மயிலாப்பூர் கௌரி அம்மாள்
மயிலாப்பூர் கௌரி அம்மாள் | |
|---|---|
| பிறப்பு | கௌரி அம்மாள் 1892 மயிலாப்பூர், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | ஜனவரி 22,1971 சென்னை, தமிழ்நாடு[1] |
| தேசியம் | |
| மற்ற பெயர்கள் | மயிலாப்பூர் கௌரி அம்மா |
| பணி | பரதநாட்டியக் கலைஞர் |
| விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (1959) |
மயிலாப்பூர் கௌரி அம்மாள் (Mylapore Gowri Ammal) (1892–1971) சென்னையின் மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவர், மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார். 1959 ஆம் ஆண்டில், பரதநாட்டியத்திற்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கை வரலாறு
[தொகு]மயிலாப்பூர் கௌரி அம்மாள் 1892 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மயிலாப்பூரில் ஒரு தேவதாசிக் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரின் தாயார் துரைகண்ணு அம்மாளும் ஒரு நடனக் கலைஞராக இருந்தார். நெல்லூர் முனுசாமி நாட்டுவனாரிடமும் தனது தாயிடமிருந்தும் நடனத்தைக் கற்றுக்கொண்டார். கோயில் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் நடன்மாடிய கடைசி நபராக இருந்தார்.[3] கோயில் நடனத்தை தடைசெய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, கபாலீசுவரர் கோயிலைச் சேர்ந்த ஒரு சிறிய வீட்டில் கௌரி அம்மாள் வசித்து வந்தார்.[4] தனது கடைசி காலத்தில் பாதுகாவலரையும் வீட்டையும் இழந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் நடனம் கற்பிப்பதன் மூலம் உயிர் பிழைத்தார்.
கௌரி அம்மாள் ஜனவரி 22,1971 அன்று இறந்தார்.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]கௌரி அம்மாள் மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் நடனக் கலைஞராக தனது நடன வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பெரும்பாலும் கபாலீசுவரர் கோயிலின் கடைசி தேவதாசி நடனக் கலைஞர் என்று குறிப்பிடப்படுகிறார்.[6] 1947 ஆம் ஆண்டில் மெட்ராஸ் தேவதாசி (அர்ப்பணிப்பு தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் இந்திய அரசு தேவதாசி முறையை தடை செய்யும் வரை கோவிலில் தெய்வத்திற்காக நடனமாடினார்.[7]
1932 ஆம் ஆண்டில், பரதநாட்டியத்தை ஆதரிப்பதற்கும், அதை ஒரு கலை வடிவமாக அங்கீகரிக்கவும், அது தேவதாசி முறையை அடிப்படையாகக் கொண்டதால், அதை ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நிராகரிக்காமல் இருப்பதற்கும் ஈ. கிருஷ்ண ஐயர் பெரும் முயற்சி செய்தார். 1932 ஆம் ஆண்டில், கௌரி அம்மாள் சென்னை மியூசிக் அகாதெமியில் நடனமாடினார்.[8] 1936 ஆம் ஆண்டில் கௌரி அம்மாள் அங்கீகரிக்கப்பட்டார். ருக்மிணி தேவி அருண்டேல் தனக்கு குருவாக இருந்து பரதநாட்டியத்தை கற்பிக்க இவரை அணுகினார்.[9]
பரதநாட்டியத்தில் கௌரி அம்மாளின் அபிநயம், பாவம் மற்றும் இசைத் திறமை ஆகியவை பரவலாகக் குறிப்பிடப்பட்டன.[10] இவர் கடைசியாக 1935 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஒரு பொது மேடையில் நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.
குறிப்பிடத்தக்க சீடர்கள்
[தொகு]தஞ்சாவூர் பாலசரஸ்வதி,[11] ருக்மிணி தேவி அருண்டேல்,[11] சுதாராணி இரகுபதி,[12] கலாநிதி நாராயணன்,[13] சோனல் மான்சிங்,[14] யாமினி கிருஷ்ணமூர்த்தி[15] மற்றும் நிர்மலா ராமச்சந்திரன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க நடனக் கலைஞர்கள் கௌரி அம்மாளின் மாணவர்களாக இருந்தனர்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]1959 ஆம் ஆண்டில் பரதநாட்டியத்திற்காக சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[16] சென்னை மியூசிக் அகாதெமியிலிருந்தும் விருதைப் பெற்றுள்ளார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mylapore Gowri Amma". Oxford Reference (in ஆங்கிலம்). doi:10.1093/oi/authority.20110803100219821?p=emailaywspgmdih8ua&d=/10.1093/oi/authority.20110803100219821 ( (inactive $1) 1 July 2025). Retrieved 2025-01-23.
