உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரமா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரமா சிங்
Manorama Singh
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1985
முன்னையவர்சந்திரசேகர் சிங்
பின்னவர்சந்திரசேகர் சிங்
தொகுதிபாங்கா
பதவியில்
1986–1989
முன்னையவர்சந்திரசேகர் சிங்
பின்னவர்பிரதாப் சிங்
தொகுதிபாங்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-08-23)23 ஆகத்து 1938
கல்யாண்பூர், முங்கேர், பிகார், இந்தியா
இறப்பு8 திசம்பர் 2024(2024-12-08) (அகவை 86)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்திரசேகர் சிங்
மூலம்: [1]

மனோரமா சிங் (Manorama Singh, 23 ஆகத்து 1938 – 8 திசம்பர் 2024)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவரது கணவர் சந்திரசேகர் சிங் பீகார் முதல்வராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் 1980களில் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பீகாரில் உள்ள பங்கா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

மனோரமா சிங் 1984-ல் பாங்கா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1985-ல் இவரது கணவர் தில்லியில் அமைச்சரானபோது தனது பதவியிலிருந்து விலகினார். இவரது கணவர் 1986-ல் இறந்தார். இதனால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் 1986-ல் நடத்தப்பட்டது. இவர் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற பாங்கா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா கட்சியின் ஜார்ஜ் பெர்னாண்டஸை எதிர்த்து 186,237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[6] ஆனால் 1989, 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. बांका की पूर्व सांसद मनोरमा सिंह का निधन, जिले में शोक की लहर
  2. "Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Retrieved 22 November 2017.
  3. "Bihar's biwi brigade". The Times of India. 6 October 2013. Retrieved 22 November 2017.
  4. Shiri Ram Bakshi; Sita Ram Sharma; S. Gajrani (1998). Contemporary Political Leadership in India: George Fernandes, Defence Minister of India. APH Publishing. pp. 101–. ISBN 978-81-7024-999-3. Retrieved 22 November 2017.
  5. India Today. Living Media India Pvt. Limited. 1987. Retrieved 22 November 2017.
  6. "Details of Bye Elections from 1952 to 1995". ECI, New Delhi. Retrieved 13 September 2017.
  7. "Banka Lok Sabha Election Result - Parliamentary Constituency".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_சிங்&oldid=4185985" இலிருந்து மீள்விக்கப்பட்டது