மன்சூர் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்சூர் அகமது (Manzoor Ahmed) டி.எஸ்.சி ( உருது : منظور born; பிறப்பு 11 மார்ச் 1934) ஒரு பாகிஸ்தான் விஞ்ஞானி மற்றும் விஞ்ஞான தத்துவஞானி ஆவார். தற்போது இவர் சிந்து மாகாணத்தின் கராச்சியில் உள்ள உஸ்மான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ரெக்டராக பணியாற்றி வருகிறார். மற்றும் விஞ்ஞான தத்துவம் துறை பற்றிய கட்டுரைகள் மற்றும் நூல்களை ப வெளியிட்டதன் முலம் இவர் சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்டார். இவர் தத்துவ பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் . 

சுயசரிதை[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மன்சூர் அகமது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் மார்ச் 11, 1934 இல் உருது மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் வீட்டுக் கல்வி முறையில் இவரைப் பயிற்றுவித்தனர். பின்னர் இவர் ஒரு உள்ளூர் நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[1] மேலும் தனது ஏழு வயதில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கல்வியில் இவர் சிறந்து விளங்கினார். அஹ்மத் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். மேலும் மாநில அளவில் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதலிடம் பிடித்தார். இவர் ராசா இன்டர்-கல்லூரியில் (ஆர்.ஐ.சி) பயின்றார்.அங்கு இவர் அறிவியல் மற்றும் தத்துவ பிரிவினைப் பயின்றார். மேலும் பல்கலைக்கழக கல்லூரி தேர்வில் முதலிடம் பிடித்தார். அஹ்மத் அவரது குடும்பத்தினரால் மருத்துவம் படிக்க கேட்டுக்கொள்ளப்பட்டார். எனவே இவர் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் கராச்சியில் உள்ள டவ் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்தார். இருப்பினும், அஹ்மத் தத்துவப் பிரிவில் கல்வி கற்கவே விரும்பினார்.எனவே இவர் எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் சேராமல் சிந்து மாகாணத்தின் கராச்சிக்குச் சென்று எஸ்.எம். கலைக் கல்லூரியில் சேர்ந்தார்.

1947 ஆம் ஆண்டில், அஹ்மத் பாகிஸ்தான் குடியுரிமையைப் பெற்றார், 1951 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[1] அங்கு இவர் இயற்பியல், கணிதம் மற்றும் தத்துவம் படித்தார். 1953 ஆம் ஆண்டில் இவர் கணிதம் பிரிவில் பி. எஸ். சி பட்டம், தத்துவப் பிரிவில் பி. ஏ இளங்கலைப் பட்டமும், இயற்பியல் பிரிவிலும் பட்டம் பெற்றார்.1955 ஆம் ஆண்டில், அஹ்மத் அதே பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் எம்.ஏ.பட்டம் பெற்றார். ஹெச்இசி உதவித்தொகையுடன் அஹ்மத் தனக்கு விருப்பமான பள்ளியில் சேர ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்குச் சென்றார். அஹ்மத் லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார். இயற்பியலில் ஏற்பட்ட ஆர்வத்தைத் தொடர்ந்து அகமதுவுக்கு விஞ்ஞான தத்துவத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த முனைவர் பட்டம் வெளிநேர கணித மற்றும் தத்துவ கருத்தை மையமாகக் கொண்டது.[2]

கல்வி வாழ்க்கை[தொகு]

அஹ்மத் தனது நாட்டிற்கு திரும்பிய பின்னர் இவர் பாகிஸ்தான் அரசாங்கத்தில், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய கருத்தியல் கவுன்சிலின் தீவிர உறுப்பினராகவும் உள்ளார்.

நாட்டில் தத்துவ ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக செயல்படும் பாகிஸ்தான் தத்துவ காங்கிரஸின் (பிபிசி) தலைவராக அஹ்மத் இருந்தார்.மேலும் சிகாகோ பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் தத்துவம் குறித்து விரிவுரை செய்துள்ளார். அவருக்கு பிரவுன் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவை ஆய்வு உதவித் தொகைகளை வழங்கியுள்ளனர். .

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Khan, Bahzad Alam (12 January 2003). "AUTHOR: Dr Manzoor Ahmad: Impatient iconoclast". Dawn Group of Media industries. pp. 1–6 இம் மூலத்தில் இருந்து 21 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130121102051/http://archives.dawn.com/weekly/books/archive/030112/books8.htm. "In Pakistan a teacher is an autocratic giver whose wisdom must never be questioned. By the same token, a student is an acquiescent taker. Curiosity, which is otherwise a praiseworthy virtue, is regarded as a contemptible vice and is severely frowned upon" 
  2. Manzoor Ahmad, Ph.D. "Brief Biosketch" (google docs). Unknown publisher. https://docs.google.com/a/unlv.nevada.edu/viewer?a=v&q=cache:g2wrdEZlAWsJ:www.siut.org/bioethics/Manzoor%2520Ahmad%2520Edited%2520Biosketch.pdf+&hl=en&gl=us&pid=bl&srcid=ADGEESjrtvYfDqESS2z2uguBWalHSPagZv8X4qxXPiRFcAdUsjjFcO1RmLDO0pa9Cry-Fh5yA4elvMUK5Wb8MneYj_TUyjT4fk2wggk4C5f6sUY5CVAjVghdAeyptWOZISXcad_hflo9&sig=AHIEtbSqftYlsNQ3iAqgk6zRmV9zi02WqA. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_அகமது&oldid=3792723" இருந்து மீள்விக்கப்பட்டது