மன்ஜீத் கௌர்
மன்ஜீத் கௌர் (Manjeet Kaur ; பிறப்பு 4 ஏப்ரல் 1982) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய விரைவோட்ட விளையாட்டு வீரர் ஆவார். 16 சூன் 2004 அன்று சென்னையில் நடந்த தேசிய சுற்று தடகள போட்டியில் 51.05 வினாடிகளில் 400 மீட்டர் தேசிய சாதனையை படைத்தார்.[1] நவம்பர் 2001 முதல் கே. எம். பீனாமோல் வைத்திருந்த முந்தைய சாதனையை இவர் முறியடித்தார். இவ்வாறு செய்ததன் மூலம், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெற்றார். சித்ரா சோமன், ராஜ்விந்தர் கௌர், க. மா. பீனாமோல் ஆகியோருடன் சேர்ந்து 4 x 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தற்போதைய தேசிய சாதனையை வைத்திருக்கும் அணியை உருவாக்குகினார்.
ஒலிம்பிக் போட்டிகள்[தொகு]
பஞ்சாப் காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளரான , மன்ஜீத் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்காக போட்டியிட்டார். அங்கு இவரது அணி தற்போதைய தேசிய சாதனையை 3: 26.89 நேரத்துடன் அமைத்தது.[1] இவர்களது அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. [2] பின்னர், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இவர் 4 x 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு இவரது அணி சதி கீதா, சித்ரா கே. சோமன் ,மந்தீப் கவுர் ஆகியோர் 3: 28.83 நேரத்தில் முடித்து ஏழாவது இடத்தை பிடித்தனர்.[3]
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]
2006 ஆம் ஆண்டு தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மன்ஜீத் இந்தியாவை 4 x 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை பெற வழிநடத்தினார். முன்னதாக இதே நிகழ்வில், கசக்கஸ்தானைச் சேர்ந்த ஓல்கா தெரேஷ்கோவாவை பின்னுக்குத் தள்ளி மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2005 ஆம் ஆண்டில், இந்திய தடகளத்திற்கான இவரது பங்களிப்பிற்காக அருச்சுனா விருது வழங்கப்பட்டது. [4]
பொதுநலவாய விளையாட்டுக்கள்[தொகு]
மன்ஜீத் கவுர் 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீ ஓட்டத்தில் மந்தீப் கவுர், சினி ஜோஸ், அசுவினி அக்குன்சியுடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. 5 August 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Olympic Games 2004 – Results 08-27-2004 – 4x400 Metres Relay W Heats". IAAF. 4 June 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Olympic Games 2008 – Results 08-22-2008 – 4x400 Metres Relay W Heats". IAAF. 2009-09-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Arjuna Award". webindia123.com. 2011-06-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-04 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Manjeet Kaur profile at IAAF
- "Manjit Kaur". Sports-Reference.com. Sports Reference LLC. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்