மமிடி ஹரிகிருஷ்ணா
மமிடி அரிகிருஷ்ணா ஓர் இந்திய தெலுங்கு கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆவணப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார்.[1] மேலும், இவர் தெலங்காணா மாநிலத்தின் வரலாறு மற்றும் திரைப்படங்கள் குறித்த வரலாற்றாசிரியர் ஆவார்.[2] தற்போது தெலங்காணா அரசின் மொழி மற்றும் கலாச்சார துறையின் இயக்குநராக உள்ளார்.[3][4]
பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]அரிகிருஷ்ணா வராங்கல் மாவட்டத்தில் உள்ள சியாம்பேட் என்னும் இடத்தில் பிறந்தார்.[2] பத்தாம் வகுப்பு வரை தனது கிராமத்திலேயே பயின்றார்.
தனது இடைநிலை கல்வியையும் இளங்கலைக் கல்வியையும் வாரங்கலில் உள்ள லால்பகதூர் கல்லூரியில் மேற்கொண்டார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் தனது முதுகலை படிப்பை முடித்தார். வாரங்கல் காகத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியியல் கல்வியினைப் படித்தார்.[2][5] தெலுங்கு பல்கலைக்கழகத்தில் தெலுங்கு சினிமாவில் நாட்டுப்புற கூறுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு 16 சூலை 2022ல் முனைவர் பட்டம் பெற்றார்.[6][7]
கவிஞர்
[தொகு]அரிகிருஷ்ணா தான் எழுதிய கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார்.[8] கலாச்சாரத் துறையின் இயக்குநராக, பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் 50 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு தெலுங்கு கவிதைகளில் "ஃப்யூஷன் ஷயாரி"யை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
எழுத்தாளர்
[தொகு]1.தெலுங்கு சினிமால்லாவ் பாஷா-சாஹித்யம்-சம்ஸ்க்ருதி (திரைப்பட விமர்சனம் மற்றும் பகுப்பாய்வு பற்றிய கட்டுரைகள்)
2.ஊரிகி போயினா யல்லா (1995-2018 க்கு இடையில் தெலுங்கானா மொழியில் எழுதப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 30 கவிதைகளின் தொகுப்பு)
3.சுசுப்தி நுஞ்சி (1986-89 க்கு இடையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)
4.ஒன்டரீகரனா (1993-2003க்கு இடையில் எழுதப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 45 கவிதைகளின் தொகுப்பு)
5.தெலுங்கு சினிமாவில் நாட்டுப்புறக் கூறுகள் பற்றிய ஆய்வு (ஆராய்ச்சி புத்தகம்)
வெளியிட்ட நூல்கள்
[தொகு]1. ஆஷாதீபம் (எய்ட்ஸ் பற்றிய கவிதை)
2. சிகுராந்த ஆஷா (எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த முதல் மிகப்பெரிய கதை தொகுப்பு)
3. வினியோகம்-விகாசம் கோசம் (நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு குறித்த கதை, கவிதை, கேலிச்சித்திரங்களின் தொகுப்பு)
தெலுங்கானா அரசின் மொழி மற்றும் கலாச்சார பிரிவின் இயக்குநராக வெளியிட்ட நூல்கள்
[தொகு]தெலங்கானா அரசின் மொழி மற்றும் கலாச்சாரத் துறை பின்வரும் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.[9]
- டோலிபோடு[10]
- கோட்டா சாலு
- தங்கேடு வனம்
- மாட்டி முத்ரா
- பத்யா தெலுங்கானா
- தள்ளி வெரு
- அக்குபச்சனி போட்டு பொடுபு
- ஸ்மர நாராயணீயம்
- கொல்ல ராமவ்வா மற்றும் பிற நாடகங்கள்[11]
- கலா தெலுங்கானாம்
- படம் காதலு
- தெலுங்கானா அறுவடை
- நயா சால்
- தெலுங்கானா தேஜோமூர்த்திலு
- தெலுங்கானா வகையகார வைபவம்
- தெலுங்கு கார்ட்டூன்
- ஒரு பச்சை மாலை
- காகதீய பிரஸ்தானம்
- ஸ்வேதா பூமி
- கலை மற்றும் கலாச்சாரத்தில் பெண்கள்
- மனகு தெலியானி தெலுங்கானா
- தரிகுல்லோ தெலுங்கானா
- தெலுங்கானா ருச்சுலு
- ஜெய ஜயோஸ்து தெலுங்கானா
- தலையை உயர்த்திய இடத்தில்
- அதிரங் மஹோத்சவ் -2017
- நட்பு கலாச்சாரம்: ஹைதராபாத் தர்காக்களின் காட்சிகள்[12]
- தெலுங்கானாவின் மைம்ஸ்கேப்
- மைம் மீது ஒரு மாண்டேஜ்
- ஒரு சகாப்தத்தின் கண்கண்ட சாட்சி
- சூரஜ்குண்டில் தெலுங்கானா கலாச்சாரம்
- அழுகு தூங்கின அக்ஷரம்
- தெலுங்கானா போனலு[13]
- சம்க்ஷேம ஸ்வரலு
- வரிகளின் எதிரொலி
- உத்யமா கீதா
அரசுப்பணி
[தொகு]அரிகிருஷ்ணா 1996-ல் மாநில குடிமையியல் பணி அதிகாரியாக (முன்னாள் ஆந்திரப் பிரதேசம்) சேர்ந்தார். இவர் 28 அக்டோபர் 2014 அன்று தற்போது வகித்து வரும் மொழி மற்றும் கலாச்சார இயக்குநர் என்னும் பதவியில் நியமிக்கப்பட்டார்.[14]
