மயில் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயில் விரிகுடா (Peacock Bay) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது.[1] கடக்வாசுலா அணை அமைந்துள்ள ஏரியின் வடகிழக்குப் பகுதியில் ஒரு பகுதியாக மயில் விரிகுடா அமைந்துள்ளது. புனேவின் தேசிய பாதுகாப்பு அகாதமிக்கு இப்பகுதி சொந்தமானதாகும். அதிக எண்ணிக்கையிலான மயில்கள் இருப்பதால் மயில் விரிகுடா என்ற பெயரில் ஏரி அழைக்கப்படுகிறது. மான், சிங்கவால் சோலைமந்திகள் மற்றும் புனுகுப் பூனைகள் போன்ற விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன. 501 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் 40 முதல் 120 அடி வரை ஆழம் கொண்டு ஏரி பரந்து விரிந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு தேசிய உள்நாட்டு சாம்பியன் பட்டப் போட்டிகள், நீச்சல் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளை நடைபெறுகின்றன. புனேவில் நீர் விளையாட்டுகளுக்கான ஒரு சிறந்த இடமாக மயில் விரிகுடா கருதப்படுகிறது. விரிகுடா புனேவிலிருந்து 12 கி.மீ தூரத்தில் முத்தா நதியில் அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Peacock Bay Pune Timings, Entry Fee, Ticket Cost Price; Peacock Bay Pune Opening & Closing Time, Holidays & Phone Number - Pune Tourism 2021". punetourism.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  2. http://nda.nic.in/peacock-bay.html

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_விரிகுடா&oldid=3167153" இலிருந்து மீள்விக்கப்பட்டது