐரோப்பிய இந்திய ஆடை அலங்கார வாரத்தில், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்கு இந்திய வடிவமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்கான இடம் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் ஆகும், அங்கு மய்யூர் தனது சேகரிப்பான செய்சால்மரை காட்சிப்படுத்தினார். தெற்காசிய நியூயார்க் ஆடை அலங்கார வாரம் தொடக்க விழாவில் இவர் தனது தொகுப்பான இயமானியையும் வழங்கினார்.[16][17]
2023 நியூயார்க் நிகழ்வை திறந்த முதல் தென்னிந்திய வடிவமைப்பாளர் மய்யூர் ஆவார், அங்கு இவர் தனது ஆடம்பர ஆயத்த ஆடை சேகரிப்பான ஏஐகேஒய்ஏ வடிவத்தை கூகிள் மற்றும் இண்டசு கூகிள் வலையமைப்பில் தொடங்கினார்.[18][19][20] இவ்வடிவமைப்பு மேற்கத்திய நிழற்படங்களை இந்திய பூத்தையல் ரி மற்றும் நுட்பங்களுடன் இணைக்கிறது, ஒற்றுமையை குறித்தது. [21] மய்யூர் 2024 நியூயார்க் நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு இவர் ரைட் டு பிரைடு தொகுப்பை நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் மையத்தில் காட்சிப்படுத்தினார்.[22][23][24][25]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Shah, Surbhi (2024-02-22). "'Style was far more authentic pre-social media': Designer Mayyur Girotra on style, fashion, social media and more". Indulgexpress (in ஆங்கிலம்). Retrieved 2024-05-08.
- 1 2 "Mayyur Girotra Couture comes to Dubai". gulfnews.com (in ஆங்கிலம்). 2015-09-24.
- ↑ "Fashion designer Mayyur Girotra's home in Gurgaon is a quirky blend of art and textiles". Architectural Digest India (in Indian English). 2023-12-15. Retrieved 2024-05-09.
- ↑ "In Mayyur Girotra, Trends Get Redefined!". Daily News and Analysis (in ஆங்கிலம்). 4 April 2024. Retrieved 2024-05-08.
- ↑ Shahani, Shradha (2024-06-01). "'I didn't want to just be a designer. I wanted my craft to communicate with the LGBTQIA+ community'". Condé Nast Traveller India (in Indian English). Retrieved 2024-05-31.
- ↑ "FASHION COLUMN BY MEHER CASTELINO". www.explosivefashion.in (in ஆங்கிலம்). Archived from the original on 2023-06-07.
- ↑ "Mayyur Girotra launches his flagship store in Dubai". 2015-09-23. https://timesofindia.indiatimes.com/entertainment/events/others/mayyur-girotra-launches-his-flagship-store-in-dubai/articleshow/49059641.cms.
- ↑ "Designer Mayyur Girotra makes his Mumbai foray". 2014-06-19. https://economictimes.indiatimes.com/magazines/panache/designer-mayyur-girotra-makes-his-mumbai-foray/articleshow/36816269.cms.
- ↑ "Designer Mayyur Girotra to showcase at first-ever South Asian New York Fashion Week". 2022-09-05. https://timesofindia.indiatimes.com/life-style/fashion/designers/designer-mayyur-girotra-to-showcase-at-first-ever-south-asian-new-york-fashion-week/articleshow/93974843.cms.
- ↑ "Tabu in town for Mayyur Girotra store". Gulf News.
- ↑ Assolmull, Sujata. "Kalki Koechlin turns heads in Mayyur Girotra designs". Khaleej Times (in ஆங்கிலம்).
- ↑ "Sunny Leone, Karisma Kapoor spotted at Mayyur Girotra's store opening". Firstpost (in ஆங்கிலம்). 2014-04-19.
- ↑ Basu, Aalokitaa. "Sara Ali Khan's heirloom lehenga made from vintage brocade sarees reminds of Priyanka Chopra's reworked Banarasi gown". Hindustan Times.
- ↑ Pallavi, Krishna Priya. "Sara Ali Khan's lehenga made with 60-year-old brocade sarees will inspire you to revive your mom's drapes. Pics". Hindustan Times.
- ↑ "FASHION COLUMN BY MEHER CASTELINO". www.explosivefashion.in (in ஆங்கிலம்). Archived from the original on 2023-06-07.
- ↑ Asian, Urban (2022-09-12). "Mayyur Girotra headlines first ever South Asian New York Fashion Week!". Urban Asian (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-08-29.
- ↑ "Mayyur Girotra On Taking The Centre Stage At The First Ever South Asian New York Fashion Week - Elle India". Elle (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-16.
- ↑ "Mayyur Girotra makes history as first South Asian designer to open New York Pride" (in en-IN). 2023-06-01. https://www.thehindu.com/life-and-style/fashion/mayyur-girotra-makes-history-as-first-south-asian-designer-to-open-new-york-pride/article66888317.ece.
- ↑ "Designer Mayyur Girotra kickstarts New York Pride". 2023-06-03. https://timesofindia.indiatimes.com/life-style/fashion/designers/designer-mayyur-girotra-kickstarts-new-york-pride/articleshow/100726353.cms?from=mdr.
- ↑ "Mayyur Girotra on launching his prêt collection at New York Pride 2023". Lifestyle Asia India (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-06-01.
- ↑ Mehrotra, Reya. "Couturier Mayyur Girotra collaborates with Google for pride month". The Week (in ஆங்கிலம்).
- ↑ "Rainbow is in fashion". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-16. Retrieved 2024-06-22.
- ↑ "A fusion of fashion and inclusivity". 2024-05-16. https://timesofindia.indiatimes.com/life-style/fashion/buzz/fashion-designer-mayyur-girotras-ride-to-pride-collection-a-fusion-of-fashion-and-inclusivity/articleshow/110177678.cms.
- ↑ "Mayyur Girotra's NYC Fashion Show To Have 34 LGBTQA+ Members Embody The Spirit of Pride". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-22.
- ↑ ""Maximalism In My Designs Is To Celebrate Individuality & Make A Statement": Mayyur Girotra". Outlook Luxe (in ஆங்கிலம்). Retrieved 2024-06-22.