மன்மத நாத் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் மன்மத நாத் முகர்ஜி (Manmatha Nath Mukherjee) (1874 அக்டோபர் 28 - 1942 திசம்பர் 6) இவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெங்காலி நீதிபதியாகவும், ஒரு சிறந்த நீதிபதியாகவும் இருந்தார். இவர் இந்தியாவின் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினராகவும் இருந்தா. மேலும் இவருக்கு 1935 இல் வீரத்திருத்தகை கௌரவம் வழங்கப்பட்டது. இவர் வங்காள அறிஞர் சர் கூரூதாஸ் பானர்ஜியின் மருமகன் ஆவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் பிரிக்கப்படாத வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ஜகதி என்ற கிராமத்தில் உனதி நாத் முகர்ஜியின் மகனாகப் பிறந்தார். இவர் தனது கல்வியை ஆல்பர்ட் கல்லூரிப் பள்ளியில் பெற்றார். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இவர், சுரேந்திரநாத் சட்டக் கல்லூரியில் (அப்போதைய கொல்கத்தாவின் ரிப்பன் கல்லூரி ) சட்டம் பயின்றார். [ மேற்கோள் தேவை ]

தொழில்[தொகு]

1924 ஆம் ஆண்டில் இவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இளைய வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கி, 1935 இல் நீதிபதியாக பதவியில் உயர்ந்தார். தாரகேஸ்வர் கோயில் வழக்கு போன்ற முக்கியமான மோதல்களைத் தீர்க்க சில குறிப்பிடத்தக்க, பக்கச்சார்பற்ற தீர்ப்புகளுக்கு இவர் பிரபலமானார். ஆளுநரின் நிர்வாகக் குழுவின் பெங்காலி சட்ட உறுப்பினராகவும், கொல்கத்தா இலக்கிய சங்கத்தின் தலைவராகவும், 1926 முதல் இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். [2] ஓய்வுக்குப் பிறகு பாட்னா உயர்நீதிமன்றம் மற்றும் சமூகப் பணிகளில் பயிற்சிச் சட்டத்தைத் தொடங்கினார். வங்காளத்தில் வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தார். புதுடெல்லி காளி பாரியின் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். இவரது சட்ட அறிவை கருத்தில் கொண்டு இந்திய அரசு இவரை சில நாட்கள் சட்ட செயலாளராக நியமித்தது. இவர் சட்டம் குறித்து சில புத்தகங்களை எழுதினார். [3] [4]

குறிப்புகள்[தொகு]

  1. Sushil Chaudhury. "Trade, Politics and Society: The Indian Milieu in the Early Modern Era". books.google.co.in. 15 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "South Asia Archive". southasiaarchive.com. 15 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Tathagata Roy. "The Life & Times of Shyama Prasad Mookerjee". 15 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Title". nationallibrary.gov.in. 15 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மத_நாத்_முகர்ஜி&oldid=3026369" இருந்து மீள்விக்கப்பட்டது