{{cite web}}: CS1 maint: DOI inactive as of சூலை 2025 (link) - ↑ Mahābhāratī, Saṅgīt (2011), The Oxford Encyclopaedia of the Music of India (in அமெரிக்க ஆங்கிலம்), Oxford University Press, doi:10.1093/acref/9780195650983.001.0001, ISBN 978-0-19-565098-3, archived from the original on 2023-12-03, retrieved 2025-01-23
- ↑ Viswanathan, Lakshmi (2021-08-26). "Gowri Ammal's place in the annals" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 2024-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240424201514/https://www.thehindu.com/entertainment/dance/gowri-ammals-place-in-the-annals/article36119198.ece.
- ↑ .
- ↑ "From the Archives (January 22, 1971): Mylapore Gowri Amma" (in en-IN). The Hindu. 2021-01-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 2022-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220716100215/https://www.thehindu.com/archives/from-the-archives-january-22-1971-mylapore-gowri-amma/article33627977.ece.
- ↑ "There's more to mylai than kapali". www.dtnext.in (in ஆங்கிலம்). 2023-09-10. Archived from the original on 2025-01-23. Retrieved 2025-01-23.
- ↑ The Triumph of Mylapore Gauri Ammal: A Short Incursion into Dance Genetics | Taylor & Francis Group (in ஆங்கிலம்). Taylor & Francis. doi:10.1201/9781003121138-14. Archived from the original on 2021-04-09. Retrieved 2025-01-23.
- ↑ "Gowri Ammal's place in the annals" (in en-IN). The Hindu. 2021-08-26. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 2024-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240424201514/https://www.thehindu.com/entertainment/dance/gowri-ammals-place-in-the-annals/article36119198.ece.Viswanathan, Lakshmi (26 August 2021).
- ↑ Foster, S. (2009-06-10). Worlding Dance (in ஆங்கிலம்). Springer. ISBN 978-0-230-23684-4.
- ↑ Meduri, Avanthi (2005). Rukmini Devi Arundale, 1904-1986: A Visionary Architect of Indian Culture and the Performing Arts (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishe. ISBN 978-81-208-2740-0.
- 1 2 3 Viswanathan, Lakshmi (2021-08-26). "Gowri Ammal's place in the annals" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 2024-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240424201514/https://www.thehindu.com/entertainment/dance/gowri-ammals-place-in-the-annals/article36119198.ece.Viswanathan, Lakshmi (26 August 2021).
- ↑ Venkatesh, Vidya Gowri (2017-05-18). "Abhinayas that move you to tears". The New Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 2025-01-23. Retrieved 2025-01-23.
- ↑ Sai, Veejay (2016-02-27). "A tribute to Kalaninidhi Narayanan, one of the first modern gurus of 'Abhinayam'". The News Minute (in ஆங்கிலம்). Archived from the original on 2025-01-23. Retrieved 2025-01-23.
- ↑ "Sonal Mansingh". sites.ualberta.ca. University of Alberta. Archived from the original on 2022-09-27. Retrieved 2025-01-23.
- ↑ "Yamini Krishnamurthy: A dancing diva who mesmerised all". Deccan Herald (in ஆங்கிலம்). Archived from the original on 2024-09-16. Retrieved 2025-01-23.
- ↑ Mahābhāratī, Saṅgīt (2011), The Oxford Encyclopaedia of the Music of India (in அமெரிக்க ஆங்கிலம்), Oxford University Press, doi:10.1093/acref/9780195650983.001.0001, ISBN 978-0-19-565098-3, archived from the original on 2023-12-03, retrieved 2025-01-23Mahābhāratī, Saṅgīt (2011), The Oxford Encyclopaedia of the Music of India, Oxford University Press, doi:10.1093/acref/9780195650983.001.0001, ISBN 978-0-19-565098-3, archived from the original on 3 December 2023, retrieved 23 January 2025