உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரமா மாதவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரமா மாதவராஜ்
मनोरमा मलपे माधवराज
இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை, கர்நாடக அரசு
பதவியில்
2004–2009
சட்டமன்ற உறுப்பினர்-கருநாடகம்
பதவியில்
1972–1994
அமைச்சர், கருநாடக அரசு Government of Karnataka
பதவியில்
1989–1994
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2008
முன்னையவர்வினய் குமார் சோரகி
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிஉடுப்பி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மனோரமா மாதவராஜ்

1 சூன் 1940 (1940-06-01) (அகவை 86)
மங்களூர்,[1] கருநாடகம், இந்தியா
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மால்பே மாதவராஜ்
பிள்ளைகள்பிரமோத் மாதவராஜ்
வாழிடம்உடுப்பி
கல்விஇளங்கலை
முன்னாள் மாணவர்கருநாடகப் பல்கலைக்கழகம்
பணிவணிகம்
தொழில்அரசியல்வாதி
23 செப்டம்பர், 2006
மூலம்:

மனோரமா மாதவராஜ் (Manorama Madhwaraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும் அலுவலகப் பணியாளரும் ஆவார். இவர் 5, 8 மற்றும் 9ஆவது கருநாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் அமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார். இத்தேர்தல்களில் இவர் உடுப்பி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கருநாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார்.[2]

மனோரமா இந்தியாவின் 14ஆவது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் கருநாடகாவின் உடுப்பி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இத்தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3] அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் மனோரமா பாஜக கட்சியினை விட்டு வெளியேறி பதவி விலகினார்.

மனோரமாவின் மகன் பிரமோத் மத்வராஜ், 2013 முதல் 2018 வரை சித்தராமையாவின் காங்கிரசு அரசாங்கத்தில் கருநாடகாவின் அமைச்சராக இருந்தார்.[4]

வகித்த பதவிகள்

[தொகு]
  • 1972 - 1994, கருநாடகச் சட்டமன்ற உறுப்பினர்
  • 1974 - 1983, கருநாடக அரசின் அமைச்சர்.
  • 1989 - 1994, கருநாடக அரசின் அமைச்சர்.
  • 2001 - 2003, மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் (அமைச்சர் தகுதியுடன்).
  • 2004, 14ஆவது மக்களவை உறுப்பினர்
  • 2004, நீர்வளக் குழுவின் உறுப்பினர்
  • 16 ஆகத்துட் 2006 முதல் 2009 வரை, பெண்கள் அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினர்
  • 5 ஆகத்து 2007 முதல் 2009 வரை, நீர்வளக் குழுவின் உறுப்பினர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. மக்களவை
  2. Paniyadi, Gururaj A. (2018-04-25). "In Udupi, the Madhwaraj family legacy towers over the rest". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2022-10-12.
  3. . 2022-05-07.
  4. "Congress top Udupi leader, a former MLA and minister, joins BJP". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-07. Retrieved 2022-10-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_மாதவராஜ்&oldid=4392544" இலிருந்து மீள்விக்கப்பட்டது