உள்ளடக்கத்துக்குச் செல்

மன்பிரீத் சிங் பாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்பிரீத் சிங் பாதல்
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் பஞ்சாப்
பதவியில்
16 மார்ச் 2017 – 10 மார்ச் 2022
முதலமைச்சர் பஞ்சாப்சரண்ஜித் சிங் சன்னி அமரிந்தர் சிங்
பதவியில்
2007–2010
முதலமைச்சர்பிரகாஷ் சிங் பாதல்
துணைமுதலமைச்சர்சுக்பீர் சிங் பாதல்
பஞ்சாப் சட்டமன்ற உறுப்ப்பினர்
பதவியில்
11 மார்ச் 2017 – 10 மார்ச் 2022
சட்டப்பேரவைத் தலைவர்இராணா கா. பா. சிங்
சட்டப்பேரவைத் தலைவர்அஜெய்ப் சிங் பாதி
தொகுதிகீதர்பாகா
பதவியில்
1995–2012
தொகுதிகீதர்பாகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூலை 1962 (1962-07-26) (அகவை 62)
பாதல், பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்வினு பாதல்[1]
பிள்ளைகள்2
பெற்றோர்
உறவினர்பிரகாஷ் சிங் பாதல்
சிக்பீர் சிங் பாதல்

மன்பிரீத் சிங் பாதல் (Manpreet Singh Badal)(பிறப்பு 26 சூலை 1962) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். இவர் பஞ்சாபின் முன்னாள் நிதியமைச்சர் ஆவார்.

இவர் பஞ்சாப் சட்டமன்றத்தில் ஐந்து முறை (1995, 1997, 2002, 2007, 2017) உறுப்பினராக இருந்துள்ளார். இரண்டு முறை நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். 2007-2010 வரை பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இவர் பதவி வகித்தார்.[2][3] இவர் பஞ்சாப் நிதிநிலை அறிக்கையினை ஒன்பது முறை சமர்ப்பித்துள்ளார். பஞ்சாபில் எந்த அமைச்சருக்கும் செயல்படுத்தாத அளவில் மாநில நிதியை நிலைப்படுத்தியதாகக் கருதப்படுகிறார். மேலும் பஞ்சாப்[4] GDP இல் 2016ல் ஆண்டுக்கு ரூ 1.28 லட்சத்திலிருந்து 2020ல் ரூ 1.67 லட்சமாக 30 சதவீதம் அதிகரித்தது.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மன்பிரீத் சிங் பாதல் 26 சூலை 1962 அன்று முக்த்சரில் பிறந்தார். இவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் சகோதரரான குர்தாஸ் சிங் பாதல் [5] மற்றும் கர்மந்திர் கவுர் பாதலின் மகன் ஆவார், இவர் 19 மார்ச் 2020 அன்று தனது 84 வயதில் இறந்தார்.[6] மன்பிரீத் சிங் பாதல் தி டூன் பள்ளி மற்றும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி (தில்லி பல்கலைக்கழகம்) பயின்றார். ஆங்கிலம், பஞ்சாபி, இந்தி, உருது ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். இதையடுத்து இவருக்கு இலண்டன் பல்கலைக்கழகம் சட்டப் பட்டம் வழங்கியது. [7]

சிரோமணி அகாலி தளம்

[தொகு]

பாதல் மே 1995 இல் பஞ்சாப் சட்டப் பேரவைக்கு அகாலி தளம் சார்பில் கிதர்பாஹாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9][10] இவர் 1997, 2002 மற்றும் 2007ல் கிதர்பாஹா தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11][12] 2007ல் பிரகாஷ் சிங் பாதல் அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். மற்ற கட்சிகளுடன் மத்திய அரசிடமிருந்து கடன் தள்ளுபடி சலுகை குறித்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து இவர் இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், இவர் அக்டோபர் 2010ல் சிரோமணி அகாலி தளத்திலிருந்து நீக்கப்பட்டார்.[12][13][14][15]

பஞ்சாப் மக்கள் கட்சி

[தொகு]

