மன்சி அகர்வால்
மன்சி அகர்வால் | |
|---|---|
| பிறப்பு | 10 சூன் 1984 தில்லி, இந்தியா |
| பணி | திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 2008 – தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | அரிந்தம் பட்டாச்சார்ஜி |
| வலைத்தளம் | |
| https://www.mansiaggarwal.com/ | |
மன்சி அகர்வால் (Mansi Aggarwal) (பிறப்பு சூன் 10,1984) ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் நடன இயக்குநரும் ஆவார். இவர் இந்தியத் திரைப்படத் துறையில் பாடல்களை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளதோடு நடனங்களை இயக்கியும் உள்ளார்.[1][2] நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடித்த ஷாங்காய் திரைப்படத்தின் "பாரத் மாதா கி ஜெய்" என்ற பாடலை நடனமாடியதற்காக இவர் மிகவும் புகழ் பெற்றார். இந்தப் பாடல் மிகப்பிரபலமடைந்து இந்தியாவில் வெற்றி பெற்றது. மேரி கோம் படத்தில் பிரியங்கா சோப்ரா, கை போ சே படத்தில் ராஜ்குமார் ராவ், தேவ் டி படத்தில் அபய் தியோல் ஆகியோருடன் இவர் பணியாற்றியுள்ளார்.[3]
நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடித்த ஷாங்காயில் இருந்து "பாரத் மாதா கி ஜெய்" பாடலுக்காக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார், இந்தப் பாடல் பார்வையாளர்களால் விரும்பப்பட்டு இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. யங்கிஸ்தான் திரைப்படத்தின் "சுனோ நா சங்கர்மார்" பாடல் ஸ்டார்டஸ்ட், பிலிம்பேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[2]
நைகா, பீபா, சந்து பாம் போன்ற பெரிய வணிகக் குறியீடுகளுக்கான விளம்பரங்களுக்கும் இவர் நடனமாடியுள்ளார். புகழ் வாய்ந்த ஃபெமினா இதழில் இளைய நடன இயக்குநராக இவர் வெளியிடப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் குறும்படமான தி ஹேண்ட்பேக் மூலம் எழுத்தாளர்-இயக்குநராக அறிமுகமானார், இது 'ஹமாரா மூவி' யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்டது.[2][4][5] இவர் இயக்கிய இரண்டாவது படமான ரானி இலண்டனில் உள்ள லிஃப்ட் ஆஃப் குளோபல் நெட்வொர்க்குகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படம் தர்பங்கா பன்னாட்டுத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இது கோல்டன் ஜூரி பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இறுதிப் போட்டியாளராக இருந்ததோடு சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றது. ரானி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. எம்எக்ஸ் பிளேயரில் திரைப்பாய்வு செய்யப்படுகிறது. தி ஹேண்ட்பேக் மற்றும் ரானி திரைப்படங்கள் யின் யாங் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டன.[2][6][7]
தொடக்க கால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]1984 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் நாள் பிறந்த மான்சி, தில்லியில் வளர்ந்தார், அங்கு இவர் இந்தியப் பாரம்பரிய நடனமான கதக் பயிற்சி பெற்றார். இவருக்கு 7 வயதாக இருந்த போது கதக் பயிற்சி தொடங்கியது, பின்னர் இவர் நடன வடிவத்தில் விஷாரத் (பட்டதாரி) ஆனார். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு தில்லியில் இவர் மன்சி டான்ஸ் கிரியேஷன்ஸ் என்ற தனது நடன நிறுவனத்தைத் தொடங்கினார்.[8]
தில்லியில் ஒரு நடன நிகழ்ச்சியின் போது திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பால் முதன்முதலில் கண்டறியப்பட்டபோது பாலிவுட் திரைப்படங்களில் இவரது வாழ்க்கை தொடங்கியது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குலால் திரைப்படத்திற்கு நடன இயக்குநராக அனுராக் இவருக்கு வாய்ப்பு அளித்தார். இருப்பினும், இத்திரைப்படம் தாமதமானது, அபய் தியோல் நடித்த தேவ் டி. க்கு நடன இயங்குராகும் திட்டத்துடன் அனுராக் இரண்டாவது முறையாக தன்னிடம் வரும் வரை மான்சி கல்வியில் தனது கவனத்தைச் செலுத்தினார்.[9]
மன்சி ஒளிப்பதிவாளர் அரிந்தம் பட்டாச்சார்யாவை மணந்தார்.[10]
இந்தியத் திரைப்படத் துறையில் நடன அமைப்பு
[தொகு]மன்சி பின்வரும் பாலிவுட் திரைப்படங்களுக்கு நடனமாடியுள்ளார்.[11]
| ஆண்டு | திரைப்படம் |
|---|---|
| 2016 | வசந்தர் |
| 2015 | கௌன் கித்னே பானி மெய்ன்[12] |
| 2015 | நானக் ஷா ஃபகீர் |
| 2014 | மேரி கோம்[13] |
| 2013 | யங்கிஸ்தான் |
| 2013 | மிக்கி வைரஸ் |
| 2013 | மாசி |
| 2013 | கிப்பி |
| 2013 | காய் போ சே |
| 2012 | ஷாங்காய் |
| 2009 | குலால் |
| 2009 | தேவ் டி |
இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளராக திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் |
|---|---|
| 2018 | தி ஹேண்ட் பேக் |
| 2020 | ரானி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Handbag | Mansi Aggarwal | Director (in ஆங்கிலம்), retrieved 2022-03-14
- 1 2 3 4 "Bollywood Director Mansi Aggarwal Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 2022-03-14.
- ↑ "Changing Tune". India Today. 19 May 2012.
- ↑ admin (2017-09-02). "Mansi Aggarwal". Marathisanmaan (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 28 January 2022. Retrieved 2022-03-14.
- ↑ The Handbag | Short Film | Directed by Mansi Aggarwal (in ஆங்கிலம்), retrieved 2022-03-14
- ↑ "MX Player". www.mxplayer.in. Retrieved 2022-03-14.
- ↑ Aggarwal, Mansi (2020-10-16), Raani - The Queen (Short, Drama), Sanmaya Production, Yin Yang Films, retrieved 2022-03-14
- ↑ "I re-invented myself for films'". My Theatre Cafe. 24 June 2013. Archived from the original on 11 October 2016.
- ↑ "I can make anybody dance". 30 June 2012.
- ↑ "Arindam Bhattacharjee". IMDb. Retrieved 2022-03-14.
- ↑ "Mansi Aggarwal". IMDb.
- ↑ Kaun Kitney Paani Mein (2015) - IMDb, retrieved 2022-09-04
- ↑ "Mansi Aggarwal". IMDb (in ஆங்கிலம்). Retrieved 2022-08-31.