மனுபாய் ஜோதானி
மனுபாய் ஜோதானி | |
---|---|
ஜோதானி 1946இல் | |
தொழில் | எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், பறவையியலாளர், தாவரவியலாளர் |
மனுபாய் லல்லுபாய் ஜோதானி (Manubhai Lallubhai Jodhani 28 அக்டோபர் 1902 - 29 டிசம்பர் 1979) குஜராத்தி எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், பறவையியலாளர், தாவரவியலாளர் மற்றும் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த பதிப்பாசிரியர் ஆவார். இவர் 15 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். [1]
வாழ்க்கை
[தொகு]1902 அக்டோபர் 28 அன்று பர்வாலாவில் (தற்போது இது போடாட் மாவட்டத்தில் உள்ளது) பிறந்தார். [2] [3] [4] இவர் தனது ஆரம்ப பள்ளி கல்வியை லீம்புடியில் பெற்றார். 1920 இல் பார்வாலாவில் பள்ளி ஆசிரியரானார். 1930 இல் அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்வதற்காக தனது பதவியினை பதவி விலகினார்.[5] தொடர்ந்து மகாத்மா காந்தி முன்னெடுத்த உப்பு சத்தியாகிரகத்தில் கல்ந்துகொண்டார்.தோல்ராவில் நடந்த உப்புச் சத்யாகிரகத்தில் இவர் முக்கிய பங்காற்றினார். அதனால் இவர் மீது ஆங்கிலேய அரசு கைதாணை பிறப்பித்தது.[6]
இவர் 29 டிசம்பர் 1979 இல் இறந்தார். [4] [7] இவரது மகன் வசந்த்குமார் ஜோதாயும் அறிவியல் மற்றும் விலங்குகள் குறித்த எழுத்தாளர் ஆவார். [2]
படைப்புகள்
[தொகு]ஜோதனி நாட்டுப்புற இலக்கியத் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார். [8] [5] இவர் ஒரு பறவையியலாளர் மற்றும் தாவரவியலாளராகவும் இருந்துள்ளார். [9] குஜராத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்தான கதைகளின் முன்னோடியாக இவர் அறியப்பட்டார்.[10][11]
நாட்டுப்புற இலக்கியம் குறித்த இவரது படைப்புகளில் சோரதி ஜவாஹிர் (1930), சோரதி விபூட்டோ (1964), ராண்டல்னா கீட்டோ, குஜராத்தி லோக்சஹித்யா மாலா மற்றும் ஜனபாத் (1940, 1944, 1955; ஸ்கெட்சஸ்) ஆகியன அடங்கும். [12]
இவரது சிறுகதைகளில் ஷில்வதி (1928) மற்றும் சுந்தரியோனா சங்கர் ஆகியன ஆகும். நக்மதி (1932) இவர் எழுதிய ஒரே புதினம் ஆகும். காதிமிதி பாலாவடோ மற்றும் குமரோனி பிரவாஸ்கதா ஆகியன குழந்தைகள் இலக்கியத்திற்கான இவரது படைப்புகள் ஆகும். [2]
இவர் சரத் சந்திர சட்டோபாத்யாயின் பிந்தூர் சேலே அஸ் பிந்து (1939) என்பதனை மொழிபெயர்த்தார். [13]
அங்கீகாரம்
[தொகு]அகமதாபாத்தில் உள்ள பால்டியில் இவரது பெயரில் ஒரு சாலை உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Akademi, Sahitya. Whos Who Of Indian Writers (in ஆங்கிலம்). Dalcassian Publishing Company.
- ↑ 2.0 2.1 2.2 Whos Who Of Indian Writers. New Delhi: Sahitya Akademi. 1961. p. 143.Whos Who Of Indian Writers. New Delhi: Sahitya Akademi. 1961. p. 143.
- ↑ "મનુભાઈ જોધાણી" (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
- ↑ 4.0 4.1 Desai, Ratilal Deepchand. Amruta-Sameepe (in குஜராத்தி). Gurjar Granthratna Karyalaya.Desai, Ratilal Deepchand (2003). "7. ધિંગા લોકસાહિત્યકાર શ્રી મનુભાઈ જોધાણી". In Desai, Nitin R. (ed.). Amruta-Sameepe (in Gujarati). Ahmedabad: Gurjar Granthratna Karyalaya. pp. 373–374.
- ↑ 5.0 5.1 "મનુભાઈ જોધાણી" (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28."મનુભાઈ જોધાણી" (in Gujarati). Gujarati Sahitya Parishad. Retrieved 2020-04-28.
- ↑ Madhad, Raghavji (2020-03-25). "આંખો આંસુથી વહેવા લાગી હતી: સૌરાષ્ટ્રના સ્વાતંત્ર્ય સૈનિકો અને લડતો". Sandesh. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
- ↑ Gujarat. Smt Hiralaxmi Navanitbhai Shah Dhanya Gurjari Kendra, Gujarat Vishvakosh Trust.
- ↑ "Contribution of Gujarat to the Field of Folklore". Indian Folklore Research Journal (National Folklore Support Centre) (2–5): 77. 2002. https://books.google.com/books?id=MxraAAAAMAAJ&q=manubhai+jodhani&dq=manubhai+jodhani.
- ↑ Daniel, J. C.; Ali, Sálim; Ugra, Gayatri (2003). Petronia: Fifty Years of Post-independence Ornithology in India : a Centenary Dedication to Dr. Salim Ali, 1896-1996. Bombay Natural History Society. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-566653-3.
- ↑ JAMUNA, K. A. (2017-06-01). Children's Literature in Indian Languages (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2456-1.
- ↑ Jamunā, Ke E.; Division, India Ministry of Information and Broadcasting Publications (1982). Children's literature in Indian languages (in ஆங்கிலம்). Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India.
- ↑ Magara, Naresh (January–February 2019). "ગુજરાતી લોકસાહિત્યક્ષેત્રે થયેલ સંશોધન – સંપાદનની કામગીરીની રૂપરેખા" (in gu). Sahitya Setu (Tanvi Shukla) 9 (49). பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-2372. http://www.sahityasetu.co.in/issue49/magara.php.
- ↑ Śaratcandra o Bhāratīẏa sāhitya (in Bengali). Nikhila Bhārata Baṅga Sāhitya Sammelana, Dillī Sākhā. 1976. p. 1957.