உள்ளடக்கத்துக்குச் செல்

மனுபூர் போர் (1748)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனுபூர் போர்
அகமத் ஷா துரானியின் இந்தியப் போரின் ஒரு பகுதி பகுதி
நாள் 23சனவரி 1748
இடம் சிர்இந்த்-பதேகர்
தீர்க்கமான முகலாய வெற்றி.[1][2]
பிரிவினர்
முகலாயப் பேரரசு

உதவியவா் புல்கியன் மிஸ்ல்

துராணிப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
அகமது ஷா பகதூர்

மி மன்னு பாபா ஆலா சிங்

அகமது ஷா துரானி
பலம்
260,000-270,000 12,000

மனுபூர் போர் (Battle of Manupur) 1748 சனவரி 23 அன்று முகலாயப் பேரரசிற்கும் துராணிப் பேரரசிற்கும் இடையே நடந்த ஒரு போராகும்.

பின்னணி

[தொகு]

பாரசீக பேரரசர் நாதிர் ஷாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது படைத்தலைவர் அகமது ஷா துரானி பாரசீக ஆப்கானித்தானைக் கைப்பற்றி இந்தியாவின் முதல் படையெடுப்பைத் தொடங்கினார். இந்தியத் தரப்பில் முதல் இராணுவ எல்லையாக இருந்த பெசாவரை ஆக்கிரமித்தார். பின்னர், அவர் சத்ராவை அடைந்து, 1748 சனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஷாநனாவாஸ் கான் மற்றும் ஆதினாவை தோற்கடித்தார். வெற்றியைக் கண்டு, ஷாநவாஸ் தனது படைகளுக்கு தில்லிக்கு திரும்பச் செல்லுமாறு கட்டளையிட்டார்.

போர்

[தொகு]

தில்லிக்கு செல்லும் வழியில், அவரது இராணுவம் சிர்இந்த்-பதேகரில் நிறுத்தப்பட்டது. அங்கு முயின்-உல்-முல்க் அல்லது "மிர் மன்னு" போரைத் தொடர்ந்தார். போரில், அகமது ஷா துரானியின் பீரங்கிக் கிடங்கில் தீப்பிடித்தது. இதில் ஆயிரக்கணக்கான துராணி வீரர்கள் உயிருடன் எரிந்தனர். ஆகையால், அவர் இரவில் பின்வாங்க வேண்டியிருந்தது, இதன் விளைவாக அவர் தோல்வியடைந்தார். [3]

பின்விளைவு

[தொகு]

துரானியின் பின்வாங்கலுக்குப் பிறகு, பீதியடைந்த முகலாயர் அவர்களைத் துரத்தவில்லை. ஆனால், சரத் சிங் மற்றும் பாட்டியாலா ஆலா சிங்கின் மகாராஜா ஆகியோரின் கீழ் சீக்கிய குழுக்களால் படையெடுப்பாளர்கள் துன்புறுத்தப்பட்டனர். [[காபூல்}காபூலுக்கு]] திரும்பும் வழியில் சீக்கியர்கள் தங்கள் செல்வத்தையும், குதிரைகளையும் கொள்ளையடித்தனர். ஆகவே, ஷாவின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. ஆனால் சீக்கியர்களுக்கு தங்களை 1748 மார்ச் மாதம் அமிர்தசரசில் சீக்கிய கூட்டமைப்பின் இராணுவத்தை தால் கல்சாவில் ஒழுங்கமைக்க ஒரு வாய்ப்பை அளித்தது. [4][5]

குறிப்புகள்

[தொகு]
  1. Grewal, J.S. (1990). The Sikhs of the Punjab. Cambridge University Press. p. 87. ISBN 0-521-63764-3. Retrieved 15 April 2014.
  2. Jacques, Tony (2006). Dictionary of Battles and Sieges. Greenwood Press. p. 631. ISBN 978-0-313-33536-5. Archived from the original on 2015-06-26. Retrieved 2015-10-01. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  3. History of Islam, p. 509, கூகுள் புத்தகங்களில்
  4. Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India 1707–1813. Sterling Publishers Pvt. Ltd. p. 251. ISBN 978-1-932705-54-6. Retrieved 2010-09-23.
  5. Gandhi, Rajmohan (14 September 2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten. ISBN 9789383064410. Retrieved 2015-08-21.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுபூர்_போர்_(1748)&oldid=4326380" இலிருந்து மீள்விக்கப்பட்டது