மனு (ஆவணம்)
ஒரு மனு (Petition) என்பது ஏதாவது ஒன்றைச் செய்வதற்காக கோரிக்கை வைப்பதாகும். இது, பரவலாக ஓர் அரசு அதிகாரி அல்லது பொது நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. பேச்சுவழக்கில், ஒரு மனு என்பது அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்படும் ஒரு ஆவணம் ஆகும். இதில் கோரிக்கை வைக்கும் பலரும் தங்கள் கையொப்பங்களை இடுவார்கள். சில வேளைகளில் கடிதமாக எழுதப்படுவதை விட வாய்மொழியாகவோ இணையம் வழியாகவோ அனுப்பப்படலாம்.
வரலாறு
[தொகு]பண்டைய எகிப்தில் பிரமிடுகளைக் கட்டும் அடிமைகள் சிறந்த பணி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று மனு செய்ததே முதல் ஆவணப்படுத்தப்பட்ட மனுவாகும்.[1]
நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில் மனுக்கள் ஒரு பரிமாற்ற அலுவலகத்திற்கு (தொங்ஜெங் சி அல்லது டாங்ஃபா) அனுப்பப்பட்டன. அங்கு நீதிமன்றச் செயலாளர்கள் வந்திருக்கும் மனுக்களைப் பேரரசர்களுக்குச் சத்தமாக வாசித்துக் காட்டினர்.[2] மனுக்களை ஒரு எளியவர் முதல் அறிஞர் வரை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம். மனுக்கள் அரசவைக்கு வருவதற்கு முன்னர் பல படிகள் எடுக்கப்பட்டு, அரசருக்கு வாசித்துக் காட்டுவதற்கு முன்பாக மேற்பார்வை செயலாளர்கள் அலுவலகத்தில் சேமிக்கப்பட்டன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cheung, Helier (2019-03-26). "Brexit debate: Do petitions ever work?" (in en-GB). https://www.bbc.com/news/world-47693506.
- ↑ 2.0 2.1 Brook, Timothy (1999). The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China, p. 33. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-22154-3.
வெளியிணைப்புகள்
[தொகு]"Petition". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).