உள்ளடக்கத்துக்குச் செல்

மம்மல்சீ

ஆள்கூறுகள்: 48°35′53″N 8°12′3″E / 48.59806°N 8.20083°E / 48.59806; 8.20083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்மல்சீ
அமைவிடம்கருங்காடு
ஆள்கூறுகள்48°35′53″N 8°12′3″E / 48.59806°N 8.20083°E / 48.59806; 8.20083
வடிநில நாடுகள்செருமனி
அதிகபட்ச ஆழம்17 மீட்டர்கள் (56 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,036 மீட்டர்கள் (3,399 அடி)

மம்மல்சீ ( Mummelsee ) என்பது செருமனியின் வடக்கு பிளாக் வனப்பகுதியில் ஆர்னிசுகிரைண்டின் மேற்கு மலைப்பகுதியில் 17 மீட்டர் ஆழமுள்ள ஏரியாகும். கருங்காடு நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளிடையே இது மிகவும் பிரபலமானது. செருமானிய நாட்டுப்புறக் கதைகளின்படி இந்த ஏரியில் ஒரு நிக்சு எனப்படும் ஒரு ஆவியும் மம்மல்சீயின் அரசனும் வசிக்கின்றனர்.[1]

800 மீட்டர் சுற்றளவுடன், மம்மல்சீ கருங்காட்டிலுள்ள ஏழு பனிபறிபள்ளங்களில் இது மிகப்பெரியதும், ஆழமானதும் ( 17 மீ ஆழம் ) மற்றும் மிக உயர்ந்ததும் ஆகும் ( 1036 மீ ). [2]

நிலவியல்

[தொகு]

மம்மல்சீ, தோராயமாக 800 மீ (2,625 அடி) சுற்றளவைக் கொண்டுள்ளது. மேலும், அதன் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பக்கங்களில் செங்குத்தான மற்றும் காடுகள் நிறைந்த மலைச் சரிவுகளால் சூழப்பட்டுள்ளது. மேற்கு ஏரிக்கரை கடல் மட்டத்திலிருந்து "கட்சென்கோப்" (1,123 மீ (3,684 அடி)) மலையை நோக்கி உயர்கிறது. மேலும் வடக்கு ஏரிக்கரை ஆர்னிசுகிரைண்டே நோக்கி உயர்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1,163 மீ (3,816 அடி) உயரத்தில், ஹார்னிஸ்கிரைண்டே வடக்கு கருங்காட்டில் மிக உயரமான மலையாகும். தெற்கு ஏரிக் கரைகள் மட்டுமே (கிட்டத்தட்ட) தட்டையானவை.

பெயர்க்காரணம்

[தொகு]

சீபாக் நகரத்தின் அறிக்கைகளின்படி, மம்மல்சீயின் பெயர் (செருமன்) வடமொழிச் சொல்லான "மம்மெல்லன்" என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்தப் பெயர் வெள்ளை தண்ணீர் லில்லி மலர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. [3] கடந்த காலங்களில், இந்த வகை தாவரங்கள் அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. மஞ்சள் குளம் லில்லி, "மம்மல்" என்றும் அழைக்கப்படுகிறது. "மம்லீன்" ("மம்மல்" என்பதன் சிறிய வடிவம்) என்று அழைக்கப்படும் நிக்சு என்ற ஆவியின் கட்டுக்கதை, ஏரியின் பெயராகவும் இருந்திருக்கலாம். [4] [5]

இந்த சூழலில் இணைக்கப்பட்ட, வெள்ளை தண்ணீர்லில்லி "நிக்சு புளூம்" என்றும் குறிப்பிடப்படுகிறது, அதாவது "நிக்சு மலர்" எனப் பொருள்படுகிறது. [6]

சுற்றுலா

[தொகு]
மம்மல்சீயில் உள்ள புனித மைக்கேல் தேவாலயம்

கருங்காடு நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு இந்த ஏரி ஒரு சுற்றுலா தலமாக மாறியது. தங்கும் விடுதி, இரண்டு உணவகங்கள், ஒரு மளிகை மற்றும் நினைவுப் பொருட்கள் கடை, அத்துடன் வாடகைத் துடுப்புப் படகு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. [7] [8]

1937 இல் புனித மைக்கேல் தேவாலயம் திறக்கப்பட்டது. இது தூதர் மைக்கேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது தேசிய சோசலிசவாதிகள் அதிக அதிகாரம் பெற்றிருந்த நேரத்தில் ஈர்க்கக்கூடிய இடமாக இருந்தது. [9]

புகைப்படத் தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Freiburger Mythen - Die Nixe im Mummelsee". StadtBESTEN Freiburg - Das BESTE in deiner Stadt (in ஜெர்மன்). 2018-09-28. Retrieved 2020-09-12.
  2. "Der Mummelsee im Schwarzwald an der Schwarzwaldhochstrasse". Retrieved 2020-09-12.
  3. "Mummelsee" (in ஜெர்மன்). Retrieved 2019-07-24.
  4. "Mummelsee" (in ஜெர்மன்). Retrieved 2019-07-24.
  5. "Mummelsee" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-09-12.
  6. "Die Ortenau: Zeitschrift des Historischen Vereins für Mittelbaden (72. Jahresband.1992) (Universitätsbibliothek Freiburg i. Br., H 519,m) - Freiburger historische Bestände - digital - Universitätsbibliothek Freiburg". Retrieved 2019-07-24.
  7. "Mummelsee" (in ஜெர்மன்). Retrieved 2020-09-12.
  8. "Mummelsee and Hornisgrinde" (in ஆங்கிலம்). Retrieved 2020-09-12.
  9. "St. Michael am Mummelsee - Eine Kapelle wie eine Laterne". Retrieved 2020-09-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்மல்சீ&oldid=3858116" இலிருந்து மீள்விக்கப்பட்டது