மன்மோகன் சிங் (விமானி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மோகன் சிங்
பட்டப்பெயர்(கள்)"சாச்சா மன்மோகன் சிங்"[1]
பிறப்பு1905/6
இராவல்பிண்டி, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு3 மார்ச் 1942
புரூம், மேற்கு ஆத்திரேலியா
சார்புபிரித்தானிய இந்தியாவின் வான்படை
போர்கள்/யுத்தங்கள்
நினைவிடங்கள்
  • டார்வின் இராணுவ அருங்காட்சியக நினைவுச் சுவர்
  • சிங்கப்பூரின் வேலைப்பாடுகள்

மன்மோகன் சிங் (Man Mohan Singh) (1905/06 - 3 மார்ச் 1942), ஓர் இந்திய விமானியாவார். 1930 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் குரோய்டன் விமான நிலையத்திலிருந்து பிரித்தானிய இந்தியாவின் கராச்சிக்கு தனியாக பறந்த முதல் இந்தியராவார்.

சுயசரிதை[தொகு]

இராவல்பிண்டியில் (இப்போது பாக்கித்தான்) [1][2] கைசர்-இ-ஹிந்த் பதக்கம் பெற்ற மருத்துவர் மகான் சிங்குக்கு மகனாகப் பிறந்து அங்கேயே கல்வி கற்றார்.[1] பின்னர் இங்கிலாந்து சென்று குடிசார் பொறியியல், வான்வெளிப் பொறியியல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். மேலும், பறக்கவும் கற்றுக்கொண்டார்.[1][3] இவர் ஐந்து ஆண்டுகள் பிரிஸ்டலில் வசித்து வந்தார். லீட் குடும்பத்துடன் 24 உட்ஃபீல்ட் சாலையில் வசித்து வந்தார்.[4]

போட்டி[தொகு]

1929 ஆம் ஆண்டில் ஆகா கான் [4][5] நடத்திய இங்கிலாந்து-இந்தியா பயணத்தை (இரு வழிகளிலும்), தனியாகவும், ஒரு மாத காலத்திற்குள் பறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அறிவித்த போட்டியில் பங்கேற்றார். 1930 ஆம் ஆண்டில், சிங் தனது விமானத்திற்கு "மிஸ் இந்தியா" என்று பெயரிட்டார்.[6] இருப்பினும், இவர் ஒரு நாள் காலக்கெடுவை ஒருநாள் அதிகமாக பறந்து தவறவிட்டார். விமானி ஆஸ்பி இஞ்சினியருக்கு பரிசு வழங்கப்பட்டது.[4][7][8] சிங் பின்னர் இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தனியாக பறந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் சிங் இந்திய வான்படை தன்னார்வ நிறுவனத்தில் விமான அதிகாரியாக சேர்ந்தார். அதைத் தொடர்ந்து இவர் அரச கழக வான்படையின் கடலோரப் பிரிவில் சேர்ந்தார். அட்லாண்டிக் போரின்போது சுந்தர்லேண்ட் பறக்கும் படகு இவரது கட்டளையின் கீழ் இயங்கியது. பின்னர் இவர் பிரித்தானிய இந்திய வான்படையுடன் பறக்கும் அதிகாரியானார். 1942 ஆம் ஆண்டில், மேற்கு ஆத்திரேலியாவின் புரூமுக்கு வந்த பறக்கும் படகுகளுடன் இவர் இருந்தார். சப்பானிய விமானத் தாக்குதல் இவர்கள் அனைவரையும் அழித்தது. இந்த தாக்குதலில் சிங் துறைமுகத்தில் மூழ்கி தப்பினார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Remembering Flying Officer Manmohan Singh —". www.australiansikhheritage.com (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
  2. Second supplement to Who's who in India [microform : brought up to 1914]. University of California Libraries. Lucknow : Newul Kishore Press. 1914. https://archive.org/details/secondsupplement00luckrich. 
  3. "Private Flying and Club News". Flight: 103. 10 January 1930. https://www.flightglobal.com/pdfarchive/view/1930/untitled0%20-%200103.html?search=man+Mohan+singh. 
  4. 4.0 4.1 4.2 Chowdhry, Mohindra S. (2018) (in en). Defence of Europe by Sikh Soldiers in the World Wars. Troubador Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781788037983. https://books.google.com/books?id=TGpUDwAAQBAJ&q=aga+khan+prize+1930+man+mohan+singh&pg=PA368. 
  5. "The Aga Khan Prize". Flight: 559. 23 May 1930. https://www.flightglobal.com/FlightPDFArchive/1930/UNTITLED0%20-%200583.PDF. 
  6. "Pictures from overseas". www.trove.nla.gov.au. 1 March 1930.
  7. Rao, Prof L. S. Seshagiri (2000) (in en). J. R. D. TATA. Sapna Book House (P) Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788128017438. https://books.google.com/books?id=pBCIAwAAQBAJ&q=Aga+Khan+1929+flight+prize&pg=PP8. 
  8. Shaftel, David (November 2011). "Karachi to Bombay to Calcutta". Air & Space Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
  9. "On this day in history: WWII Broome air raid". Australian Geographic (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 3 March 2015. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Man Mohan Singh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோகன்_சிங்_(விமானி)&oldid=3361016" இலிருந்து மீள்விக்கப்பட்டது