மனிந்தர் சிங்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 13 June 1965 புனே, இந்தியா | (வயது 59)|||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது கை வழமையில்லாச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக் இன்போ, 4 பெப்ரவரி 2006 |
மனிந்தர் சிங் (Maninder Singh (cricketer) (பிறப்பு 13 ஜூன் 1965, இந்தியாவின் புனே ) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும் இவர் 1980 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 1982 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 145 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1387 ஓட்டங்களையும் , 110 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 27 ஓட்டங்களையும் ,59 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 49 ஓட்டங்களையும் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 99 ஓட்டங்களை எடுத்துள்ளார்.தனது தேர்வுத் துடுப்பாட்ட வாழ்க்கையில் ஒரு நூறு ஓட்டங்களை கூட எடுத்ததில்லை.[1]
முதல் தரத் துடுப்பாட்டம்
[தொகு]இவர் 1980 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.1934 ஆம் ஆண்டு வரை இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.
பட்டியல் அ
[தொகு]1983 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இவர் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]1983 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சனவரி 21 இல் கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணியில் 80 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2]
1983 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். டிசம்பர் இல் கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணியில் 80 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
1983 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். டிசம்பர் 23 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 2 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அப்துல் காதர் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 23 நிறைவுகள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 2 ஓவர்களை வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஒரு பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இம்ரான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 86 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Walmsley, Keith (2003). Mosts Without in Test Cricket. Reading, England: Keith Walmsley Publishing Pty Ltd. p. 457. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0947540067.
- ↑ "Full Scorecard of Pakistan vs India 4th ODI 1983 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
- ↑ "Full Scorecard of Pakistan vs India 2nd Test 1982 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.