மயக்கத் தமனி சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயக்கத் தமனி சுருக்கம்
ஒத்தசொற்கள்தற்காலிக பாரிசவாத தாக்குதல் - மயக்கத் தமனி[1]
மயக்கத் தமனி நோய்
சிறப்புநாளஞ்சார் அறுவை சிகிச்சை

மயக்கத் தமனி சுருக்கம் (Carotid artery stenosis) மயக்கத் தமனிகளில் எப்பகுதியிலேனும் சுருங்குவதோ குறுகுவதோ ஆகும். இது பொதுவாக தமனிக்கூழ்மைத் தடிப்பால் உண்டாகிறது.[2]

அறிகுறிகளும் உணர்குறிகளும்[தொகு]

பொது மயக்கத் தமனி ஒரு பெரிய தமனியாகும். இதன் துடிப்பை கழுத்தின் இரு பக்கங்களிலும் தாடைக்குக் கீழாக உணரலாம். வலது புறத்தில் பெருந்தமனியின் ஒரு கிளையான மேற்கை - மூளைக்குச் செல் தமனியிலிருந்து கிளம்புகிறது. இடது புறத்தில் தமனி வளைக்குழலிலிருந்து நேரடியாக கிளைக்கின்றது. தொண்டையில் உள்ளக மயக்கத் தமனி என்றும் வெளிப்புற மயக்கத் தமனி என்றும் இரண்டாகப் பிரிகிறது. உள்ளக மயக்கத் தமனி மனித மூளைக்கும் வெளிப்புற மயக்கத் தமனி முகத்திற்கும் குருதி வழங்குகிறது. இந்தப் பிரிவுபடும் இடத்தில்தான் அழற்சியால் உறைகட்டி உருவாகி பெரும்பாலான தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்படுகிறது. இதனால் இத்தமனிகள் குறுகலடைகின்றன.[3][4]

இந்த உறைகட்டி நிலைத்திருக்கவும் அறிகுறிகளற்றிருக்கவும் கூடும்; மாறாக இக்கட்டி நகரவும் கூடும். உறைகட்டியிலிருந்து துணுக்கு உடைந்து குருதிக் குழலில் பயணித்து மூளையை அடையலாம். மூளையிலுள்ள குழல்கள் சிறியதாகிவருகையில் இந்த துணுக்கு எங்கேனும் குழலை அடைத்துக் கொண்டு மூளையின் சில பகுதிகளுக்கு குருதியோட்டத்தைத் தடுக்கலாம். இதனால் ஏற்படும் குருதி ஊட்டக்குறை தற்காலிகமானதாக இருப்பின் தற்காலிக பாரிசவாத தாக்குதல் ஏற்படுத்தும். நிலைத்திருந்தால் உறைவுத்தக்கை அடைப்பு பாரிசவாதம் ஏற்படலாம்.[5]

மருத்துவர்கள் நோயாளியின் நோயறிகுறிகள், வரைவுப் படத்தில் காணும் அடைப்பின் தன்மை ஆகியவற்றைக் கொண்டு பாரிசவாதம் ஏற்படும் தீவாய்ப்பினை மதிப்பிடுவர்.

தற்காலிக பாரிசவாத தாக்குதல்களை (TIAs) ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இருநாட்களுக்குள் தீவிர நிரந்தர பாரிசவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக தற்காலிகத் தாக்குதல், வரையறைப்படி, 24 மணி நேரத்திற்கு குறைவானது. அங்கமோ உடற்பாகமோ வலுவிழப்பதும் உணர்ச்சி இழப்பதும் பொதுவான அறிகுறிகளாகும். கண்ணொன்றில் பார்வை இழப்பதும் ஓர் அறிகுறியாகும். தமனியில் மாறுபட்டச் சத்தம், காதுகளில் மணியடிப்பது (காதிரைச்சல்) போன்றவை சிலநேரங்களில் அறிகுறிகளாக அமையலாம்.[6]

சிகிச்சை[தொகு]

மயக்கத் தமனி சுருக்க சிகிச்சையின் முதல் நோக்கம் பாரிசவாத தாக்குதலிலிருந்து நோயாளியைக் காப்பதாகும். இதற்கான சிகிச்சை முறை நோயின் தீவிரத்தன்மையை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது.

  • முதற்கட்ட அளவில் வாழ்முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன: புகை பழக்கத்தை நிறுத்துதல், ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல், சோடியம் சேர்க்கையை குறைத்தல், உடல்எடையைக் குறைத்தல், தவறாத உடற்பயிற்சி ஆகியன.
  • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இரத்தத்தில் உயர் கொழுப்பு நிலையை மட்டுப்படுத்தவும் மருந்துகள்.
  • மயக்கத்தமனி மறுகுழலியத்தலுக்கான அறுவை சிகிச்சை

மருந்துகள்[தொகு]

