உள்ளடக்கத்துக்குச் செல்

மன்ஹாட்டன் பாலம்

ஆள்கூறுகள்: 40°42′25″N 73°59′26″W / 40.7070°N 73.9905°W / 40.7070; -73.9905 (Manhattan Bridge)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்ஹாட்டன் பாலம்
மன்ஹாட்டனிலிருந்து புரூக்ளின் நோக்கிய காட்சி, 2023
போக்குவரத்து
தாண்டுவது கிழக்கு ஆறு
இடம் நியூயார்க்கு நகரம் (மன்ஹாட்டன்புரூக்ளின்)
பராமரிப்பு நியூயார்க் நகர போக்குவரத்துத் துறை
ID number 2240028 (உயர்)
2240027 (கீழ்)[1]
வடிவமைப்பாளர் லியோன் முவாசெய்ஃப்[2]
வடிவமைப்பு தொங்கு பாலம்
மொத்த நீளம் 6,855 அடி (2,089 m)
அகலம் 120 அடிகள் (37 m)[2]
உயரம் 336 அடி (102 m) (கோபுரங்கள்)[2]
அதிகூடிய அகல்வு 1,480 அடிகள் (451 m)
Clearance below 135 அடி (41.1 m)[2]
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து 67,851 (2019)[3]
கட்டியவர் ஓத்நீல் பாஸ்டர் நிக்கோலசு[2]
கட்டுமானம் தொடங்கிய தேதி 1901[2]
கட்டுமானம் முடிந்த தேதி 1909[4]
திறப்பு நாள் திசம்பர் 31, 1909; 115 ஆண்டுகள் முன்னர் (1909-12-31)[4]
சுங்கத் தீர்வை நெரிசல்சார் கட்டணம் (மன்ஹாட்டன்-நோக்கிய)
அமைவு 40°42′25″N 73°59′26″W / 40.7070°N 73.9905°W / 40.7070; -73.9905 (Manhattan Bridge)

மன்ஹாட்டன் பாலம் நியூயார்க் நகரத்தின் கிழக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் ஆகும். இது மன்ஹாட்டனின் தென் (கீழ்)பகுதியையும் புரூக்ளினின் நகரமையத்தையும் இணைக்கின்றது. லியோன் முவாசெய்ஃப் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாலம் 6,855 அடி (2,089 m) நீளமானது. இது மன்ஹாட்டன் தீவையும் நீள் தீவையும்இணைக்கும் நான்கு வாகனப் போக்குவரத்து பாலங்களில் ஒன்றாகும்; அண்மித்த புரூக்ளின் பாலம் இதற்கு மேற்கே உள்ளது, மற்ற இரு பாலங்கள் (குயின்சுபரோ பாலம், வில்லலியம்சு பாலம்) வடக்கே உள்ளன. [5]

1898 இல் இந்தப் பாலத்தைக் கட்ட முன்மொழியப்பட்டது; அப்போது இது "பாலம் எண். 3" என குறிப்பிடப்பட்டிருந்தது. 1902-இல் இதற்கு மன்ஹாட்டன் பாலம் என பெயரிடப்பட்டது. பாலத்தின் தொங்கு கோபுரங்களுக்கான அடித்தளங்கள் 1904இல் முடிவுற்றன. திசம்பர் 31, 1909இல் மன்ஹாட்டன் பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு முதல் அமிழ் தண்டூர்தி போக்குவரத்து துவங்கியது; 1915-ஆம் ஆண்டிலிருந்து நியூயார்க் நகர சப்வே தொடரிகள் பாலத்தின் மீது இயக்கப்பட்டன. 1929-இல் அமிழ் தண்டீர்தி சேவைகள் நிறுத்தப்பட்டன. தவிரவும் சப்வே போக்குவரத்தினால் ஒரு பக்கமாக ஏற்பட்ட சாய்வை சரிசெய்ய 1982 - 2004 காலகட்டத்தில் விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NYC DOT Bridges & Tunnels Annual Condition Report 2015" (PDF). City of New York.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Manhattan Bridge at Structurae
  3. "NYC DOT – Data Feeds". New York City Department of Transportation. 2019. NYC Bridge & Screenline Traffic Volumes Dashboard. Retrieved May 21, 2022.
  4. 4.0 4.1 "Manhattan Bridge Opened to Traffic – Mayor McClellan's Last Act in Public Was to Lead a Procession on Wheels Across – Brooklyn Men Celebrate – New Structure Has the Largest Carrying Capacity of Any Crossing the River – The Span Is 1,470 Feet". The New York Times. January 1, 1910. https://timesmachine.nytimes.com/timesmachine/1910/01/01/104915453.pdf. 
  5. Sharif, Mo (December 19, 1903). "Protecting New York City's Bridge Assets". Federal Highway Administration. Archived from the original on April 29, 2021. Retrieved January 8, 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்ஹாட்டன்_பாலம்&oldid=4307288" இலிருந்து மீள்விக்கப்பட்டது