மன்னார் மோகனப்பள்ளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார் மோகனப்பள்ளு தஞ்சாவூர் அரண்மனை சுவடி நூலகத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னர் விஜயநாயக்கரால் சேர்க்கப்பெற்ற தமிழ்ச்சுவடியாகும்.

சிற்றிலக்கியம்[தொகு]

இது சிற்றிலக்கிய வகைப்பாட்டில் அடங்கும்.

பாடல்கள்[தொகு]

இரண்டு காப்புச்செய்யுள்களோடு தொடங்கும் இப்பள்ளு, 11 பாடல்களைக் கொண்டுள்ளது. மன்னார்குடி ராஜகோபாலப்பெருமாளான மன்னார் பெயரில் பள்ளு இலக்கியமாக இது அமைந்துள்ளது. [1]

அமைப்பு[தொகு]

தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற இலக்கண அமைதிக்கேற்றவாறு, சிலம்பில் காணப்படுகின்ற விருந்திற்பாணி, ஏர்மங்கலம், முகவைப்பாட்டு முதலிய பாடல்களை ஒத்து அமைந்துள்ள இப்பள்ளு இலக்கியம், ஆடும்பள்ளி, அழகுடைய பள்ளி போன்ற வரிக்கூத்துக்களைத் தழுவியும் உள்ளது. [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 மன்னார் மோகனப்பள்ளு, மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 8.9.95
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_மோகனப்பள்ளு&oldid=1831057" இலிருந்து மீள்விக்கப்பட்டது