உள்ளடக்கத்துக்குச் செல்

மனித உரிமை பாதுகாப்பு சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உரிமை பாதுகாப்பு சட்டம் என்பது அரசியலமைப்பு சட்டத்தினால் உறுதிசெய்யப்பட்ட அல்லது நீதிமன்றத்தினால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கை உள்ளடக்கிய வாழ்வு, தன் உரிமை, சமத்துவம், தனி நபர் மாண்பு பற்றிய உரிமைகளை குறிக்கும்.[1]

1993 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு 171 நாடுகள் கலந்துகொண்டு மனித உரிமை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உரிமை ஆணையம் அமைக்கவும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 1993ல் குடியரசுத் தலைவரால் அவசர சட்டம் இயற்றப்பட்டு, பாராளுமன்றத்தால் சட்டம் நிறைவேறி 1994ல் நடைமுறைக்கு வந்தது.

சட்டத்தின் நோக்கம்

[தொகு]

தேசிய மனித உரிமை ஆணையம் உருவாக்குதல், மாநில உரிமை ஆணையம் உருவாக்குதல், மாவட்ட அளவில் நீதி மன்றம் உருவாக்குதல், மனித உரிமைகள் சிறந்த முறைகளில் பாதுகாத்தல், மனித உரிமைதொடர்புடையுடைய விழிப்புணர்வுக்கு வழிவகை செய்தல் போன்றவைகள் .இந்த சட்டத்தின் நோக்கங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மனித உரிமை பாதுகாப்பு சட்டம். ம்னித உரிமைகள் கல்வி நிறுவனம் மதுரை. 2015. p. 33.