மன்சுதே கலைக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்சுதே கலைக் குழு
Hangul 만수대예술단
Hanja 萬壽臺藝術團
Revised Romanization மன்சுதே யேசுல்தான்
McCune–Reischauer மன்சுதே யேசுல்தான்

மன்சுதே கலைக்குழு (Mansudae Art Troupe) என்பது வட கொரிய இசைக் கலைஞர்களின் குழுவாகும். இது இசைக்கூத்துகளையும் இசையையும் நடனச் சுற்றுகளையும் நிகழ்த்துகிறது.

இது 1969 செப்டம்பர் 27 இல் உருவாகிய நடுவண் கலைக் குழுவின் வழித்தோன்றலாக்க் கருதப்படுகிறது. ஆனால், கொரிய நடுவண் செய்தி முகமையின்படி, "இதன் முன்னமைப்பு பியோங்யாங் கலைக் குழு ஆகும். இது வட கொரிய நாட்காட்டியின்படி யூச்சே 35 இல்(1946) உருவாகியது".

மன்சுதே கலைக் குழு உலகின் 50 நாடுகளில் முற்போக்கு மக்களின் நட்புறவாகச் சென்று 700 தடவைக்கும் மேலாக கலை நிகழ்ச்சிகளை நட்த்தியுள்ளது. இது கொரியப் புரட்சி இசைக்கூத்தான பூக்காரச் சிறுமி (1972) உருவாக்குவதில் முதன்மையான பாத்திரம் வகித்துள்ளது இதை மேலும் 1,300 தடவை நடத்தியுள்ளது. இக்குழு "துறக்கப் பாடல் (Song of Paradise)" (1976) 340 முறை பாடியுள்ளது.

இக்குழு 1500 பாடல்களையும் 500 கருவியிசைக் கோவைகளையும் உருவாக்கியுள்ளது. இது கிம் Il-சங் ஆணை விருதை 1972 இல் பெற்றுள்ளது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சுதே_கலைக்_குழு&oldid=2142954" இருந்து மீள்விக்கப்பட்டது