மன்சூர் அகமது மாலிக்கு
Appearance
மன்சூர் அகமது மாலிக்கு (Manzoor Ahmad Malik) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியாவார். 2009 ஆம் ஆண்டில் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் சேர்ந்த இவர் 2015 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். அகமது மாலிக்கு தனது நீதிபதி தொழில் வாழ்க்கையில் சுமார் 50,000 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக அறிவித்து 2021 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1] குறிப்பாக இவர் குற்றவியல் நீதித்துறை தொடர்பான வழக்குகளுக்காக நன்கு அறியப்பட்டார்.[2] ஓய்வு பெறுவதற்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு மன்சூர் அகமது மாலிக்கு ஒரு தீர்ப்பை வழங்கினார்.[3] பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த இவர் இலவச சட்ட உதவி சங்கத்தையும் நிறுவினார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SC's Justice Manzoor Malik retiring today". The Express Tribune (in ஆங்கிலம்). 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
- ↑ Iqbal, Nasir (2021-05-01). "AGP wants judiciary's powers regulated to enforce rights". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
- ↑ "Pakistan Supreme Court bars execution of inmates with mental disorder" (in en-IN). The Hindu. 2021-02-10. https://www.thehindu.com/news/international/pakistan-supreme-court-bars-execution-of-inmates-with-mental-disorder/article33801492.ece.
- ↑ "Services rendered by Justice Manzoor Ahmad Malik recognised by the UN". BaaghiTV English (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.