மன்சிரி இமால்
| மன்சிரி இமால் Mansiri Himal | |
|---|---|
மன்சிரி இமால் சூரிய உதயம் | |
| உயர்ந்த புள்ளி | |
| உச்சி | மனசுலு |
| உயரம் | 8,156 m (26,759 அடி)[1] |
| ஆள்கூறு | 28°32′58″N 84°33′43″E / 28.54944°N 84.56194°E[1] |
| புவியியல் | |
| நாடு | நேபாளம் |
| மாவட்டம் | கோர்க்கா மாவட்டம், மனாங் மாவட்டம் and இலம்சூங்கு |
| மூலத் தொடர் | இமையமலை |
| எல்லைகள் | அன்னபூர்ணா இமால், கணேசு இமால், சிரிங்கி இமால், குடாங் இமால் |
மன்சிரி இமால் (Mansiri Himal) எனபது நேபாளத்தின் வட-மத்திய பகுதியில் அமைந்துள்ள இமைய மலைத் தொடரின் ஒரு முக்கியமான துணை மலைத் தொடர் ஆகும்.[2] சிறிய மலைத் தொடராகவும் உயரமான மலைத் தொடராகவும் இது காணப்படுகிறது. காத்மாண்டுவிலிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) வடமேற்கே மன்சிரி இமால் அமைந்துள்ளது. மார்சுயாங்டி ஆறானது மன்சிரியை தென்மேற்கில் உள்ள அன்னபூர்ணா மலைத்தொடரிலிருந்து பிரிக்கிறது. பின்னர் இதன் ஒரு மேலடுக்கு துணை ஆறான தூத் கோலா, வடமேற்கில் உள்ள பெரி இமாலிலிருந்து பிரிக்கிறது. கிழக்கு பக்கத்தில், பூரி கண்டகி ஆறானது மன்சிரியை கணேசு இமால், செராங் அல்லது சிரிங்கி இமால் மற்றும் குடாங் இமால் ஆகியவற்றிலிருந்து பிரிக்கிறது.[3] இந்த நீரோடைகள் அனைத்தும் கண்டகி ஆற்றின் துணை ஆறுகளாகும்.
மன்சிரி மலைத்தொடர் மனாசுலு இமால் அல்லது கூர்க்கா மாசிஃப் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நிரந்தர பனிப்பாறைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், கடுமையான மலைப்பாதைகள், இமயமலை பனிப்பரப்புச் சூழல் ஆகியவை இம்மலைத் தொடரின் முக்கிய அம்சங்களாகும். பூமியின் இருபது மிக உயரமான சிகரங்களில் (குறைந்தது 500 மீட்டர் புவியியல் முக்கியத்துவத்துடன்) பின்வரும் சிகரங்களை இது கொண்டுள்ளது:
- மனசுலு, 8156 மீட்டர் (8ஆவது உயரமான மலை)
- இமால்சுலி, 7893 மீட்டர் (18ஆவது உயரமான மலை)
- நிகாடி சுலி, 7871 மீட்டர் (20ஆவது உயரமான மலை)
மன்சிரி மலைத்தொடர் அதன் உள்ளூர் நிலப்பரப்பு வேறுபாடுகளுக்காக குறிப்பிடத்தக்கது. இது மார்சுயாங்டி பள்ளத்தாக்கின் தரைமட்டத்திலிருந்து 22 கிலோமீட்டருக்கும் (14 மைல்) குறைவான கிடைமட்ட தூரத்தில் 7,000 மீட்டர் (23,000 அடி) உயரத்திற்கு மேல் உயர்ந்து நிற்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mountaineering in Nepal Facts & Figures" (PDF). Ministry of Culture, Tourism & Civil Aviation. Kathmandu: Government of Nepal. July 2014. p. 171. Archived from the original (PDF) on 2015-04-25. Retrieved 2019-12-23.
- ↑ Carter, H. Adams (1985). "Classification of the Himalaya". American Alpine Journal (American Alpine Club) 27 (59): 109–141. http://c498469.r69.cf2.rackcdn.com/1985/109_carter_himalaya_aaj1985.pdf. பார்த்த நாள்: April 29, 2011.
- ↑ Carter, op. cit., p. 128