உள்ளடக்கத்துக்குச் செல்

மம்தா சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்தா சாகர்
மம்தா சாகர்
மம்தா சாகர் 2018-இல்
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–முதல்

மம்தா சாகர் (Mamta Sagar) என்பவர் ஓர் இந்தியக் கவிஞரும், கல்வியாளரும் கன்னட மொழியில் எழுத்தாளரும் ஆவார்.[1] இவருடைய எழுத்துக்கள் அடையாள அரசியல், பெண்ணியம், மொழியியல், கலாச்சாரப் பன்முகத்தன்மையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகின்றன. இவர் சிருஷ்டி கலை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி மற்றும் படைப்பு எழுத்துப் பேராசிரியராக உள்ளார்.[2] 2024-ஆம் ஆண்டில், உலக எழுத்தாளர்கள் அமைப்பால் வழங்கப்பட்ட உலக இலக்கியப் பரிசை சாகர் வென்றார்.

பணி

[தொகு]

சாகர் கவிதை, உரைநடை, விமர்சனங்கள் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இவரது சொந்தக் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகத்தின் பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இவரது சில கவிதைகள் வாசு தீட்சித்[3] பிந்துமாலினி, சுனிதா அனந்தசாமி இசையுடன் இசைக்கப்பட்டுள்ளன.[4]

சாகர், வேல்சு-இந்தியா கூட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக (2018) சிருஷ்டி பிலிம்சுடன் இணைந்து, இதே பெயரில் தனது சொந்தத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட மூன்று கவிதைத் திரைப்படங்களான இன்டர்வெர்ஷன்சு 1,2, & 3 ஆகியவற்றைத் தயாரித்தார். கௌரி லங்கேசுவிற்காக எழுதிய தனது கவிதையின் காணொளி விளக்கக்காட்சியான ஃபார் கௌரியையும் தயாரித்துள்ளார்.[5]

பெங்களூரு இலக்கிய விழாவில் பன்மொழி சமூக கவிதை நிகழ்வான காவ்யா சஞ்சே உட்பட, ஐதராபாத், பெங்களூரில் சர்வதேச, தேசியக் கவிதை, நாடக நிகழ்வுகளை சாகர் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பன்னாட்டுக் கவிதை மொழிபெயர்ப்பு திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.[6][7]

நூல் பட்டியல்

[தொகு]
  • காடா நவிலினா ஹெஜ்ஜே (காட்டு மயிலின் கால்தடங்கள்) – 1992
  • சுக்கி சுக்கி சந்தக்கி – 1993
  • நதியா நீரினா தேவா (நதியின் ஈரம்) – 1999
  • ஹிகே ஹாலேயா மைலே ஹாடு (இது போன்ற பாடல்) - 2007
  • ஒரு பெண் எழுத்தாளராக வளர்தல் (Growing Up as a Woman Writer)–2007
  • மகிழ விஷயா – 2007
  • இல்லி சல்லுவ மாது – 2010
  • மறை & தேடுதல் (Hide & Seek)– 2014
  • காஷா நபிந்து – 2018
  • இடைச்செருகல்கள் (Interversions)(தொகுப்பு)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • திருமலாம்பாவின் கவிதைகள்
  • ஆசையின் ஊஞ்சல் - மய்யே பாரா மனவே பாரா நாடகம்
  • சீமந்தா (2003) – நாகவேணியின் சிறுகதை
  • 870 (2011) – எமிலி டிக்கின்சன் எழுதியது
  • ஸ்லோவேனியன்-கன்னட இலக்கிய தொடர்புகள் (2011)
  • தடைகளுக்கு அப்பால்: ஸ்லோவேனியன்-கன்னட இலக்கிய தொடர்புகள் (2011)
  • ஸ்லோவேனியன்-கன்னட இலக்கிய தொடர்புகள் (2011)
  • ப்ரீத்தியா நலவட்டு நியமகாலு (2017) - எலிஃப் ஷஃபாக்கின் நாவல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Subramaniam, Arundhathi. "Mamta Sagar (poet) – India". Poetry International Archives. Retrieved 19 April 2020.
  2. "Teaching Faculty". Srishti Institute of Art, Design and Technology. Archived from the original on 16 April 2020. Retrieved 19 April 2020.
  3. "Introducing Kannada classics in rock form". https://www.thehindu.com/news/cities/bangalore/introducing-kannada-classics-in-rock-form/article17413506.ece.(subscription required)
  4. "Song - Slaughter". I - Awadhi. Retrieved 19 April 2020.
  5. "Poetry flowed like blood and tears at a rally in Bengaluru this week to protest the murder of Gauri Lankesh". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/poetry-flowed-like-blood-and-tears-at-a-rally-in-bengaluru-this-week-to-protest-the-murder-of-gauri-lankesh/articleshow/60715375.cms.
  6. Peschel, Sabine. "Project 'Poets Translating Poets' proves that poetry is more than art". Deutsche Welle. Archived from the original on 8 November 2020. Retrieved 20 April 2020.
  7. "Mamta Sagar". Literature Across Frontiers. Retrieved 20 April 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்தா_சாகர்&oldid=4392324" இலிருந்து மீள்விக்கப்பட்டது