மயிலம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயிலம்மா (Mayilamma) என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் இவர் கேரளத்தின், பாலக்காட்டின் அருகேயுள்ள பிலாச்சிமாடா என்ற ஊரில் செயல்பட்டுவந்த கொக்கக் கோலா நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகப் புகழ்பெற்றார்.[1] இவருக்கு அவுட்லுக் இதழ் ஸ்பீக் அவுட் விருதை அளித்தது. மேலும் இந்திய அரசின் ஸ்ரீ சக்கதி விருதையும் பெற்றார்.[2]

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பிலச்சிமடாவில் உள்ள கொக்கக் கோலா தொழிற்சாலையினால் ஏற்பட்ட நீர் மாசுபாட்டால் மயிலம்மா நேரடியாக பாதிக்கப்பட்டார், இவரது கிணற்று நீர் இந்தத் தொழிற்சாலையினால் கடுமையாக பாதித்தது இதே போல இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் பாதிப்படைந்தது.

மயிலம்மா அப்பகுதியில் கொக்கக் கோலா ஆலைக்கு எதிரான பரப்புரையில் முதன்மை பாத்திரம் வகித்தார். அவர் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாகa[3] தண்ணீர் பற்றாகுறை மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் காரணமாக கோகோ கோலா பாட்டில் ஆலை 2004 மார்சில் மூடப்பட்டது.

மயிலம்மா ஒரு எரவாளர் பழங்குடி இனப் பெண்மணியாவார். இவர் இந்த நிறுவனத்தை எதிர்க்க கோகோ கோலா விருத சமர் சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார். குளிர்பான நிறுவனத்திற்கு முன்பு தனிநபர் சத்தியாகிரகத்தை தொடங்கினார். காவல் துறையினர் தடுத்தும் தினமும் இவரது போராட்டம் தொடர்ந்தது. போகப்போக இவருக்கு ஆதரவு பெருகி போராட்டம் வலுவடைந்து, 22 ஏப்ரல் 2002 முதல், போராட்டக் குழுவால் தொடர்ச்சியான ஊர்வலம் போன்றவை கோகோ கோலா தொழிற்சாலை வாயில்கள் வெளியே ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோரிக்கை வலுத்தது.

மயிலம்மா விஜயநகர காலனியில் உள்ள அவரது பெரிய குடும்பமான மூன்று மகன்கள், மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தார்.

மயிலம்மா 2007 சனவரி 6 அன்று இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலம்மா&oldid=2715385" இருந்து மீள்விக்கப்பட்டது