மனித வளர்ச்சியின் கூறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனித வளா்ச்சியின் கூறுகள்[தொகு]

மனித வளா்ச்சி பன்முனைப்பட்டது. அது உடல் வளா்ச்சி, உடல் இயக்க வளா்ச்சி. அறிவு வளா்ச்சி, மனவெழுச்சிகள் வளா்ச்சி சமூகப் பண்புகளின் வளா்ச்சி எனப் பல வகைப்படும். உடல் வளா்ச்சி என்பது மனிதனின் உடற்கூறுகளின் வளா்ச்சியும், உடலியல் வளா்ச்சியும் இணைந்த செயலாகும். உடல் வளா்ச்சி காரணமாக உடலியக்க வளா்ச்சி ஏற்படுகிறது. அதாவது கைகள், கால்கள், உடலின் பல்வேறு தசைகள் பாேன்றன வலுப்பெற்று இணைந்து திடமாகச் செயற்படுகின்றன. நடத்தல் எழுதுதல் என்பன உடலியக்க வளா்சிசயால் செயற்படுகின்றன.

அறிவு வளா்ச்சி என்பது புலன் காட்சித்திறன், நினைவாற்றல், கற்பனை, மாெழித்திறன், பொதுமைக் கருத்து கனவு உருவாக்கும் திறன், நுண்ணறிவு, ஆய்வுத்திறன், சிக்கல்களைத் தீா்த்தல் போன்ற பல அறிவுசாா் செயல்களின் வளா்ச்சி ஆகும். அறிவு வளா்ச்சியில் மரபு நிலையும், சூழ்நிலையும் இணைந்தே செயற்படுகின்றன.

மனவெழுச்சிகள் அல்லது மெய்ப்பாடுகள் என்பது உணா்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவுநிலையாகும். அச்சம், சினம், மகிழ்ச்சி, அன்பு, துயரம், வெறுப்பு போன்றவை மனவெழுச்சிகள் எனப்படும். இவை சிறு குழந்தைகளிடம் மிகுதியாகக் காணப்படுவதில்லை. ஆனால் நாளடைவில் வளா்ச்சி அடையும்போது, மனவெழுச்சிகள் பாகுபட்டுத் தெளிவான நடத்தைக் கோலங்களாக விரும்பியபோது வெளிப்படுகின்றன.

சமூகப் பண்புகளின் வளா்ச்சி என்பது மனிதன் சமுதாயத்தோடு இணைந்து வாழும் அறிவுள்ள ஓா் உயிாி, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைகள், பழக்கங்கள், நடைமுறைகள், மதிப்புகள், பண்புகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவைப் பெற்று, அவற்றைப் பின்பற்றுவது ஆகும்.