மம்தா சந்திராகர்
மம்தா சந்திராகர் பத்மசிறீ | |
---|---|
பிறப்பு | 3 திசம்பர் 1958 துர்க், மத்தியப் பிரதேசம், இந்தியா (இப்பொழுது சத்தீசுகர், இந்தியா) |
தேசியம் | இந்திய மக்கள் |
மற்ற பெயர்கள் | மோக்சதா சந்திராகர் |
பணி | துணை இயக்குநர் அனைத்திந்திய வானொலி ராய்ப்பூர், சத்தீஸ்கர் வானொலி, பின்னணிப் பாடகர், சத்தீஸ்கரி நாட்டுபுற இசைப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1968–தற்பொழுது வரை |
பெற்றோர் | தாவு மகாசிங் சந்திராகர் (தந்தை) காயாபாய் சந்திராகர் (தாய்) |
பிள்ளைகள் | பூர்வி சந்திராகர் |
மம்தா சந்திரகர் (Mamta Chandrakar) (பிறப்பு: டிசம்பர் 3, 1958) சத்தீசுகர் மாநிலத்தைச் சேர்ந்த பத்மசிறீ விருது பெற்ற ஒரு நாட்டுப்புற பாடகர் ஆவார். அவர் சத்தீசுகரின் நைட்டிங்கேல் என்று குறிப்பிடப்படுகிறார். [1] [2] மம்தா சந்திரக்கர் இந்திரா கலை இசை பல்கலைகழகத்தில் பாடுவதில் முதுகலை பட்டம் பெற்றார். [3]. இவர் தனது 10 வயதிலிருந்தே பாடத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டில் ராய்ப்பூரிலுள்ள ஆகாஷ்வானி கேந்திராவில் நாட்டுப்புற பாடகராக தொழில் ரீதியாக பாடத்தொடங்கினார். இவரது அரிய பணிக்காக 2016 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கப்பட்ட்து. மேலும் பல மாநில அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது கணவர் பிரேம் சந்திரக்கர் சத்தீசுகர் மாநில திரைப்படத் துறையில் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மம்தா சந்திரகர் 1958 ஆம் ஆண்டில் திரு தாவு மகா சிங் சந்திரக்கருக்கும் காயாபாய் சந்திராகருக்கும் மகளாகப் பிறந்தார். தந்தை நாட்டுப்புற இசை பற்றிய ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். பாலிவுட் இசை உள்ளூர் நாட்டுப்புற இசையில் தாக்கத்தை ஏற்படுத்திய காலத்தில் அவர் 1974 இல் "சோன்கா-பிகான்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நாட்டுப்புற இசையின் ஆன்மாவை மக்கள் இதயத்திலும் மனதிலும் உயிரோடு வைத்திருப்பதை சோன்கா-பிகான் நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. அதனால் இந்த சிந்தனையுடன் 1974 மார்ச்சு மாதத்தில் நாற்பது முதல் ஐம்பதாயிரம் பேருக்கு முன்னால் சோன்கா பிகான் நிறுவனம் நிகழ்ச்சியை நடத்தியது. மறைந்த தாவ மகா சிங் நாட்டுப்புற இசையை மேம்படுத்துவதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். மம்தா சந்திரக்கர் தனது தந்தையிடமிருந்து தனது ஆரம்ப பாடங்களை எடுத்துக் கொண்டார். பின்னர் இசையில் மேலதிக படிப்புகளுக்காக இந்திரா கலை இசை பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]1986 ஆம் ஆண்டில், சத்தீசுகர் சினிமாவின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரேம் சந்திரகரை மணந்தார். இவர்களுக்கு 1988 இல் ஒரு மகள் பிறந்தார். [2] மம்தா சந்திராகரின் சகோதரன் பி.எல்.சந்திரக்கர் ஆவார். இவர் ஒரு நடிகர். மம்தா சந்திராகரின் சகோதரி பிரமிளா சந்திரகரும் ஒரு நடிகர்.
தொழில்
[தொகு]தாதாரியா என்னும் ஒரு வகை நாட்டுப்புற பாடல்களை வயல்வெளியில் வேலை செய்வோர் சத்தீசுகரில் பாடுவர். அந்த வகைப் பாடல்களை மம்தா சந்திராகர் பாடுகிறார்.[4] மம்தா சந்திரகர் பல்வேறு சத்தீசுகர் படங்களிலும் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]மாநிலத்தில் மம்தா சந்திராகர் புகழ் பெற்று இருந்ததால், 2013 ஆம் ஆண்டில் சத்தீசுகர் மாநில சின்னமாக அரசால் நியமிக்கப்பட்டு, கிராம புறங்களில் தேர்தல் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு விழிப்புணர்வு கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தார்.[5] 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சத்தீசுகர் மாநில தேர்தலில் மம்தா சந்திராகர் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் பண்டாரியா தொகுதியில் போட்டியிட்டார்.[6] அத்தேர்தலில் வெற்றி பெற்று மம்தா சந்திராகர் பண்டாரியா தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.[7] அத்தேர்தலில் மொத்தம் ஒரு இலட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார். கிட்டதட்ட முப்பத்தி ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[8] இவர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் என்று கூறப்பட்டாலும் அவரது தேர்தல் பத்திரத்தில் தான் பள்ளியில் பன்னிரண்டாவது வரை மட்டும் படித்ததாகக் கூறியுள்ளார்.[9]
விருதுகள்
[தொகு]- 2018 சத்தீஸ்கர் விபூதி அலங்கரன்
- 2016 பத்மஸ்ரீ விருது
- 2013 சத்தீஸ்கர் ரத்னா
- 2012 தாவு துலார் சிங் மந்த்ராஜி மரியாதை
குறிப்புகள்
[தொகு]- ↑ "The PADMA ACHIEVERS 2016". books.google.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
- ↑ 2.0 2.1 "Mamtha Chandrakar". veethi.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
- ↑ "TOP FEMALE FOLK SINGERS OF INDIA". wegotguru.com. Archived from the original on 2020-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
- ↑ Gaekwad, Manish. "Who else won Padma awards apart from Rajinikanth and Anupam Kher". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ "Smt. Mamta Chandrakar – Folk Singer" (PDF).
- ↑ "Congress releases final list of 19 candidates for Chhattisgarh polls". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "MAMTA CHANDRAKAR INC, Chhatisgarh Election, Pandariya, Election Results 2018". aajtak.intoday.in (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ "Mamta Chandrakar(Indian National Congress(INC)):Constituency- PANDARIYA(KABIRDHAM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.