மனோஜ் பாஜ்பயீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் பாஜ்பயீ

மனோஜ் பாஜ்பயீ (Manoj Bajpayee பிறப்பு 23 ஏப்ரல் 1969), மனோஜ் பாஜ்பை என்றும் பரவலாக அறியப்படும் இவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக இந்தி திரைபப்டங்களில் நடிக்கிறார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். 2019 ஆம் ஆண்டில், கலைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.

பீகாரில் உள்ள நர்காடியகஞ்சில் ஒரு சிறிய கிராமமான பெல்வாவில் இவர் பிறந்தார். பாஜ்பாய் குழந்தை பருவத்திலிருந்தே ஒரு நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் தனது பதினேழு வயதில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். மேலும் தேசிய நாடக பள்ளியில் கற்பதற்கு விண்ணப்பித்தார். நான்கு முறை இவரின் விண்ணப்பம் அங்கு நிராகரிக்கப்பட்டது. கல்லூரியில் படிக்கும் போது தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். துஜ்கால் (1994) திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்திலும், சேகர் கபூரின் பண்டிட் குயின் (1994) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்திலும் பாஜ்பாய் நடித்தார். சில திரைப்படங்களில் நடித்த பிறகு ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டில் வெளியான சத்யா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பாஜ்பாய் பெற்றார். பின்னர் கவுன் (1999), ஷூல் (1999) போன்ற படங்களில் நடித்தார். சிறந்த நடிகருக்கான தனது இரண்டாவது பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றார்.

2003 ஆம் ஆண்டில் வெளியான பிஞ்சர் திரைப்படத்திற்காக இவர் தேசிய விருதுக்கான சிறப்பு நடுவர் விருதினை வென்றார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் ராஜ்நீட்டி எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் பேராசை குணம் கொண்டவரக நடித்தார்.இது பரவலான பாராட்டினைப் பெற்றுத் தந்தது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பஜ்பாய் ஏப்ரல் 23, 1969 அன்று பீகார் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள நர்காத்தியகஞ்ச் நகருக்கு அருகிலுள்ள பெல்வா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.[1] அவர் தனது மற்ற ஐந்து உடன்பிறப்புகளில் இரண்டாவது குழந்தை ஆவார். அவரது தங்கைகளில் ஒருவரான பூனம் துபே, திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். இவரது தந்தை விவசாயி, தாயார் இல்லத்தரசி ஆவார். பாஜ்பாய் தனது விடுமுறை காலங்களில் விவசாயம் செய்வார். குழந்தை பருவத்திலிருந்தே, அவர் ஒரு நடிகராக விரும்பினார். அவர்களின் தந்தை அவர்களின் கல்விக்காக பணம் சேகரிப்பதில் சிரமம் இருந்தது. அவர் நான்காம் வகுப்பு வரை ஒரு குடிசை பள்ளியில் படித்தார். பின்னர் தனது ஆரம்பப் பள்ளிப்படிப்பை கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். பெட்டியாவில் உள்ள மஹாராணி ஜானகி கல்லூரியில் தனது 12ஆம் வகுப்பை முடித்தார். பதினேழு வயதில் புதுடெல்லிக்குச் சென்று சத்யவதி கல்லூரியில் பயின்றார். பின்னர் இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரிக்குச் சென்றார். ஓம் பூரி மற்றும் நசீருதீன் ஷா போன்ற நடிகர்களிடமிருந்து இவர் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.மேலும் தேசிய நாடக பள்ளியில் கற்பதற்கு விண்ணப்பித்தார். நான்கு முறை இவரின் விண்ணப்பம் அங்கு நிராகரிக்கப்பட்டது. கல்லூரியில் படிக்கும் போது தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

பாஜ்பாய் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். ஆனால் பின்னர் இவர் விவாகரத்து பெற்றார்.[1] தனது முதல் படமான கரீப் (1998) படத்திற்குப் பிறகு நேஹா என்றும் அழைக்கப்படும் நடிகை ஷபானா ராசாவை அவர் சந்தித்தார். இவர்கள் 2006 இல் திருமணம் செய்து கொண்டனர்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Manoj Bajpai's Biography". Koimoi. Archived from the original on 2 October 2015. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பாஜ்பயீ&oldid=3757361" இலிருந்து மீள்விக்கப்பட்டது