மனு பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனு பிரகாஷ்
Manu Prakash.jpg
ஜூன் 2012-ல், மடிப்புநோக்கியை பற்றிய விரிவுரையின்போது, முனைவர் மனு பிரகாஷ்.
பிறப்புமீரட், இந்தியா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
துறைஉயிரிப்பொறியியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி
அறியப்படுவதுமடிப்புநோக்கி, காகித மையவிலக்கி

மனு பிரகாஷ், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரிப்பொறியியல் துறை பேராசிரியராகப் பணி புரியும், விஞ்ஞானி ஆவார். மீரட் நகரில் பிறந்து வளர்ந்த இவர், 2002-ல் கான்பூர் ஐஐடியில், கணினி அறிவியலில் இளநிலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றார். இதன்பின், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில், ஊடகக் கலை மற்றும் அறிவியலில், 2008-ல் முனைவர் பட்டம் பெற்றார்.[1] இவர் மடிப்புநோக்கி[2][3] மற்றும் காகித மையவிலக்கிக்காக[4] நன்கு அறியப்பட்டவர். இவரும் இவரது குழுவும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், நீர்த்துளி அடிப்படையிலான கணினி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்[5][6]. உலக மக்களிடையே மருத்துவம்,கணிப்பிடுதல் மற்றும் நுண் நோக்கியியல் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் விதமான, சிக்கனமான புதுமைகள் மையப்படுத்தி இவரது வேலைபாடுகள் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் மெக்கார்தர் அறக்கட்டளை மதிப்புறு நபர் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_பிரகாஷ்&oldid=2707742" இருந்து மீள்விக்கப்பட்டது