மனுஜோதி (சிற்றிதழ்)
Appearance
மனுஜோதி | |
---|---|
வெளியீட்டாளர் | டி.பால் உப்பாஸ் என். லாறி |
இதழாசிரியர் | டி.பால் உப்பாஸ் என். லாறி உதவி ஆசிரியர்கள்: தூத்துக்குடி கே.பி பாலு, குருவிநத்தம் பி. லாசர் |
வகை | ஆன்மிகச் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | காலாண்டு |
முதல் இதழ் | |
நிறுவனம் | மனுஜோதி ஆசிரமம் |
நகரம் | முக்கூடல் |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | மனுஜோதி காலாண்டு இதழ் மனுஜோதி ஆசிரமம், ஓடைமறிச்சான் அஞ்சல், பாப்பாக்குடி வழி திருநெல்வேலி மாவட்டம் - 627 602, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள மனுஜோதி ஆசிரமத்திலிருந்து ஆசிரமச் செய்திகள் மற்றும் ஆன்மிகத் தகவல்களைக் கொண்டு வெளியாகும் சிற்றிதழ் மனுஜோதி. இந்த இதழ் முன்பு மாத இதழாக வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது காலாண்டு இதழாக மாற்றப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் மற்றும் வெளியிடுபவராக டி.பால் உப்பாஸ் என் லாறி என்பவரும், உதவி ஆசிரியர்களாக தூத்துக்குடி கே.பி.பாலு மற்றும் குருவிநத்தம் பி.லாசர் என்பவரும் உள்ளனர். இது ஒரு இலவச இதழாக உள்ளது. விரும்பிக் கேட்பவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.