மனித பரிணாமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனிதப் பரிணாமம்

மனித பரிணாமம் என்பது எளிய தன்மை கொண்ட உயிரிகளிலிருந்து மேம்பட்ட தன்மை கொண்ட உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும். படிமச் சான்றுகளின் மூலம், இப்பரிணாமம் மிகவும் மெதுவாக, பல மில்லியன் ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வாகும் என்பதை அறியலாம்.சூழ்நிலைக் காரணமாக உயிரினங்களின் வேறுபாடுகள் பல சிற்றினப் பரவல்களை ஏற்படுத்தின.

மனிதப்பரிணாமம்[தொகு]

ஏறத்தாழ 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில் உடல் முழுவதும் ரோமங்களுடன் கூடிய கொரில்லா, சிம்பன்சி குரங்குகள் மனித உடலைமப்பைக் கொண்டிருந்தன.

ஹோமோ ஹெபிலிஸ்[தொகு]

3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் போன்ற ஹோமினிட்டுகள் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு வந்தனர். மெதுவாக, இவர்கள் பழங்களை உண்டு வாழ்ந்து, கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர். நான்கு அடி உயரம் உடையவர்கள். நிமிர்ந்த நடை கொண்டவர்கள். இவர்கள் ஹோமினிட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ஹோமோ எரக்டஸ்[தொகு]

1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இவர்கள் மாமிச உண்ணிகளாவர்.

நியாண்டர்தால் மனிதர்கள்[தொகு]

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இவர்கள் தம்மை மறைத்தும், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.

ஆர்க்கி ஹோமோ செபியன்கள்[தொகு]

தெற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிக் கண்டங்கைளக் கடந்து குறிப்பிடத்தக்க இனமாக மாறிய இவர்கள் உறைபனிக்காலத்தில் வாழ்ந்தனர்.

ஹோமோ செபியன்[தொகு]

75,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்கால மனிதர்கள் தோன்றினார்கள். 18,000 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளில் வாழ்ந்தும், வேட்டையாடியும் வாழ்ந்தனர். 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தை அறிந்து, அதனை ஏற்று, தனிக்குடியிருப்புகளை உருவாக்கி வாழும் 'மனிதப்பரிணாமம்' தொடங்கியது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநுால். சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2015. பக். 6-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_பரிணாமம்&oldid=2412180" இருந்து மீள்விக்கப்பட்டது