மயிலை (எழுத்துரு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயிலை எழுத்துரு தமிழ் எழுத்துக்களை இணையத்திலும் மின் ஆவணங்களிலும் தோன்றச்செய்வதற்கென உருவாக்கப்பட்ட ஆரம்பகால எழுத்துருக்களுள் ஒன்றாகும்.

இது முனைவர் கே. கல்யாணசுந்தரம் அவர்களால் 1993ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்துரு 7 பிட் அடிப்படையில் அமைந்த ஒற்றைமொழி எழுத்துருவாகும். 127 இடங்களில் அத்தனை தமிழ் எழுத்துக்களையும் பயன்படுத்தக்கூடியவாறு இவ்வெழுத்துரு வடிவமைக்கப்பட்டிருந்தது.


இவ்வெழுத்துரு மைக்ரோசொஃப்ட் இன்டோஸ் 3.x, 95, NT ஆகியவற்றுக்கெனவும் மாக்கின்டோஷ் இயங்குதளத்திற்கெனவும் தனித்தனியான பதிப்புக்களாக தரவிறக்கத்துக்கு வெளியிடப்பட்டது. பிற்பட்ட காலங்களில் பிட்மப் (Bitmap) எழுத்துக்களாக யுனிக்ஸ் இயங்குதளங்களுக்கெனவும் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட, இலாப நோக்கற்ற பயன்பாடுகளுக்கு இலவசமாக இவ்வெழுத்துருவினைத் தரவிறக்கிப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எழுத்துரு வடிவம்[தொகு]

மயிலை எழுத்துருவின் வடிவத்தைக்காட்டும் உரைப்பகுதியின் படம் இதுவாகும்.

Tamil89.gif


விசைப்பலகைத் தளக்கோலம்[தொகு]

மயிலை எழுத்துரு ஆங்கில ஒலியியல் முறையில் தமிழைத் தட்டெழுதத்தக்க வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மயிலை ஒலியியல் வடிவத்தைக் கீழ்வரும் படம் விளக்குகிறது.

Mylai phonetic layout.png

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலை_(எழுத்துரு)&oldid=3484367" இருந்து மீள்விக்கப்பட்டது