அங்கீகாரம்
[தொகு]- 2009ம் ஆண்டு, 2012ம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் சிறந்த விமர்சகர் விருதினைப் பெற்றார்.
- 2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உலக தெலுங்கு மாநாட்டின் ஐந்தாவது பதிப்பை ஏற்பாடு செய்த பெருமைக்குரியவர்.
- 2019ம் ஆண்டு இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசியக் கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ deSouza, Peter Ronald; Alam, Mohd Sanjeer; Ahmed, Hilal (2021-11-11). Companion to Indian Democracy: Resilience, Fragility, Ambivalence (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-46158-9.
- ↑ 2.0 2.1 2.2 Ramya Sree, K (5 April 2020). "Wedded to creative work". The Pioneer (India). http://pynr.in/2020/04/05/wedded-to-creative-work/. பார்த்த நாள்: 20 April 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sushil Rao, Ch (5 April 2020). "Traditional art forms and peppy folk songs unite to fight coronavirus in Hyderabad". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times Group). https://timesofindia.indiatimes.com/city/hyderabad/traditional-art-forms-and-peppy-folk-songs-unite-to-fight-coronavirus/articleshow/75000325.cms. பார்த்த நாள்: 20 April 2020.
- ↑ Chakravorty, Reshmi (2017-07-08). "Telangana Department of Language and Culture is creating a database of all artistes". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ Suresh, Basani (October 2019). bahumukha prajnasali mamidi harikrishna(in Telugu). Deccan Land. p. 23.
- ↑ India, The Hans (2022-07-18). "Hyderabad: Mamidi Harikrishna awarded PhD". www.thehansindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 2022-07-18. பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.
- ↑ telugu, NT News (2022-07-17). "మామిడి హరికృష్ణకు తెలుగు వర్సిటీ డాక్టరేట్". Namasthe Telangana (in தெலுங்கு). Archived from the original on 2022-07-17. பார்க்கப்பட்ட நாள் 2022-07-17.
- ↑ "MAMIDI HARI KRISHNA". Hyderabad Literary Festival. Hyderabad Literary Festival. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ "Amazon.in". www.amazon.in (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "'Largest' compilation of contemporary poetry released" (in en-IN). The Hindu. 12 April 2016. https://www.thehindu.com/news/cities/Hyderabad/largest-compilation-of-contemporary-poetry-released/article8463810.ece.
- ↑ Harikrishna, Mamidi (2017). PV Narasimha Rao Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-936345-3-0. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Harikrishna, Mamidi; Turaga-Revelli, Usha (2018). Culture of Amity: Glimpses of Dargahs of Hyderabad (in ஆங்கிலம்). Department of Language and Culture, Government of Telangana. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.
- ↑ Harikrishna, Mamidi (2019). Bonalu: Mahankalijatara (in ஆங்கிலம்). Telangana Sahithya Kala Vedika. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-927072-3-5. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.
- ↑ "Bhasha samskrutika director ga mamidi harikrishna(Mamidi Harikrishna appointed as director of language and culture department)". One India. One India. 28 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ Sushil Rao, Ch (19 December 2019). "Telugu writers bag national honours, one gets Sahitya Akademi award". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/telugu-writers-bag-natl-honours-one-gets-sahitya-akademi-award/articleshow/72876355.cms. பார்த்த நாள்: 20 April 2020.