மனித உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனித உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு என்பது நேபாளத்தில் உள்ள தனித்து வாழும் பெண்களின் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க செயல்படும் ஒரு அமைப்பாகும்.[1][2][3][4] இதை லில்லி தாபா என்பவர் நிறுவினார். இது 73 மாவட்டங்களிலும், 1550 கிராம வளர்ச்சி குழுக்களிலும் , 100,000 க்கும் மேற்பட்ட தனித்து வாழும் பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.

பின்னணி[தொகு]

முன்னேற்றத்தின் பாதையில் அணிவகுத்து நவீனத்துவத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாட்டில் பாலின பாகுபாடு என்பது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான ஒரு சூழலாகக் கருதப்படுகிறது. சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக உள்ளது மேலும் கடுமையான வறுமை, சமத்துவமின்மை மற்றும் ஓரங்கட்டப்படுதல், ஆகியவை பரவலாகவே காணப்படுகிரது. குறிப்பாக தனித்து வாழும் பெண்கள் என்றால் இது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஆண் ஆதிக்கம் செலுத்தும் சமுதாயத்தின் பழமையான விதிமுறைகளால் நேபாளத்தில் பெண்களின் நிலைமை மோசமாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. 2011 நேபாள மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 5 பெண்களில் 1 பேர், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தங்களது வீட்டில் உள்ளோரால் வன்முறையை அனுபவிக்கின்றனர். திருமணத்திற்கான சட்டபூர்வ வயது 20 ஆக இருந்தாலும், 41% பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். 2015 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமானது மனைவிகளுக்கும் சொத்துரிமையில் சம உரிமையை ஏற்படுத்தியுள்ளது, இதன் மூலம் பாலின பாகுபாட்டைத் தடைசெய்கிறது. இருப்பினும், நேபாள உரிமையியல் நீதிமன்றம் திருமணமாகாத பெண்களுக்குச் சொத்தில் உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்கள் திருமணம் ஆனதும் கணவரின் சொத்தில் பங்கு கேட்பர் என்பதால் இந்த விதி எனக் கருதியதாகக் கூறப்படுகிறது.

குறிக்கோள்கள் [2][தொகு]

கீழ்காண்பவை இதன் குறிக்கோளாக அறியப்படுகிறது.

நேபாள பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சமூக-கலாச்சார, சட்ட, அரசியல் மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவது; வளர்ச்சி, மனிதாபிமானம் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் தனித்து வாழும் பெண்களின் உரிமைகளை பிரதானமாக்குவது;சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் முடிவெடுக்கும் மட்டங்களில் தனித்து வாழும் பெண்களின் பங்களிப்பிற்காக வற்புறுத்துதல் மற்றும் வாதிடுதல்; தனித்து வாழும் பெண்களின் திறன்களையும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதற்கும், மாற்றத்தின் முகவர்களாக மாறி தங்களை முன்னேற்றுவதற்கான பயணத்தில் அவர்களுக்கு உதவுவதும்.

பணிகள்[தொகு]

டபிள்யூ எச் ஆர் அமைப்பானது பெரும்பான்மையாக தனித்து வாழும் பெண்கள் அடங்கியதாக உள்ளது. விதவைகள், காணாமல்போன கணவர்களின் மனைவிகள், விவாகரத்து பெற்றவர்கள், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், அத்துடன் பிரிந்த பெண்கள் போன்ற பெண்களை உள்ளடக்கி இந்த அமைப்பு செயல்படுகிறது. ஒற்றைப் பெண்களுக்கு ஒரு வலுவான குரலைக் கொடுப்பதற்காக WHR பல்வேறு தனித்துவமான முறைகளை உருவாக்கியுள்ளது.

2015 இன் நேபாள பூகம்ப நிவாரண பணிகள்[தொகு]

ஏப்ரல் 25, 2015 அன்று, நேபாளத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, பின் மே 12 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 87,000 க்கும் அதிகமானோர் தங்கள் உயிர்களை இழந்தனர், அவர்களில் பாதி பெண்கள். மேலும், 31 மாவட்டங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 23,500 பேர் காயமடைந்தனர் இதில் 53% பெண்கள். 850,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, அவற்றில் 26% பெண்கள் வீட்டுத் தலைவர்கள். மேலும், 1.4 மில்லியன் பெண்கள் சுகாதார வசதிகள் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, அவர்களில் 93,000 பேர் கர்ப்பமாக இருந்தனர். இந்த நிலநடுக்கம் ஏராளமான வீடுகளை அழித்தது, இதனால் 92% பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கூடாரங்களில் இருந்தனர்.காத்மாண்டுவில் 24.4% பெண்கள் தங்கள் சொத்து ஆவணங்களை இழந்துவிட்டதாகவும், 49% பெண்கள் குடியுரிமை சான்றிதழ்களை இழந்ததாகவும் ஆராய்ச்சி கூறுகிறது.


குறிப்புகள்[தொகு]