2011ல், பஞ்சாப் மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார்.[13][16] 2012 பஞ்சாப் தேர்தலில், இவரது கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மற்றும் சிரோமணி அகாலி தளம் (லோங்கோவால்) ஆகியவற்றுடன் அரசியல் கூட்டணியை உருவாக்கியது. பாதலை இவர்கள் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தினர்.[17] இவர் கிதர்பாஹா மற்றும் மௌர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு[18] இரண்டு இடங்களிலும் தோல்வியடைந்தார்.[19][20]

2016ஆம் ஆண்டு சனவரி 15 அன்று மன்பிரீத் தனது கட்சியைக் காங்கிரசுடன் இணைத்தார்.[21]

இந்தியத் தேசிய காங்கிரசு

[தொகு]

இவரது கட்சியை இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைத்த பிறகு, [22] பதிந்தா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட இவருக்குச் கட்சி சீட்டு வழங்கப்பட்டது. மார்ச் 2017ல் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தனது போட்டியாளரை 18,480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[23] . சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2022 தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியிடம் 63,581 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது 2022ஆம் ஆண்டு பஞ்சாப் தேர்தல்களிலும் எந்தவொரு வேட்பாளரும் இழந்த அதிகபட்ச வித்தியாசமாகும்.[23]

குடும்பம்

[தொகு]

வினு பாதல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Manpreet-Father Visit CM's Wife". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  2. Badal allocates portfolios
  3. Punjab Finance Minister sacked
  4. From empty coffers to zero pending bills
  5. Manpreet Profile
  6. "Punjab FM Manpreet Badal's mother passes away". The Times of India. 19 March 2019. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/punjab-fm-manpreet-badal-bereaved-mother-passes-away/articleshow/74703846.cms. பார்த்த நாள்: 20 March 2020. 
  7. "Badal vs Badal". 14 October 2010 இம் மூலத்தில் இருந்து 30 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120730012554/http://www.expressindia.com/latest-news/Badal-vs-Badal/697446/. பார்த்த நாள்: 12 July 2012. 
  8. To take on Badals in Gidderbaha, among Congress contenders: Amarinder Singh
  9. Knives were out for Manpreet after Sukhbir cancelled trip
  10. Manpreet Badal resigns as MLA; likely to float new party
  11. "Manpreet Badal resigns as MLA; likely to float new party". Indian Express.com. 26 March 2011. http://www.indianexpress.com/news/manpreet-badal-resigns-as-mla;-likely-to-float-new-party/767723/. பார்த்த நாள்: 15 May 2011. 
  12. 12.0 12.1 Shiromani Akali Dal expels rebel leader
  13. 13.0 13.1 "Manpreet Singh Badal floats new party". Economic Times. 27 March 2011. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  14. Manpreet Badal's ouster breaks bond of Badals
  15. "Manpreet Singh Badal sacked as Punjab finance minister". NDTV.com. 2010. https://www.ndtv.com/india-news/manpreet-singh-badal-sacked-as-punjab-finance-minister-435832. 
  16. Another Badal rises on Punjab's political horizon
  17. Sanjha Morcha blows poll bugle
  18. Manpreet plays safe, picks Maur as second seat
  19. "Punjab elections: Manpreet Badal finds himself a rebel without a cause". Archived from the original on 2012-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  20. Manpreet loses both seats, father Gurdas his deposit
  21. "पंजाबः सीएम बादल के भतीजे मनप्रीत अपनी पार्टी सहित कांग्रेस में शामिल". Dainik Jagran. 15 January 2016.
  22. "Manpreet Singh Badal's PPP merges with Congress". Business Standard. 15 January 2016. https://www.business-standard.com/article/news-ians/manpreet-singh-badal-s-ppp-merges-with-congress-116011500370_1.html. 
  23. Bhatinda Urban constituency Assembly election winner 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்பிரீத்_சிங்_பாதல்&oldid=3791791" இலிருந்து மீள்விக்கப்பட்டது