அமெரிக்க இதய சங்கம் (AHA),[7] தேசிய மருந்தக மீச்சிறப்பு கழகம் (NICE)[8]) ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் படி மயக்கத்தமனி சுருக்க நோயாளிகள் அனைவருக்கும் இரத்த உயர் அழுத்த rகுறைப்பு மருந்துகள், உறைவு தடுப்பு மருந்துகள், ஆஸ்பிரின், குளோபிடோக்ரால் போன்ற இரத்த வட்டு எதிர்ப்பு மருந்துகள் மற்றும் குறிப்பாக இசுடாட்டின்கள் பரிந்துரைக்கபட வேண்டும். இசுடாட்டின்கள் இரத்தக் கொழுப்பு குறைப்பிற்கான மருந்தாக வழங்கப்பட்டாலும் அவற்றிற்கு அழற்சியைக் குறைத்து இரத்த உறைக்கட்டியை நிலைப்படுத்தும் குணமுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மறுகுழலியத்தல்[தொகு]

மருந்துகளை அடுத்து மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளுக்கு அமெரிக்க இதய சங்கத்தினர் கீழ்வரும் அறிகுறிகளை வழிகாட்டுதலாக வழங்கியுள்ளனர்:

  • நோயறி இல்லாத நோயாளிகள்: மற்ற மருத்துவ நிலையை மதிப்பிடுதல், வாழ்நாள் இருப்பு, வேறு தனிப்பட்ட காரணங்கள்; தீவாய்ப்புகளுக்கும் பயன்களுக்கும் இடையேயான மதிப்பீடு; நோயாளியின் விருப்பம் ஆகியன கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • நோயறிகுறி உள்ளோருக்கு: தற்காலிக பாரிசவாத தாக்குதலை உணர்ந்தவர்களுக்கும் மிகத் தீவிரமற்ற உடனடி ஊட்டச்சத்துக்குறை வாதத்திற்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மயக்கத் தமனி மறுகுழலாக்க சிகிச்சைகள், (தமனி உள்ளடைப்பெடுத்தல், தமனியில் செருகுழல் பொருத்துதல், இரத்தப்போக்கை திசைமாற்றி செருகுழல் பொருத்துதல் (TCAR)) பொதுவாக பக்கவாதத்திற்கு சிறு தீவாய்ப்பை உண்டாக்குகின்றன; இருப்பினும், நீண்டநாட்கள் மருந்துகள் மட்டுமே பயன்படுத்தியும் பாரிசவாதம் வரும் வாய்ப்பு குறையாதோருக்கு இச்சிகிச்சை முறை பயனளிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Carotid artery disease: MedlinePlus Medical Encyclopedia". medlineplus.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  2. "Atherosclerosis". The Lecturio Medical Concept Library. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
  3. "Anatomically specific clinical examination of the carotid arterial tree". Anatomical Science International 82 (1): 16–23. March 2007. doi:10.1111/j.1447-073X.2006.00152.x. பப்மெட்:17370446. 
  4. "On the shape of the common carotid artery with implications for blood velocity profiles". Physiological Measurement 32 (12): 1885–97. December 2011. doi:10.1088/0967-3334/32/12/001. பப்மெட்:22031538. 
  5. Easton, J. Donald; Saver, Jeffrey L.; Albers, Gregory W.; Alberts, Mark J.; Chaturvedi, Seemant; Feldmann, Edward; Hatsukami, Thomas S.; Higashida, Randall T. et al. (June 2009). "Definition and Evaluation of Transient Ischemic Attack: A Scientific Statement for Healthcare Professionals From the American Heart Association/American Stroke Association Stroke Council; Council on Cardiovascular Surgery and Anesthesia; Council on Cardiovascular Radiology and Intervention; Council on Cardiovascular Nursing; and the Interdisciplinary Council on Peripheral Vascular Disease: The American Academy of Neurology affirms the value of this statement as an educational tool for neurologists". Stroke 40 (6): 2276–2293. doi:10.1161/STROKEAHA.108.192218. பப்மெட்:19423857. 
  6. Easton, J. Donald; Saver, Jeffrey L.; Albers, Gregory W.; Alberts, Mark J.; Chaturvedi, Seemant; Feldmann, Edward; Hatsukami, Thomas S.; Higashida, Randall T. et al. (June 2009). "Definition and Evaluation of Transient Ischemic Attack: A Scientific Statement for Healthcare Professionals From the American Heart Association/American Stroke Association Stroke Council; Council on Cardiovascular Surgery and Anesthesia; Council on Cardiovascular Radiology and Intervention; Council on Cardiovascular Nursing; and the Interdisciplinary Council on Peripheral Vascular Disease: The American Academy of Neurology affirms the value of this statement as an educational tool for neurologists". Stroke 40 (6): 2276–2293. doi:10.1161/STROKEAHA.108.192218. பப்மெட்:19423857. 
  7. http://my.americanheart.org/idc/groups/ahamah-public/@wcm/@sop/@spub/documents/downloadable/ucm_430166.pdf
  8. "Carotid Artery Stenosis information. Internal carotis occlusion". patient.info (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-08.

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 007427
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயக்கத்_தமனி_சுருக்கம்&oldid=3309812" இலிருந்து மீள்விக்கப்பட்டது