மனித முடிவு சாத்தியக்கூறு காரணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஓவியரின் பார்வையில் பெரும் விண்கல் மோதல். ஒரு பில்லியன் அணுக்குண்டுகளின் ஆற்றல் கொண்ட விண்கல் மோதலினால் டைனோசோர்கள் முற்றாக அழிந்துபோனதாகக் கருதப்படுகிறது.[1]

மனிதகுல முடிவுக்கான சாத்தியக்கூறுகள் (Global catastrophic risks) என்பது, உலக அளவில், மனிதகுல இருப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக் கூற்று நிகழ்வுகளைக் குறிக்கிறது.[2] இவ்வாறான நிகழ்வுகள் நவீன மனித நாகரிகத்தை முற்றாக அழிக்கவோ அல்லது முடக்கிவிடவோ கூடும். மேலும் கடுமையான சூழல்களில் மனிதகுலம் முற்றாகவே அழிந்துவிடலாம்.[3] புனைகதைகளில், சமயப் புராணங்களில், விஞ்ஞான வருவதுரைகளில், அரசியலில் என பல தளங்களில் மனிதகுல முடிவுக்கான சாத்திய கூறுகள் அலசப்படுவதுண்டு.

பேரெரிமலை வெடிப்பு,[4] விண்கல் மோதல் போன்றவை போதிய ஆற்றல் கொண்டவையாக அமையும்போது இத்தகைய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. மனித நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளும், நுண்ணறிவு கொண்ட மனிதகுலத்துக்கு ஆபத்தாக அமையக்கூடியவை. குறிப்பாக புவி சூடாதல், அணு ஆயுதப் போர், உயிரிப் பயங்கரவாதம் போன்றவை இத்தகையவை. மனிதகுல அழிவு ஏற்பட்டால் அது இயற்கைக் காரணிகளால் அல்லாமல் மனிதனால் ஏற்படும் நிகழ்வுகளினாலேயே ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக மனிதகுல எதிர்காலம் நிறுவனம் நம்புகிறது.[5][6]

காரணிகள்[தொகு]

இவ்வாறான ஒரு சாத்தியக்கூற்றுக்கான காரணிகளாகப் பல நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. பின்வருவன அக்கூறுகளின் ஒரு பட்டியல் ஆகும்.

தீவாய்ப்புகளின் வகைப்பாடு[தொகு]

தத்துவவியலாளர் நிக் பொசுட்ரம் தீவாய்ப்புக்களை அவற்றின் செயற்பரப்பு, தீவிரத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்.[7] உலகம் தழுவிய தீவாய்ப்பாக அமைவதற்கு அவற்றின் செயற்பரப்பு உலகம் தழுவியதாகவும், தீவிரம் நீண்டகாலம் நிலைத்திருப்பதாகவும் இருக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார். செயற்பரப்பில் பல தலைமுறைகளைத் தழுவுவதாகவும், அதிதீவிரத்தன்மை கொண்டதாகவும் உள்ளவற்றை இருத்தலியல் தீவாய்ப்பு என்று அவர் வகைப்படுத்துகிறார். உலகளாவிய பேரழிவுத் தீவாய்ப்பு உலகிலுள்ள மிகப் பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிடும் என்றாலும், மனிதகுலம் இதிலிருந்து மீளக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. இன்னொரு வகையில் இருத்தலியல் தீவாய்ப்பு மனிதகுலத்தை அழித்துவிடலாம் அல்லது நாகரிகம் மீண்டும் மீளமைக்கப்படுவதைத் தடுத்துவிடலாம். இருத்தலியல் தீவாய்ப்பு மிகவும் முக்கியமானது என்று பொசுட்ரம் கருதுகிறார்.[8]

பொசுட்ரம் நான்கு வகையான இருத்தலியல் தீவாய்ப்புக்களை அடையாளம் கண்டுள்ளார். முதலாவது "திடீர்" நிகழ்வுகள் (Bangs). இவை எதிர்பாராமல் திடீரென நிகழும் பேரழிவுகள். இவை தற்செயலாக நிகழ்பவையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவனவாகவோ இருக்கலாம். தீய நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் நானோ தொழில்நுட்பம், அணுவாயுதம் போன்றவை மேற்படி "திடீர்" நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என பொசுட்ரம் எண்ணுகிறார். இரண்டாவது, "நொருங்கல்" நிகழ்வுகள் (Crunches). இந்த நிகழ்வுகளின்போது மனிதகுலம் தப்பிப் பிழைக்கும். ஆனால், நாகரிகம் மீளமுடியாமல் அழிக்கப்படும். இயற்கை வளங்கள் தீர்ந்துபோதல், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்கும் உறுதியான ஒரு உலக அரசு, சராசரி அறிவாற்றலைக் குறைக்கக்கூடிய மரபியலின் உயர்பண்பிழப்பு அழுத்தங்கள் என்பன "நொருங்கல்" நிகழ்வுக்குக் காரணமாக அமையக்கூடும். அடுத்தது "--" (Shrieks). இது விரும்பத்தகாத எதிர்காலத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மூளை கணினியுடன் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டால், அது மனித நாகரிகத்தின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். இது மோசமாக அமையக்கூடும். இவ்வாறான ஒரு நிலை, குறைபாடுள்ள பேரறிவாற்றலை உருவாக்கி ஒரு அடக்குமுறைச் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தலாம். நான்காவது "--" (Wimpers). இவை மனித நாகரிகத்தின் அல்லது நடைமுறை விழுமியங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆகும். கூர்ப்பினால் மாற்றம் அடையக்கூடிய ஒழுக்கம் சார்ந்த விருப்புக்களும், தொடர்ந்து ஏற்படக்கூடிய, வேற்றுக் கோள்களில் இருந்தான ஆக்கிரமிப்பும் இதற்கான காரணங்களாக அமையலாம் என்பது பொசுட்ரமின் எண்ணம்.

குறிப்புகள்[தொகு]

  1. "The Chicxulub Asteroid Impact and Mass Extinction at the Cretaceous-Paleogene Boundary". சயன்சு. 5 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Nick Bostrom (2008). Global Catastrophic Risks. Oxford University Press. பக். 1 இம் மூலத்தில் இருந்து 2019-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191224110807/http://www.global-catastrophic-risks.com/docs/Chap01.pdf. பார்த்த நாள்: 2014-05-09. 
  3. Nick Bostrom (March 2002). "Existential Risks: Analyzing Human Extinction Scenarios and Related Hazards". Journal of Evolution and Technology 9. http://www.nickbostrom.com/existential/risks.html. 
  4. Weitzman, Martin (2009). "On modeling and interpreting the economics of catastrophic climate change". The Review of Economics and Statistics 91 (1): 1–19. doi:10.1162/rest.91.1.1. 
  5. "Frequently Asked Questions". Existential Risk. Future of Humanity Institute. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  6. Bostrom, Nick. "Existential Risk Prevention as a Global Priority". Existential Risk. Future of Humanity Institute. பார்க்கப்பட்ட நாள் 23 July 2013.
  7. Bostrom, Nick. "Existential Risk Prevention as a Global Priority". Existential Risk. Future of Humanity Institute. பார்க்கப்பட்ட நாள் 21 July 2013.
  8. Bostrom, Nick. "Astronomical Waste: The Opportunity Cost of Delayed Technological Development". பார்க்கப்பட்ட நாள் 21 July 2013.