மயூரி காயத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயூரி காயத்திரி
2018இல் காயத்திரி
பிறப்பு11 சூலை 1992 (1992-07-11) (அகவை 31)
ஹூப்ளி, கருநாடகம், இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்மயூரி தற்போது வரை

மயூரி காயத்திரி (Mayuri Kyatari) (பிறப்பு: ஜூலை 11, 1992) ஒரு இந்தியத் திரைப்பட நடிகையும், வடிவழகியுமாவார். மயூரி, தனது திரை வாழ்க்கையை அஸ்வினி நட்சத்திரம் என்ற கன்னடத் நாடகத் தொடர் மூலம் தொடங்கினார். [1] இது இவரை பிரபலமாக்கியது. கன்னடத் திரைப்படங்களான கிருஷ்ணா லீலா, இஷ்டகாமியா,[2] நடராஜா சர்வீஸ், ருஸ்தம் ஆகிய படங்களிலும் தோன்ற ஆரம்பித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மயூரி, கீதா மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு மகளாக கர்நாடகாவின் ஹூப்ளியில் பிறந்து வளர்ந்தார். [3] ஹூப்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்தப் பின்னர், ஹூப்ளி, ஆக்ஸ்போர்டு கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் தனது தொழில் வாழ்க்கையில் நான்கு ஆண்டுகள் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தார். கன்னட நாடகத் தொடரான அஸ்வினி நடசத்திரத்தில் இவர் முதன்முதலில் தோன்றினார். அதில் இவர் ஒரு நடிகரின் மனைவியாக 'அஸ்வினி' என்ற வேடத்தில் நடித்தார்.[4]

2015ஆம் ஆண்டில் கன்னட திரைத்துறையில் நுழைந்தார். கன்னடப் படமான கிருஷ்ணா லீலாவில் இவர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இது, நாகத்திஹள்ளி சந்திரசேகரின் அடுத்த படமான இஷ்டகாமியா படத்தில் நடிகர் விஜய் சூர்யாவுடன் நடிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. [5] காவ்யா செட்டி, புனீத் ராச்குமார் இணைந்து நடித்திருந்த நடராஜா சர்வீஸ் என்ற திரைப்படத்தில் சரனுடன் இணைந்தும் பணியாற்றியுள்ளார். [6]

சொந்த வாழ்க்கை[தொகு]

மயூரி, தனது நீண்டகால காதலரான அருணை 2020 ஜூன் 12 அன்று பெங்களூர் சிறீ திருமலகிரி சிறீ இலட்சுமி வெங்கடேசுவர சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டார். [7]

விருதுகள்[தொகு]

"கிருஷ்ணா லீலா" படத்துக்காக சிறந்த கன்னடநடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "COLORS KANNADA ASHWINI NAKSHATRA - ASHWINI NAKSHATRA EPISODE - ASHWINI NAKSHATRA". colorskannada.com. Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  2. "Ready for the litmus test". The Hindu. 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.
  3. "Sharan and Mayuri are from the same area in Hubballi". The Times of India. 24 January 2017. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.
  4. "COLORS KANNADA ASHWINI NAKSHATRA - ASHWINI NAKSHATRA EPISODE - ASHWINI NAKSHATRA". colorskannada.com. Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  5. "ಎರಡು ವರ್ಷದ ನಂತ್ರ ಮತ್ತೆ ಬಂದ ನಾಗತಿಹಳ್ಳಿ ಚಂದ್ರಶೇಖರ್". kannada.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  6. "Mayuri to romance Sharan". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  7. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/mayuri-kyatari-gets-married-in-an-intimate-ceremony/articleshow/76339118.cms#:~:text=They%20got%20married%20at%20an,married%2012%2F06%2F2020.
  8. "What is the real-life Krishna Leela story?". The Times of India. 20 March 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூரி_காயத்திரி&oldid=3669183" இலிருந்து மீள்விக்கப்பட்டது