மனீத் சௌகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனீத் சவுகான் (Maneet Chauhan பிறப்பு 27 அக்டோபர் 1976 பஞ்சாப் லூதியானா ) ஓர் இந்திய அமெரிக்க சமையல்காரர் மற்றும் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த தொலைக்காட்சி ஆளுமை ஆவார். முன்னதாக சிகாகோ, நாஷ்வில்லி மற்றும் நியூயார்க்கில் உள்ள பல குறிப்பிடத்தக்க உணவகங்களின் நிர்வாக சமையல்காரராக இருந்தார். [1] ஃபுட் நெட் ஒர்க்கின் சாப்டு நிகழ்ச்சியில் நீதிபதியாக இடம்பெற்றார். இவர் தி நெக்ஸ்ட் அயர்ன் ஷெஃப், [2] ஏபிசியில் தி வியூ ஏபிசி, [3] அயர்ன் செஃப் அமெரிக்கா, தெ நெக்சுடு அயர்ன் செஃப் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.[4] மற்றும் ஃபுட் நெட்வொர்க்கில் அமெரிக்காவின் ஒர்ஸ்டு குக் இன் அமெரிக்கா போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக கலந்து கொண்டார். [5] இவர் 2021 ஃபுட் நெட்வொர்க் போட்டி வாகையாளர் போட்டியில் வென்றார். [6]

சவுஹானை ஜனாதிபதி ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு 2014 ஆம் ஆடில் ஈஸ்டர் எக் ரோல் ஹன்டருக்கு அழைத்தனர். [7] செப்டம்பர் 2012 இல் அதன் முதல் மன்றத்தின் ஒரு பகுதியாக 100 செல்வாக்கு மிக்க இந்திய அமெரிக்க தலைவர்களுக்கு விருந்துக்கு அழைத்த இந்தியஸ்போராவின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்த மூன்று நாள் மன்ற நிகழ்வுகள் சமூகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் கூட்டு இலக்குகளை வெளிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டது. [8] சௌகான், அமெரிக்காவின் சமையல் கல்வி நிறுவனம், கல்லூரியின் ஹைட் பார்க் வளாகத்தில் முக்கிய உரையை வழங்கினார் மேலும் அமெரிக்காவின் சமையல் நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டார். "உணவு சேவை மற்றும் விருந்தோம்பல் தொழிற்துறைக்கு சிறப்பான சேவை" வழங்கியவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றார். [9]

தொழில் வாழ்க்கை[தொகு]

சௌகான் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். [10] இவர் மணிப்பால், இந்தியா, மணிபால் பல்கலைக்கழகத்தில் உள்ள வெல்கம் குரூப் ஆஃப் கிரேஜுவேட் ஸ்கூலில் தனது சமையல் வாழ்க்கையைத் தொடங்கினார் , [10] அங்கு இவர் உணவக மேலாண்மைப் பிரிவில் சிறப்பிடம் பெற்று இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவர் நியூயார்க்கின் ஹைட் பார்க்கில் உள்ள அமெரிக்காவின் சமையல் நிறுவனத்தில் [11] கலந்து கொண்டார் மற்றும் இவரது வகுப்பிற்கான அனைத்து விருதுகளையும் இவர் வென்றார். ஒரு பயிற்சியாளர், சமையல்காரராக, இவர் இந்தியாவில் ஓபராய் குழு, தாஜ் குழு, வரவேற்பு குழு மற்றும் ஷெரட்டன் குழுவுடன் பணிபுரிந்தார்.

2000 ஆம் ஆண்டில் பட்டப்படிப்புக்குப் பிறகு, நியூ ஜெர்சியிலுள்ள செர்ரி ஹில்லில் ஒரு புதிய உணவகத்திற்கு நிர்வாகியாக பணியமர்த்தப்பட்டார், அங்கு இவர் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கி உணவகத்தின் இருக்கை திறனை 70 இடங்களிலிருந்து 140 இடங்களுக்கு விரிவுபடுத்தினார். 2003 ஆம் ஆண்டில், 27 வயதில், இல்லினாய்ஸின் சிகாகோவில் வெர்மிலியன் [12] இன் நிர்வாக சமையல்காரரானார், தி சிகாகோ ட்ரிப்யூனில் இருந்து 3-நட்சத்திரங்களைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டில், இவர் நியூயார்க்கில் வெர்மிலியன்[13] சென்றார், அங்கு இவர் டைம் இவுட் இதழால் 'பெஸ்ட் இம்போர்டட் டூ நியூயார்க்' ஆக பரிந்துரைக்கப்பட்டார். இவரது பாணி இந்திய உணவுகளின் பாரம்பரியத்தைக் கொண்ட "உலகளாவிய இணைவு" என்று விவரிக்கப்பட்டுள்ளது. [14]

சமுக சேவை[தொகு]

மனீத் சவுகான் சமுதாயத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு பயனடயும் வகையிலான நிதி சேகரிப்பு விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவில் [15] மற்றும் பிலிப்பைன்சில் ஏற்பட்ட ந்ற்பட்ட சூறாவளி நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். [16] [17] [18] [19]

சான்றுகள்[தொகு]

  1. "Get to know Chopped judge Maneet Chauhan". Food Network. Archived from the original on 9 February 2013. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
  2. "Maneet Chauhan (NIC3 Rival)". Food Network. Archived from the original on 26 April 2013. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
  3. "The View: Thursday, August 9, 2012". The View.
  4. "Today Show: Thursday, July 10, 2104". Today Show.
  5. "Worst Cooks in America: Sunday, March 31, 2014". Worst Cooks in America. TV Guide. Archived from the original on அக்டோபர் 30, 2020. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 25, 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "Indian-Origin Chef Maneet Chauhan Has Won The Tournament of Champions". femina.in.
  7. "Maneet Chauhan Indie Culinaire". Food Network. Archived from the original on 8 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  8. "Indiaspora - The Story". Food Network. Archived from the original on 2014-02-08.
  9. "Miraval Chef Series". Miraval Resorts. Archived from the original on 8 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  10. 10.0 10.1 "Maneet Chauhan". Maneet Chauhan's official website.
  11. "CIA alumni profiles". Culinary Institute of America. CIA. Archived from the original on 18 November 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
  12. "India's Latin Fusion". https://www.wsj.com/articles/SB120783486473304817. 
  13. "India's Spice Girls: American Culinary Superstars" இம் மூலத்தில் இருந்து 2013-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130216183947/http://www.time.com/time/travel/article/0,31542,1990624,00.html. 
  14. "Maneet Chauhan - Profile of a culinary powerhouse". Daily Food and Wine. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  15. "Half a million children's lives changed in a decade - CRY America celebrates its 10th anniversary". Archived from the original on 31 May 2013. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
  16. "Media Center".
  17. News, Vegas (23 November 2013). "Chef, Author and "Chopped" Judge Maneet Chauhan to Host Fundraiser at Origin India Dec. 4". {{cite web}}: |last= has generic name (help)
  18. "CHEF, AUTHOR AND CHOPPED JUDGE MANEET CHAUHAN TO HOST FUNDRAISER AT ORIGIN INDIA". Vegas24Seven.com. 21 November 2013.
  19. "Las Vegas News | Breaking News & Headlines". Las Vegas Review-Journal.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனீத்_சௌகான்&oldid=3566961" இலிருந்து மீள்விக்கப்பட்டது