உள்ளடக்கத்துக்குச் செல்

மனிஷா அசோக் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிஷா அசோக் சவுத்ரி
தகிசர், மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014–முதல்
தொகுதிதகிசர் (மும்பை)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சூன், 1962
பால்கர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2
வாழிடம்போரிவளி, மும்பை
பணிஅரசியல்வாதி
இணையத்தளம்mahabjp.org

மனிஷா அசோக் சவுத்ரி (Manisha Ashok Chaudhary) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் மகாராட்டிரா சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக உறுப்பினராக உள்ளார்.[1] 2024 மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள தகிசர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சவுத்ரி மகாராட்டிராவின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள போரிவலியைச் சேர்ந்தவர். இவர் அசோக் சவுத்ரியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அரசியல்

[தொகு]

மனிஷா 1998 முதல் 2001 வரை தஹானு நகர் பாலிகையின் மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். பின்னர், இவர் 2012 முதல் 2014 வரை போரிவலியிலிருந்து பிஎம்சி பகுதி உறுப்பினராக இருந்தார். மனிஷா முதலில் 2014 மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தகிசர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் சிவசேனா வேட்பாளர் வினோத் கோசல்கரை 38,578 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019 மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் அருண் சாவந்தை 63,917 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மனிஷா மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், கோசல்கரை மீண்டும் தோற்கடித்தார். இவர் இந்த முறை சிவ சேனா (யு.பி.டி) சார்பில் போட்டியிட்டு 44,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Smt.Manisha Chaudhari (Winner)". myneta.info. Retrieved 24 April 2016.
  2. "Dahisar Assembly Constituency Elections Maharashtra". elections.in. Retrieved 16 April 2016.
  3. "Chaudhary Manisha Ashok of BJP WINS the Dahisar constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Archived from the original on 23 April 2016. Retrieved 16 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிஷா_அசோக்_சவுத்ரி&oldid=4232517" இலிருந்து மீள்விக்கப்பட்டது